செல்வ வளத்திற்கு மதம் உதவுகிறது -ஆராய்ச்சி கட்டுரை

அமெரிக்கர்களின் செல்வ வளத்திற்கு மதம் உதவுகிறது
ஆய்வில் தெரிய வந்தவை

செல்வவளத்திற்கு மதம் எப்படித் துணை புரிகிறது என்பது குறித்து அமெரிக்காவில் செய்யப்பட்ட தேசிய அளவிலான ஆய்வில் தெரிய வந்த உண்மைகள் :

கொலம்பஸ் ஒஹியோ – அமெரிக்கர்கள் எந்தளவு சொத்து சேர்க்கிறார்கள் என்பதில் மத சார்புக்கு வலிமையான பங்கு இருக்கிறது.

யூதர்கள் அதிக அளவிலும் பழமைவாத ப்ரோட்டஸ்டன்ட்கள் குறைந்தளவிலும் இவர்கள் இருவருக்கும் இடையில் சராசரியாக பிரதான ப்ராட்டஸ்டன்களும், ரோமன் கத்தோலிக்கர்களும் சொத்தை சேர்க்கிறார்கள் என ஆய்வு கூறுகிறது.

மத சேவைகளில் இடைவிடாது தொடர்ந்து செயலாற்றும் மக்கள் அப்படி அல்லாதோரை விட அதிக அளவில் சொத்து சேர்க்கிறார்கள்.

சொத்தை நிர்ணயிக்கும் வாரிசுரிமை, கல்வித் தகுதி போன்ற பல காரணிகளையும் விட மதத்தின் தாக்கம் தான் இதில் வலுவுள்ளதாக இருக்கிறது.

இதுவரை கவனத்தில் கொள்ளப்படாத மதம் என்ற கருத்து சொத்துக் குவிப்பில் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது என்று ஒஹியோ மாகான பல்கலைக்கழக இணைப் பேராசிரியராகவும் இந்த ஆய்வின் ஆசானாகவும் இருக்கும் லிசா கெய்ஸ்டர் கூறுகிறார்.

ஆய்வின் மற்ற முடிவுகள் பின்வருமாறு

குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கப்படும் விஷயங்கள் யூத குடும்பங்களிலும் பழமைவாத ப்ராட்டஸ்டன்டகள் குடும்பங்களிலும் வித்தியாசமாக உள்ளன. சொத்து சேமிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது வெறும் ஏதோ ஒரு மதத்தை சார்ந்திருப்பது மட்டுமல்ல மத சேவைகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் அதிக செல்வத்துடன் உள்ளனர்.

நமது குடும்பங்களில் போதிக்கப்படும் மத நம்பிக்கைகள்தான் அவர்கள் வளர்ந்ததும் அவர்களின் கல்வி சாதனைகளாகவும் தொழில் வேலை வாய்ப்புகளாகவும் பொருளரார கல்வியாகவும் சமூக தொடர்புகளாகவும் மற்றும் பல காரணிகளாகவும் மாற்றமடைந்து பிற்காலத்தில் அவர்களை செல்வ அதிபதிகளாக ஆக்குகின்றன.

குறிப்பாக யூதர்ககளின் மதச்சட்டங்கள் செல்வ சம்பாத்தியம் சார்ந்த நம்பிக்கைகளை வளர்த்து கொள்ள உதவுகின்றன.

பழமைவாத ப்ராட்டஸ்டன்ட்களும் வாழ்க்கைக்குப் பின்னால் வரும் நற்கதி, பலா பலன்களைக் கருதி வாழும் போதே சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

மாறாக யூதர்கள் வாழ்க்கைக்கு பின் வரும் நற்கதியை பற்றிக் கருத்தில் கொள்ளாமல், சொத்து சேர்ப்பதிலும், ஊதியம் அதிகம் வரும் வேலை வாய்ப்புகளிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். பிரதான ப்ராட்டஸ்டன்ட்களுக்கும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் இடையே இருந்த வித்தியாசம் முற்றிலும் மறைந்து போய் பொருளாதார ரீதியில் மற்றவர்களைவிட சராசரியாக உள்ளனர்.

(ஏ).மதக் கோட்பாடுகள் செலவின மற்றும் சேமிப்பு யுக்திகளின் மீது பல வழிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது.

(பி). செல்வ செழிப்பிற்கு காரணமாயிருக்கும் பல காரணிகளுள் மதமும் ஒன்று ஆகும் செல்வ வளத்தை பற்றி ஆராயும் போது மதம் வெளிப்படையான காரணியாக தெரிகிறது. பொருளாதாரம் செல்வவளத்தை விவரிக்கும் எந்த ஒரு மாதிரி விளக்கத்திற்கும் மதம் பொருந்தி போகிறது. இதை நீங்கள் புறக்கணிக்க முடியாது.

வெறும் ஒரு சதவீத யூதர்களே வாழ்க்கை முழுவதும் வறுமையில் வாழுகிறார்கள். அதே சமயத்தில் 15 சதவிகித பழமைவாத ப்ராட்டஸ்டன்களும் 9 சதவிக பிரதான வகை ப்ராட்டஸ்டன்களும் மற்றும் 7 சதவிகித கத்தோலிக்கர்களும் இவ்வாறு சொத்தின்றி வறுமையில் வாழ்கின்றார்கள்.

யூதர்கள் எப்படி குழந்தைகளுக்கு மத நம்பிக்கைகளுடன் செல்வ வளத்தை அடைய கற்றுக் கொடுக்கிறார்களோ அதை நாமும் மற்ற குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து செல்வ வளத்தை பெருக்க உதவி புரியலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்