சமூகத் தீவிரவாதம்தான் நம் முன்னால் இருக்கும் மிகப்பெரிய எதிரி!
மனிதனை மது மற்றும் போதைக்கு அடிமையாக்கி..
அவன் மனதை சிதைய வைத்து,
கொலை, கொள்ளை, கூட்டுக்கற்பழிப்பு போன்ற வன்மமான செயல்களை ஈடுபட அவனைத் தயாராக்கி,
சமூகவிரோதியாக மட்டுமல்லாமல் சமூக தீவிரவாதியாக மாற்றி மனித இனத்தின் மீது ஏவுவதுதான் சமூகத் தீவிரவாதம்!
நன்றாக கண்திறந்து பாருங்கள், உங்கள் முன்னால் கோடிக்கணக்கான சமூக தீவிரவாதிகள் உருவாகிக் கொண்டிருப்பதைப் பாருங்கள்!
யார் காரணம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
விழித்துக்கொள்ளுங்கள் மக்களே!
இதை எல்லாம் உங்களுக்குச் சொல்வேன் என்பதற்காகத்தான், சொல்கிறேன் என்பதற்காகத்தான்,
என்னை சமூக விரோதியாக காட்ட முயற்சிக்கின்றார்கள்.
ஆபத் சன்யாசம் – சமூகப் பொறுப்பு
யாரெல்லாம் இந்து மதம் தன் உயிர் என்று நினைக்கின்றீர்களோ.. இந்த மனித இனம் தன் உயிர் என்று நினைக்கின்றீர்களோ…
இந்த மனித இனம் இந்து மதத்தின் உயிர் போய்க்கொண்டிருக்கின்றது.
விழித்துக்கொள்ளுங்கள்…
ஆபத் சன்யாசம் பரமசிவ சேனையின் பாகமாக மாறி இந்து மதத்தை இந்த மனித இனத்தைக் காப்பாற்றுவோம் வாருங்கள்! உங்கள் கேர்ள் பிரண்டு, பாய் பிரண்டு, சுய நலக்கருத்துக்கள், கொள்கைகள் இதெல்லாம் நாளைக்கு உங்களையேக்கூட காப்பாற்றாது.
உடனடியாய் உங்களைக் காக்கவும், மனித இனத்தைக் காத்திடவும், உலகை காக்கவும்,
சில லட்சம் பேராவது ஆபத்சன்யாசம் எடுத்து பரமசிவ சேனையின் பாகமாக மாறி,
பரமசிவ ஞான சத்தியங்களை வாழ்ந்து உலகிற்கும் தந்தாகவேண்டிய போர்க்காலம் வந்துவிட்டது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்..
இப்பொழுது நடந்துகொண்டிருப்பது போர்.
சமூகத்தின் சமநிலை காப்பாற்றப்பட வேண்டுமானால்,
சில லட்சம் பேராவது பரமசிவ ஞானத்தை வாழவேண்டும்.
மற்றவர்களை வாழ வைக்க வேண்டும்.
புதிதாக சில லட்சம் பேராவது இந்த ஞானத்தை வாழ்வதற்காக ஆபத் சன்யாசம் எடுக்கனும்..
இது சமூக சேவை அல்ல – சமூகத்தின் தேவை!
ஆபத் சன்யாசம் என்றால் என்னவென்றால், யாரெல்லாம் தன் உயிர் போகிறது என்று நினைக்கிறார்களோ அவர்களெல்லாம் அதிலிருந்து தப்பித்கொள்வதற்காக எடுத் துக்கொள்வது ஆபத் சன்யாசம்..
ஆதிசங்கரர் முதலில் ஆபத் சன்யாசம்தான் எடுத்துக்கொள்கிறார்.
முதலை அவர் காலைக் கவ்வி விடுகின்றது. எனவே உயிர் போகப்போகின்றது! சன்யாசியாகவாவது உயிர் போகட்டும் என்று ஆபத் சன்யாசம் எடுத்துவிடுகின்றார்.
ஆபத் சன்யாசம் – நாட்டைக் காப்பாற்ற வேண்டிய அடிப்படை தேவை! மக்களே விழித்துக்கொள்ளுங்கள்! உங்கள் உயிரின் நோக்கத்தை உணர்ந்து வாழ்வில் உங்களை நீங்களே உயர்த்திக்கொள்ளுங்கள்!
உங்களுடைய அடுத்த தலைமுறை, கற்பழிக்கப்படாமல், சொத்துக்களும், வீடும், சுரையாடப்படாமல், நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழவேண்டும் என்றால்கூட…
வீட்டிற்கு ஒருவராவது பரமசிவ சேனையின் பாகமாக மாறி இந்த ஞானத்தை உள்வாங்கி,
உலகத்திற்குப் பரப்புகின்ற இந்த செயலில் ஈடுபடுங்கள். நான் சொல்வது வெறும் சமூக சேவை அல்ல! இப்பொழுது இந்த சமூகத்தின் அடிப்படைத் தேவை!
அனைவரும் இந்த பரமசிவக்ஞான சத்தியங்களை உங்கவாங்கி அதை உலகத்தோடு பகிர்ந்துகொள்கின்ற இந்த செயலில் ஈடுபட்டால் மட்டும்தான் அடுத்த தலைமுறைக்கு ஆபத்து இல்லாத ஒரு அமைதியான சமூகத்தை நாம் விட்டுச் செல்வோம்.
சன்யாசத்தில் தோல்வியுற்றால்??
சிலபேர் சொல்வது உண்டு..
நிறைய பேர் எடுத்தார்கள் சன்யாசம்.
தோல்வியடைந்துவிட்டார்கள்.
நானும் அதுபோல் ஆகிவிடக்கூடாது இல்லையா?
அப்போ லட்சக்கணக்கானபேர் கல்யாணம் செய்து கொண்டு விவாகரத்து ஆகிறார்கள்…
நீங்களும் அதுபோல் ஆகிடக்கூடாதல்லவா?
பிறது ஏன் திருமணம் செய்துகொள்கிறீர்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்…
சிலர் என்னிடம் வந்து மிக தர்க்கத்துடன் சொல்வதுண்டு…
மிக லாஜிக்காக.. “சாமி நிறையபேர் சன்யாசம் எடுத்துட்டு விட்டுட்டு போயிடறாங்கல்ல, அந்த மாதிரி நானும் பெயிலாயிடக்கூடாது. அதனால்தான் சன்யாசம் எடுக்காம இருக்கிறேன்” என்று.
எத்துணை ஆயிரம்பேர் சன்யாசம் எடுத்தார்கள்.
அதில் எத்துணை ஆயிரம்பேர் தோல்வியுற்றார்கள் என்ற விகிதத்தைப் பாருங்கள்.
சன்யாசத்தில்,
ஆயிரத்தில் ஒருவர்தான் தோல்வியடைகின்றார்கள்.
ஆனால் திருமணத்தில் பார்த்தீர்களென்றால்.. நூற்றிற்கு 30 பேர் தோல்வியடைகின்றார்கள்.
100 பேர் திருமணம் செய்துகொண்டால் 33 சதவிகிதம் விவாகரத்தாகிறார்கள்.
அப்படியென்றால், அயிரம் பேர் சன்யாசம் எடுத்தால் ஒருவர்தான் தோல்வியடைகின்றார்கள். திருமணத்தில் ஆயிரம் பேர் திருமணம் செய்துகொண்டால் 330 பேர் தோல்வியடைகின்றார்கள். அப்பொழுது பகுத்து அறிந்து பார்த்தோமானால் சன்யாசத்தைவிட கல்யாணம்தான் தோல்வித்திட்டம்.
நீங்கள் தோல்வியைக் கண்டு பயந்தால் திருமணம்தான் செய்துகொள்ளக்கூடாது!
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்..
குரு எங்க வலிக்கப்போகுதோ அதைச்சுட்டிக்காட்டுவாரு..
கேட்கவில்லையென்றால், வாழ்க்கை எங்க வலிக்குமோ அங்கு அடிக்கும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. இப்பொழுது நான் எங்கு சுட்டிக்காட்டுகின்றோனோ.. அங்கு வலிக்கப்போகிறது என்று புரிந்துகொண்டு விழித்துக்கொண்டால் உனக்கு நல்லது. இல்லையென்றால் வாழ்க்கை சரியாக அங்கேயே அடிக்கும். வாழ்க்கை அடிக்கும்பொழுது தப்பிக்க முடியாது. முடிஞ்சிப்போச்சு.. TOO LATE.
TO LET – இருக்கும்பொழுதே சன்யாசம் எடுத்துக்கோ, அவ்வளவுதான்!
TO LET – சன்யாம் எடுத்தா வாழ்க்கை நல்லா இருக்கும். இல்லைனா..
TOO LATE வாழ்க்கைப் போயிடும்.. பிறகு TOILET ஆகிட்டு இருக்கும் வாழ்க்கை.
அவ்வளவுதான்! சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்!
கேட்டு மாறுவதா? இல்லையா? என்று அவரவர் முடிவு செய்துகொள்ளுங்கள்!
ஞானச்சங்கை ஊதிவிட்டேன்! கேட்டால் கையிலாய பதவி!
புறப்படு பரமசிவ சேனையே!
புறப்படு! ஹரஹர மகாதேவ்!
ஹரஹர மகாதேவ்!
ஹரஹர மகாதேவ்!