குருவை அடைவது கர்மத்தினாலா? அல்லது தனி மனித முயற்சியாலா?

கேள்வி:

என்னுடைய வாழ்க்கையில  எனக்கு உங்களைப் பார்த்த மாத்திரத்தில், எனக்கு ஆன்மத் தேடுதல்வந்து நான் உங்களைக் குருவென்று ஏற்றுக்கொண்டேன்.  குருவை அடைவது கர்மத்தினாலா? அல்லது தனி மனித முயற்சியாலா?  அல்லது அவன் அருளால் அவன்தாழ் வணங்கி என்கின்ற மாதிரி் குருவின் அருளாலா?

சுவாமிஜி:

அடுத்தது நீ கேட்ட கேள்வியம்மா,  உன்னுடைய வாழ்க்கையில நடந்த நிகழ்ச்சியை மேற்கோளாகக் காட்டி, நான் பார்த்தவுடன் எனக்கு ஆன்மீகத் தேடுதல் எழுந்தது.  குருதான் வாழ்க்கையென பிடித்துக் கொண்டேன்.  குருவை அடைவது கர்மத்தினாலா? முற்பிறவிப் பயனாலா அல்லது தன் முயற்சியாலா?   உண்மையில் பார்த்தால் இந்த மூன்றினாலும் அடையப்படுகிறார்கள்.  சிலபேருக்கு புர்வஜென்மத் தொடர்பு இருந்து, அந்த தொடர்பைத் தொடர்ந்து வருவதானால். அடைகின்றார்கள்.  ரொம்பக் குறைந்தளவு.  மிக மிகக் குறைந்த எண்ணிக்கை.  இரண்டாவதாகத் தன்னுடைய வாழ்க்கையிலே பல்வேறு விதமான துக்கங்கள். துன்பங்கள், துயரங்கள், இவற்யையெல்லாம் பார்த்ததினால் ஏற்பட்ட விரக்தி.

கைவல்ய நவநீதம் என்ற அருமையான தமிழ் வேதாந்த நூல் சொல்லும். 

ஆனவி மனைவி மக்கள் அத்தவீடு அனைக்கண் மூன்றும்
கானவர் வலையில்பட்டு கைதப்பி ஒடும் மான்போல்
போனவன் வெறும்கையோடே போகாத வண்ணம் சென்று
ஞான சற்குருவைக் கண்டு நன்றாக வணங்கினானே. 

ஆனவி, மனைவி மக்கள் இந்தப் பல்வேறுவிதமான பந்தங்களிலே சிக்கி,  பல்வேறு விதமான துக்கங்களைப் பார்த்து, ஒரு வேடனுடைய வலையிலே சிக்கி ஆனால் ஏதோ ஒரு மான் ஏதோ ஒரு காரணத்தால் தப்பிவிட்ட மான் என்ன வேகத்தோடு அங்கிருந்து ஓடுமோ அந்த வேகத்தோடு ஆனவி மனைவி மக்கள் அத்தவீட அனைக்கண் மூன்றும் கானவர் வலையில் பட்டு கைதப்பி ஓடும்மான்போல்,  அந்த வேகத்தில் ஓடி போனவன் வெறுங்கையோட போகாத வண்ணம் ஞான சற்குருவைக் கண்டு நன்றாக வணங்கினானே. 

ஆனவி, மனைவி, மக்கள், அர்த்தம், வீடு அனைக்கண்.  இவைகள் எல்லாவற்றினுடைய எரிப்பு.  ஒரு மனிதனைத் துக்கம்,  துயரம், போன்றவைகளால் தகித்து, விரக்தியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றால், அவனால் குருவை அடையாளம் கண்டு, சரணடைந்து,  வாழ்க்கையின் குறிக்கோளைத் தெரிந்து கொள்ளும் பக்குவத்தை அடைந்து விடுகின்றான். 

இன்னும் சிலபேர் தங்களுடைய வாழ்க்கையிலே எந்தவிதமான துக்கமும், பிரச்சினையும் இல்லை. ஆனால் இருக்கின்ற வாழ்க்கை வாழ்க்கையின் நிரந்தரம் அற்ற தன்மை, குருவினுடைய சதாசிவ நிலை, சதாசிவ இருப்பு, சதாசிவ சக்திகளின் வௌிப்பாட்டைக் கண்டு, ஆகா! வாழ்க்கை இப்படியல்லவா இருக்க வேண்டும், இவரோடு அல்லவா இருக்க வேண்டும் என்கின்ற உத்வேகத்தின் காரணமாக தான் இருக்கும் நிலையின் நிலை அற்ற தன்மையும், கலை அற்ற தன்மையும், இதைப் புரிந்துகொள்வதனால் குருவைக் கண்டுபிடிப்பவர்களும் உண்டு.  நீ கேட்ட மூன்றும் கர்மம், வினைப்பயன், தேடுதல், தன்முயற்சி, இவைகளினாலும், குரு தேடப்படுகின்றார். அடையப்படுகின்றார். 

அடிப்படையாக ஒரு மனிதனுக்கு ஆழமான ஒரு தேவை இறுதி வாழ்க்ககையின் இறுதி நோக்கமான நம்முடைய சாத்தியக்கூறுகள் எல்லாம் மலர்ந்து முடிகின்றவரை ஒய்வு கொள்ளாது இருத்தல். 

நாம் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோமோ நம்முடைய சாத்தியங்கள், சக்திகள். (POSSIBILITIES AND POWERS)  சாத்தியங்களையும், சக்திகளையும் வௌிப்படுத்தி முடிக்கின்றவரை ஓய்வெடுக்காது இருத்தல் என்ற ஒன்றைமட்டும் மனிதன் பற்றிக்கொள்வானேயானால், குரு நம்மைத்தேடி வருவார் – ஒன்று.் நம்மைத்தேடி அவர் வரும்பொழுது நாம் அவரை கண்டுகொள்வோம் என்பது மற்றொன்று.  இரண்டுமே நடந்திடும். 

பீரங்கியில் நெருப்பு வைத்த வினாடியே பீரங்கி வெடிக்கின்றது.  அதற்குப் பீரங்கி தயார்படுத்தப்படுகின்றது.  மருந்தால் நிறைக்கப்பட்டு, வெடிமருந்தும் கரித்தூளும் வைத்து இடிக்கப்பட்டு, தயார்செய்யப்படுகின்றது. அதேபோல, நம்முடைய உணர்வும், உன்னுடைய அனுபவத்தைச் சொல்லுகின்றேன். இப்ப வந்து உன்னுடைய அனுபவத்த சொன்னமா…

பார்த்தவுடனேயே தாரைதாரையாகக் கண்களில் கண்ணீர் பெருகி இவர்தான் என்குருவென்று உணர்ந்தேன்.  என்னுடைய ஆன்மீகத் தேடுதல் மலர்ந்தது.  நீ ஏற்கனவே உள்ளுக்குள் இருந்த அனுபவத்தை ஒருவினாடி தொட்டவுடன் அது மலர்ந்துவிட்டது.  இது எல்லோருக்கும் நடப்பதில்லை.  ஏனெனில், தயாரிக்கப்பட்ட பீரங்கிதான் வெடிக்கும்.  தயாரிக்கப்படாத பீரங்கி வெடிப்பதில்லை.  அதேபோல, எந்த மனிதன் தேடுதல் என்கின்ற வெடிமருந்தை வைத்து, தன்முயற்சி என்கின்ற கரித்தூளும் சேர்த்து மீண்டும், மீண்டும், மீண்டும் குறிக்கோளில் இருந்து மாறாமல் இருக்கின்ற நேர்மையால் இடிக்கப்பட்டு, தயாராக இருக்கின்ற  பீரங்கிதான் குருவின் தீட்சையெனும் நெருப்புப் பட்டவுடன், பிரச்சார பீரங்கியாக மாறுகிறது.

குரு சிஷ்ய சம்பிரதாயம் சனாதன இந்து தர்மத்தின் ஆணிவேர். 

தமிழும் சைவமும் இந்தக் குரு சிஷ்ய சம்பிரதாயத்தில் மட்டும்தான் உயிரோடு இருந்தது, உயிரோடு இருக்கின்றது, உயிரோடு இருக்கும். 

Full Video Link:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்