‘உங்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது’ என்று கண்டுபிடிக்க ஆசையா?

ஆச்சரியமானாலும்  இது உண்மையே...

டீ குடிப்பதிலிருந்து டீவி பார்ப்பது வரை எதுவுமே உங்களின் முடிவுபடி நடப்பதில்லை ஏன்? இந்த கட்டுரையை நீங்கள் படிப்பதுகூட நீங்கள் இப்போது முடிவெடத்து செய்வதல்ல. ஏற்கனவே எடுத்த பல முடிவுகளின் கூட்டுத்தொகையாகத்தான் இப்புத்தகமே உங்களின் கையிலிருக்கிறது.
பல புத்தகங்களின் நடுவே இதை தேர்ந்தெடுக்க காரணமாய் இருந்த உங்களின் எண்ணம், தேவை அநேக கட்டுரைகளின் நடுவே இந்த கட்டுரையை உங்களை பழக வைக்க காரணமாய் இருக்கும் உங்களின் ஆர்வம், குணம்.

இப்படியெல்லாம் செய்வதற்கு நேரத்தையும் ஒய்வையும் தரும் உங்களின் வாழ்க்கை முறை, சமூகநிலை ஆகிய அனைத்தும் ஒன்றாய் சேர்ந்துதான் இந்த கட்டுரையை உங்களாள் படிக்க வைத்திருக்கிறது. 

மேற்சொன்ன காரணங்களின் ஒன்றிரண்டு மாறியிருந்தால்கூட வேறு புத்தகத்திலுள்ள வேறொரு கட்டுரையை வேறு எங்காவது அமர்ந்து படித்துக் கொண்டிருந்திருப்பீர்கள்.

நிகழ்காலம் என்பது இறந்தகால அனுபவங்களின் கூட்டுத்தொகை 
எதிர்காலம் என்பது நிகழ்கால அனுபவங்களின் கூட்டுத்தொகை.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான முடிவுகளை ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொண்டேயிருக்கின்றீர்கள். இந்த முடிவுகள்தான் உங்களின் எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கின்றன.

இறந்தகால வாழ்வில் எடுத்த முடிவுள் தான் எதிர்கால வாழ்வின் வடிவத்தையே நிர்ணயிக்கின்றன - எனும் உண்மையை உணர்த்தும் ஒரு அருமையான கதை.

இரு ககோதர்கள் ஜென் குருவை சந்தித்தார்கள்

மிகுந்த ஆர்வத்தோடு இருவரும் குருவிடம் கேட்டார்கள் -எங்களின் எதிர்காலத்தை சொல்லுங்கள். அது எப்படியிருக்கும்?

குரு சொன்னார், -வேண்டாம்ப்பா, எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்வது அவ்வளவு நல்லதாக  போய் முடியாது. எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்வதனாலேயே அது மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறது. எதிர்காலத்தை நல்லவிதமாய் அமைக்க உழைக்கலாம் அது நல்லதில் போய் முடியும்- எதிர்காலத்தை தேரிந்துகொள்ளும் முயற்சி வேண்டாம்- 
ஆனால் அவர்கள் விடுவதாய் இல்லை. மிகவும் பிடிவாதமாய் கேட்டார்கள். எனவே ஜென் குரு சொல்லிவிட முடிவு செய்தார்.

மூத்த சகோதரனை பார்த்து - இன்னும் ஒரே வருடத்தில் நீ அரசனாகிவிடுவாய்- இளைய சகோதரனை பார்த்து -இன்னும் ஒரு வருடத்தில் நீ கொலை செய்யபடுவாய்.

மூத்த ககோதரன் மிகுந்த மகிழ்ச்சியோடு குதித்தார். இளைய சகோதரன் நிற்கமுடியாமல் அங்கேயே மயங்கி விழுந்தார். 

இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தது. அப்போது குரு சொன்னார் - நான்தான் அப்போதே சொன்னேனே எதிர்காலத்தைப்பற்றி தெரிந்து கொள்வதெல்லாம் அவ்வளவு நல்லதில் முடியாதென்று-

அன்றிலிருந்து மூத்தவர் கற்பனைகளிலேயே கொடிகட்டி பறந்தார். தன்னுடைய அரச வாழ்வு எப்படியிருக்கும்? எப்படியெல்லாம் வாழலாம்? என்ற கனவிலேயே நாள் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்தார்.

இளையவர் அன்றிலிருந்து மிகுந்த ஜாக்கிரதையோடு நடந்துகொள்ள ஆரம்பித்தார். ஒவ்வொரு நபரோடும் மிகுந்த கவனத்தோடும் விழிப்போடும் நடந்தகொள்ள ஆரம்பித்தார்.
பதினோரு மாதங்கள் கழிந்தது இளைய சகோதரன் மூத்த சகோதரனை தன் இல்லத்திற்கு அழைத்திருந்தார். அங்கு வந்த மூத்த சகோதரன் -என்னுடைய அரண்மணைக்கு ஒரு பெரிய நிலம் பார்க்க வேண்டும். அரண்மனை இப்படி வேண்டும்- என்று பேசிக்கோண்டிருந்தார்.

கடைசியில் சிறிது காட்டோடு கூடிய பெரிய நிலத்தை பார்க்க இருவரும் சென்றார்கள் அங்கு நடக்கும் போது மூத்த சகோதரன் கால் தடுக்கி விழுந்தார். புதைக்கப்பட்ட ஒரு பானை. பானையை திறந்து பார்த்தால்… அது முழுக்க முழுக்க வைர வைடுரியங்கள் நிறைந்த புதையல்-

மூத்த ககோதரன் சத்தமிட்டு சந்தோஷமாக குதிக்க ஆரம்பித்தார் எனக்கு புதையல் கிடைத்துவிட்டது. நான் அரசனாகப் போகிறேன்- என்று அவர் போட்ட சத்தம் அங்கு ஒரு புதருக்குள் பதுங்கியிருந்த திருடன் காதில் விழுந்தது.

-ஆஹா, நல்ல வேட்டை என்று அவர்களை தாக்கி புதையலை அபகரிப்பதற்காக திருடன் ஆயுதத்தோடு குதித்தான். ஏற்கனவே மிகுந்த ஜாக்கிரதையோடு வாழ்ந்து கொண்டுருந்த இளையை சகோதரன் நோடிக்குள் அங்கு நடப்பதை உணர்ந்து தன்னுடைய அண்ணனை திருடனின் தாக்குதலிருந்து காப்பாற்றினார். காப்பாற்றும் போது, திருடன் அடித்த அடியில் இளைய சகோதரனின் கை உடைந்தது.

அதற்குள் அருகேயுள்ள பாதை வழியாக ஒரு கூட்டம் பிரயாணமாய் வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த திருடன் அங்கிருப்பது அதற்குமேல் ஆபத்து என்று பூமிக்குள் இருந்த பாணையிலிருந்து இரண்டு கைகளுக்குள் அடங்குமளவுக்கு வைரங்களை எடுத்துக்கொண்டு தப்பித்து ஓடிவிட்டான். கண்டுபிடித்த புதையலை நல்ல செல்வத்தோடு நன்றாய் வாழ்ந்தார்கள். ஆனால் மூத்த சகோதரன் அரசனாகவும் இல்லை, இளைய சகோதரன் இறக்கவும் இல்லை.

ஜென் ஞானியிடம் ஒரு வருடம் கழித்து இருவரும் சென்றார்கள் இப்போது இளையவர் மிகுந்த சந்தோஷத்தோடும், மூத்தவர் வருத்தத்தோடும் அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

நடந்ததையெல்லாம் கேட்டறிந்த ஜென் ஞானி, -நான் தான் அப்போதே சொன்னேனில்லை எதிர்காலத்தை தெரிந்து கொள்வதாலேயே அதன் போக்கை மாற்றிவிடுவீர்கள் என்று-

அரசனாவது பற்றி கனவு கண்டதிலேயே நீங்கள் நேரத்தையெல்லாம் வீனாடித்துவிட்டீர்கள். அதனால்தான் அரசனாவதற்கு தேவையான வாழ்க்கை சூழல்களையும் புத்திதானமும் உங்களைச் சுற்றி உருவாவதை தவறவிட்டு விட்டீர்கள். உங்களிடம் மரணத்தை பற்றி எச்சரிக்கை இருந்தது அதனால் மிகுந்த விழிப்புணர்வோடு தொடர்ந்து வாழ்ந்தீர்கள்.

எனவே விதிப்படி உங்களுக்கு நேர வேண்டிய மரணமானது வெறும் கை முறிவோடு நின்றுவிட்டது. நீங்கள் அரசனாகமல் போனதற்கு காரணம் வாழ்க்கையை பற்றிய பொருப்புணர்வு சிறிது இல்லாமல், கனவிலேயே வாழ்வை வீனடித்ததுதான்.

நீங்கள் தப்பித்து மரண கண்டத்தை தாண்டியது, மிகுந்த பொருப்புணர்வோடு உங்களையும் அறியாமலே நீங்கள் உங்களின் வாழ்வில் கொண்டுவந்த விழிப்புணர்வால்தான். தியானத்தால்தான்.- என்று சொல்லி முடித்தார்.

இருவரின் இப்போதைய வாழ்வையும் நிலையையும் இதற்கு முன் அவர்கள் வாழ்ந்த வாழ்வின் போக்குதான் நிர்ணயித்திருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முடிகின்றதா?

இன்றைய நம் வாழ்வும், அதில் நாம் செய்யும் செயல்களும் நாம் இப்போது எடுக்கும் முடிவுள் அல்ல. இந்த முடிவுகளை நம்முடைய இறந்தகால வாழ்வுமறைதான் நிர்னயிக்கின்றது… என்பதை புரிந்துகொண்டாலே இன்னொரு இனிய வாழ்வியல் சத்தியம் புரியவரும்.

அது… இன்றைய வாழ்வை மாற்றியமையமைப்பதனாலேயே எதிர்கால வாழ்வை மாற்றியமைக்க முடியும் என்பதே அது.

உங்கள் கையிலிருக்கும் நிகழ்காலத்தை திருத்தினால், எதிர்காலத்தையே திருத்தி எழுத முடியும்.

தியானம்

உங்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது? என்று கண்டுபிடிக்க ஆசையா?

நிகழ்காலத்தை ஆய்வு செய்யுங்கள்… எதிர்காலத்தின் உருவம் தயார் என்ன மாதிரியான எண்ணங்கள், எந்த மாதிரியான உணர்வுகள் உங்களை இப்போது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன என ஆராயுங்கள். இந்த அச்சிலிருந்துதான் எதிர்காலம் உருவாகப்போகின்றது.

மனமானது குழப்பமான எண்ணங்களால் இருந்தால் எதிர்காலம் குழப்பமானதாய்தான் இருக்கப் போகின்ளது.

உணர்வானது ஆனந்த மயமானதாக இருந்தால் எதிர்காலம் நிச்சயம் ஆரோக்ய மயமானதாகத்தான் இருக்கப்போகின்றது.

எனவே, நிகழ்கால எண்ணங்களையும், உணர்வுகளையும் சீர்படுத்துங்கள், எதிர்காலம் தன்னால் சீராகும்.

நிகழ்காலத்தை ஆனந்தமாக்குங்கள், ஆரோக்யம் நிறைந்ததாக்குங்கள்.
எதிர்காலம் எதிர்பார்த்ததை விட பெரிய சாதனையாக மலரும்.

1 thought on “‘உங்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது’ என்று கண்டுபிடிக்க ஆசையா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்