தர்மபுரம் ஆதீனம் குருமஹாஸன்னிதானம்
தர்மபுரம் ஆதீனம் குருமஹாஸன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சர்ய ஸ்வாமிகள் பரிபூரணம் அடைந்தார்கள்.
95 ஆண்டுகள் சந்யாச வாழ்க்கை வாழ்ந்து, 49 ஆண்டுகள் சந்நிதானமாக இருந்தார்!
எனக்கு சமய தீக்ஷை , விசேஷ தீக்ஷை அளித்த 230 வது தொண்டை மண்டல ஆதீனத்திற்கு ஆச்சர்ய அபிஷேகம் செய்தவர் தர்மபுரம் சன்னிதானம் அவர்கள். அதனால் அவர் என் குருவிக்கு குரு, எனக்கு பரமகுரு உங்களுக்கு பராபர குரு! எனக்கு பரமகுருவாகவும், உங்கள் எல்லோருக்கும் பராபர குருவாகவும் இருப்பவர் குருமஹாஸன்னிதானம்
மிகுந்த தவமும், சைவத்தொண்டும் ஆற்றி, அவர் செய்த சேவைகள் அளப்பரியது, சொல்லற்கு அறியாது, அவருக்கு என் பக்தியையும், மரியாதையையும் சமர்ப்பிக்கின்றேன்!
பராமப்பொருள் பரமசிவத்தோடு ஒன்றி இருந்து, நம்மையும் பரமசிவத்தோடு ஒன்றியிருக்க அருள் புரியுமாறு குருமஹாஸன்னிதானத்தை பிரார்த்திக்கின்றேன்!






