மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு இரத்த கையெழுத்து கடிதம் -2010
தமிழக முதல்வருக்கு, எங்கள் எல்லோருடைய உணர்வையும் உருக்கி, ஒரு கடிதமாக அனுப்புகின்றோம். அதில் வேண்டுமானால் எல்லோரும் உங்கள் கண்ணீரையும், வேதனையையும், இதயக் குமுறலையும் வெளிப்படுத்தலாம். அதை அவருக்கு அனுப்புவோம். நிச்சயமாக அவரால் நம் மதச் சுதந்திரத்தையும், நம் வழிபாட்டுரிமையையும் மீட்டுத் தர இயலும் என்று நான் நம்புகின்றேன்.
தமிழக முதல்வருக்கு எங்கள் இரத்தத்தால் கண்ணீர் மடல்
கொள்கையினால் நாத்திகம், ஆத்திகம் என்று மாறுபட்டாலும், பொது வாழ்க்கையின் முதுமையினால், தமிழ்நாட்டில் வாழுகின்ற உங்களை எல்லாம் ஆள வேண்டிய பொறுப்பில் இருப்பதனால், நிச்சயமாக அவர் நம் மனக்குமுறல்களைக் கேட்பார். அதற்குச் செவி சாய்ப்பார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதை வேண்டுமானால் செய்வதற்கு தியானபீடத்திற்கு, தமிழ்நாடு தியான பீடத்திற்கு அனுமதி வழங்குகின்றேன். அதற்கான கடிதத்தையும் தயார் செய்திருக்கின்றோம். அந்தக் கடிதத்தை நானே ஒருமுறை படித்து விடுகின்றேன். அதற்குப் பிறகு என் பக்தர்கள் பட்ட வேதனையை உணர்த்த வேண்டுமென்பதற்காக, கோடிக்கணக்கான என் பக்தர்கள், அன்பர்கள் கண்ணீரை, கண்ணீரை மட்டுமல்ல, இரத்தம் சிந்தி அவர்கள் பட்ட வேதனையை முதல்வருக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காக, கடிதத்தில் நானே என் இரத்தத்தில் கையெழுத்தும், கைநாட்டும் வைத்து அனுப்புகின்றேன். எங்களுக்கு வேறு வழிதெரியவில்லை. தாக்கத் தெரியாதவர்கள் நாங்கள். எங்களைத் தாக்குபவர்களை எதிர்கொள்கின்ற அளவிற்கு பண பலமோ, அரசியல் பலமோ, சட்ட பலமோ, ஊடகத்துறை பலமோ இல்லாதவர்கள் நாங்கள்.
ஜனபலம் எங்களுக்கு இருக்கின்றது. ஆனால், அந்த ஜனங்களுக்கு நாங்கள் தாக்கக் கற்றுக்கொடுக்கவில்லை. அஹிம்சையையும், தாக்குப்பிடிக்கவும் மட்டுமே கற்றுக் கொடுத்து வளர்த்திருக்கின்றேன். அதனால்தான் இவ்வளவு பெரிய மதத் தாக்குதலிலும் சட்டம், ஒழுங்கு சீர்குலையாமல் என் மக்கள் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் எங்கள் உணர்வுகளை தமிழக முதல்வருக்குச் சொல்ல வேண்டுமானால், எங்கள் இரத்தத்தைச் சிந்துவதைத் தவிர வேறு வழி தெரியாததினால், இரத்தக் கையொப்பத்தோடு, கைநாட்டோடு இந்தக் கடிதத்தை அனுப்புகின்றேன். இதை நான் செய்யப்போகின்றேன் என்று சொன்ன அந்த வினாடியிலிருந்து இப்பொழுது வரை, பல ஆயிரக்கணக்கான பக்தர்களும், அன்பர்களும் தங்கள் இரத்தத்தால் கைநாட்டை வைத்து கடிதங்களைச் சமர்ப்பித்து விட்டார்கள்.
இன்னும் சில நாட்களில் லட்சம் இரத்தம் கையெழுத்தும், கை நாட்டும் இட்ட, குறைந்த பட்சம் லக்ஷமாவது இரத்ததக் கையெழுத்தும், கைநாட்டும் இட்ட கடிதங்கள் உங்களை நோக்கி வரும். நேரம் கொடுத்தால், உங்களை நேரில் சந்தித்து நானே அதை அளிப்பதற்கும் தயாராக இருக்கின்றேன். இதற்கு மேலும் என் பக்தர்களும், அன்பர்களும் தங்கள் வாழ்வுரிமைகளை, மதச் சுதந்திரத்தையும் இழந்து தவிப்பது சரியல்ல என்று நான் நினைக்கின்றேன்.
அந்தக் கடிதத்தை உங்கள் எல்லோர் முன்பும் படித்து, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்புவதற்கு முயற்சி செய்கின்றோம்.
தயவு செய்து எங்கள் வாழ்வுரிமையை மீட்டுத்தாருங்கள்
மாண்புமிகு தமிழக முதல்வர், டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, எங்கள் எல்லோருடைய இதயம் கனிந்த வணக்கங்களையும், மரியாதைகளையும் உரித்தாக்குகின்றோம். உலகம் முழுவதும் 197 நாடுகளில் 1 கோடி மக்கள் அன்பர்களாகவும், சீடர்களாகவும், தொண்டர்களாகவும், பக்தர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் நித்யானந்த தியான பீடம், ஒரு மிகப்பெரிய ஆன்மீகத் தொண்டு நிறுவனம், குறிப்பாக பன்னிரெண்டு லட்சம் பேர் தமிழ் நாட்டின் மூலை முடுக்களில் மட்டும் வாழ்கிறார்கள். இவர்களின் குமுறலையும், வேதனைகளையும், புண்படுத்தப்பட்ட மத உணர்வுகளையும், வெறுமனே பழிக்கப்பட்டிருந்தால் கூட, இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து, உங்களுக்கு ஏற்கனவே இருக்கின்ற பலப் பிரச்சினைகளுக்கு நடுவில் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுத்திருக்க மாட்டோம். ஆனால் பழிக்கப்படுவதோடு நிறுத்தப்படாமல், அழிக்கப்படும் நோக்கத்தோடுநாங்கள் மீண்டும் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டால், எங்கள் வாழ்வுரிமையை எங்குச் சென்றுதான் நாங்கள் மீட்டெடுப்போம். 197 நாடுகளில் பரவியுள்ள தியானபீடத்திற்கு ஆயிரக்கணக்கான சத்சங்க மையங்களும், மற்றும் ஆலயங்களும் இருக்கின்றன. அவற்றில் 150 தியானபீட வழிபாட்டுத் தலங்கள் தமிழ்நாட்டில் மட்டும் இருக்கின்றன.
இந்த வருடம் மார்ச் மாதம் இரண்டாம் தேதியிலிருந்து கடந்த ஒன்பது மாதங்களில் 120 தியானபீட வழிபாட்டுத் தலங்கள், சமூக விரோதிகளால், கூலிப்படையினரால் அடித்து, நொறுக்கப்பட்டு, எரிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டைத் தவிர, வேறு எந்த ஒரு மாநிலத்திலும், எந்த ஒரு நாட்டிலும் எங்களின் எந்த ஒரு மையமும் தாக்கப்படவில்லை. தமிழகத்தில் மட்டும்தான் இந்தத் தொடர்தாக்குதல் அரங்கேறிக் கொண்டேயிருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான தமிழ் பக்தர்களின் வாழ்வு நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
சில பிரபல தமிழ்த் தொலைக்காட்சிகளும், சில பிரபல தமிழ் பத்திரிக்கைகளும் திட்டமிட்டு எங்களை அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். பழிக்கிறதென்கிறது பரவாயில்லைங்க ஐயா, மனிதர்களாக வாழும்போது, நீங்கள் எப்பவாவது என்னைப் பழிக்கறதும், நான் அதற்குப் பதில் சொல்றதும் பரவாயில்லை. அஞூணாஞுணூ ச்டூடூ-ஒரே பூமியில் வாழ்கிறோம், பார்த்துக்கும்போது எப்பவாவது ஒருத்தரை ஒருத்தர் பழிச்சுக்கலாம், பேசிக்கலாம் பரவாயில்லை. ஆனால் அதைத் தாண்டி, அழித்தே தீருவோம் என்று ஓட ஓட ஓட ,விரட்டி விரட்டி எங்களை அடித்துக் கொண்டேயிருந்தால், யார்தான் இதற்குப் பொறுப்பு? யார்தான் இதற்குப் பதில் சொல்வது? நாங்களும் எங்கள் அஹிம்ஸை கொள்கையிலிருந்து, திருப்பித் தாக்கமாட்டோம் என்கின்ற கொள்கையிலிருந்து மாறமாட்டோம். இந்த அஹிம்ஸையின் உறுதியினாலேயே இதை எதிர்கொள்வோம். யார்தான் இதற்குப் பதில் சொல்வது? யார்தான் இதற்கு முடிவு வைப்பது? யார்தான் முற்றுப்புள்ளி வைப்பது? யார்தான் இதைக் கேட்பது? எங்களைத் தாக்கும் சமூக விரோதிகள் தாங்களாகவே ஓய்ந்து போவார்கள் என்றுதான் அமைதியாகவே இருந்தோம்.
இனியும் பொறுத்துக்கொள்வது… நீங்கள் ஆளும் இந்த நாட்டில் வாழும் என் மக்களுக்கு, என் பக்தர்களுக்குச் சாத்தியமில்லை என்பதனால், தமிழக முதல்வரான உங்களின் பார்வைக்கு, இந்த மொத்தச் செய்தியையும் நேரடியாக எடுத்துவந்து, உங்களுடைய உடனடி நிவாரண நடவடிக்கைளுக்காகக் காத்திருக்கப் போகின்றோம்.
இப்பொழுது நான் கொடுத்த எல்லாத் தகவல்களையும், நீங்கள் உங்கள் உளவுத்துறையின் மூலமாக வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்ற வேண்டுதலையும் சமர்ப்பிக்கின்றோம்.
நாங்கள் உயிரோடு வாழ உதவுங்கள்
சாதாரண வெறுமனே உங்கள் பெயரை உபயோகப்படுத்தி, எங்களை எல்லாம் தாக்குகின்ற ஊடகங்கள் சொல்லுகின்ற வார்த்தைகளை மட்டும் கேட்காமல் உங்கள் உளவுத்துறை மூலமாக நான் கொடுத்திருக்கும் இந்தப் புள்ளி விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
இதற்குப் பிறகும் எங்களைத் தாக்கும் சமூக விரோதிகளிடமிருந்து, எங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்காது போனால், வேறு வழியே இல்லை, கன்னியாகுமரியிலிருந்து கிராமம் கிராமமாகப் பாதயாத்திரைச் சென்று, வீட்டுப் படியேறி எங்கள் 1200 சந்நியாசிகளோடு, பக்தர்களும் சேர்ந்து நாங்கள் எங்களின் இதய ஓடு ஏந்தி, அன்புப் பிச்சைக் கேட்டு, எங்களுடைய மத வழிபாட்டுச் சுதந்திரத்தை மீட்டு எடுத்துக் கொள்வதுதான் எங்களுக்குத் தெரிகின்ற ஒரே வழி. இப்படிச் செய்தால் மட்டும்தான் நாங்கள் எங்கள் உயிரோட வாழ முடியும்.
மதத்தாக்குதல் இன்னும் எவ்வளவு நாட்கள் பொறுப்பது ??
எங்களுக்கு அடிப்படையான மதச் சுதந்திரம் கூட இல்லீங்க ஐயா.
வீதிகளில் என்னுடைய பக்தர்கள் மாலையோடும், காப்போடும் நடக்க முடியவில்லை. தொடர்ந்து இந்த சில குறிப்பிட்ட ஊடகத் துறையினர் எங்களைச் சித்தரிக்கும் விதமும், பழிப்பதோடு நிறுத்தாமல், அழிக்க வேண்டும் என்ற நோக்கத் தோடு எங்களைப் பற்றி வெளியிட்ட அவதூறுச் செய்திகளைப் படித்துவிட்டுச் சிலர் எங்களுக்குக் கொடுக்கும் தொந்தரவிற்கு அளவே இல்லை. என் மக்களால் வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ முடியவில்லை; என் மக்களால், இளைஞர்களால் பள்ளிக்கும், கல்லூரிக்கும் மாலை, காப்போடு செல்ல முடியவில்லை. இது எங்கள் மதச் சின்னம், இது எங்கள் மத உரிமை.
சீக்கியர்களை தலைப்பாகையைக் கழட்டச் சொல்வதும், இஸ்லாமியப் பெண்களை குர்கா அணியக்கூடாது என்று சொல்வதும் எப்படி அவர்களுடைய மத உரிமையில் தலையிடுவதோ அதேபோல் என் மக்களை மாலை அணியவும் காப்பு அணியவும் தடுக்கும் இந்தப் பள்ளிகளும், இந்தக் கல்லூரிகளும் எங்கள் மத உரிமையில் தலையிடுகின்றன.
எங்கள் மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் மீண்டும் மீண்டும் அடித்து நொறுக்கப்படுகின்றன. கூலிப்படையினரால், நல்லா ஆழமா புரிஞ்சுக்கோங்க, ஒருவேளை பொது மக்கள் தாக்கியிருந்தால் நான் கவலைப்பட்டே இருக்க மாட்டேன். ்மூடிவிடுங்கள் தியான மையங்களைசு என்ற ஒரே வார்த்தையில் முடித்திருப்பேன். ஒருவேளை பொதுமக்கள் தாக்குவார்களென்றால், நிச்சயமாக அவர்கள் உணர்விற்கு மதிப்பளித்திருப்பேன். மாலையிட்ட உங்களுக்குக் கல் எறியவும் உரிமை உண்டு. மலரால் என் மீது சொரிந்த உங்களுக்குக் கல்லால் என்னை அடிக்கவும் உரிமை உண்டு. ஆனால் மாலையிட்டவர்கள் வேறு, கல்லெடுத்து எறியும் கூலிப்படையினர் வேறு, இங்குதான் பிரச்சினையே, மாலையிட்ட சில அன்பர்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் கல் எடுத்து எறியும் கூலிப்படையினரை எவ்வளவு நாள்தான் பொறுத்துக் கொள்வது.
உங்களை நேரில் பார்க்க விரும்புகிறோம்
எங்கள் அமைதியைக் கோழைத்தனம் என்று நினைத்துக் கொண்டு, கேட்பதற்கு ஆள் இல்லை என்று நினைத்துக் கொண்டு இவ்வளவு நாட்கள் இவர்கள் செய்யும் அட்டூழியத்திற்கு பதிலே இல்லையா?
தன் வினை தன்னைச்
சுடும்
ஓட்டப்பம்
வீட்டைச்
சுடும்
ஆன்மீக ரீதியாக அமைதி காத்துக் கொண்டிருக்கும்
எங்களுக்கு யார் தான் எங்களுக்குத்
தீர்வு கொடுப்பார்கள்? நாங்கள் ஓடேந்தி பாதயாத்திரை
சென்றால்தான் வாழ முடியும் என்கின்ற
நிலையை இந்தச் சமூக விரோதிகள்
உருவாக்கி விட்டார்கள். உணர்வு
அளவில் மிகவும்
காயப்பட்டிருக்கும் நாங்கள் இழந்த மதச்
சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் மீட்டுத்தர
தாங்கள் நடவடிக்கை எடுக்குமாறு, அன்போடு தமிழ்நாடு நித்யானந்த
தியான பீடங்களின் சார்பாகவும், அகில உலக நித்யானந்த
தியானபீடங்களின் சார்பாகவும், தமிழ்நாடு அல்லாமல் பல இடங்களிலும் வாழும்
எங்கள் தியானபீட தமிழ் அன்பர்கள் சார்பாகவும்
உங்களிடம் ஆழ்ந்த அன்போடும், பணிவோடும்
விண்ணப்பிக்கின்றேன். இந்த விண்ணப்பத்தை உங்களிடம்
சமர்ப்பிக்கின்றேன்.
இந்தக் கடிதத்தை கோடிக்கணக்கான மக்களின் கண்ணீரோடும், சில லட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தோடும் உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகின்றேன். நேரில் உங்களிடம் வந்து அளிக்க நேரம் ஒதுக்குமாறும் வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்.