சாராசரி மனிதன் என்பதே (FAULTY GENERALIZATION ) தவறான ஒருமைப்படுத்தல்.
கேள்வி : அத்வைதம் ஒரு சாராசரி மனிதனின் பார்வைக்கு. உங்களின் விளக்கம் என்ன?
சுவாமிஜி: சாராசரி மனிதன் என்பதே (FAULTY GENERALIZATION ) தவறான ஒருமைப்படுத்தல். தமிழில் அழகான இந்த வார்த்தை. ஒருமை. ஒற்றுமை. நரன் என்பது மனிதன். அயனம் என்பது வழி. வழிகாட்டப்பட்ட நாராயணன். அவ்வாறெனில் நரன் அயன் சேர்ந்தால் நாராயணன். அகம். வெறும் அகம் சேர்ந்தால் நரகாசுரன். நரன் அகம் மும் சேரந்தால் நரகாசுரன். நரன் அயனன் நாராயணன். ஒருமை. ஒற்றுமை. ஒருமை கசதடற வல்லினம். ஙஞணநமன என்பது மெல்லினம். யரழவளல இடையினம். அடிப்படையாக ஒற்றுமைக்கும் ஒருமைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எவ்வளவு நாள்வரை தனக்குள் வன்மை இருக்கிறதோ அவ்வளவு நாள்வரை ஒற்றுமையும் வருவதில்லை, ஒருமையும் வருவதில்லை. எப்பொழுது நாம் இருக்கின்ற எல்லாவற்றுடனும் ஒற்றுமையைக் கொண்டுவருகின்றோமோ அப்பொழுது ஒருமை நிகழத் துவங்குகிறது. சரியான மனிதன் என்ற வார்த்தை (FAULTY GENERALISATION) தனிமனிதன்தான் இருப்பு. சராசரி மனிதன் கற்பனை. சராசரி மனிதன் என்றால் பலமனிதர்களின் குணத்தை ஒன்றாகச் சேர்த்து அது கற்பனை. அது இருப்பு அல்ல. ஒருமையோ அல்லது ஒற்றுமையோ தனக்குள் யாருக்கு வாழ்க்கையைப் பற்றிய நோக்கும் போக்கும் தௌிவாக இருக்கின்றதோ அவர்களுக்குள்தான் நடக்கும். சராசரியான மனிதன் என்கின்ற கற்பனைப் பாத்திரத்திற்கு வாழ்க்கையின் நோக்கும் போக்கும் கிடையாது. கற்பனைக் காட்டூன்களுக்கு வேண்டுமானால் மூக்கும் முழியும் வைக்கலாம். நோக்கும், போக்கும் சொல்ல முடியாது.
மூக்கும் முழியும் இருப்பதனால் நோக்கும் போக்கும் இருந்துவிடும் என்ற அர்த்தமில்லை. நோக்கும், போக்கும் இருப்பவன் மனிதன். வெறும் மூக்கும் முழியும் இருப்பவன் சராசரி மனிதன். ஆதி வேறு. உயிர் வேறு. கும்பலாகச் சேர்ந்து வாழுகின்ற ஆடுகளுக்கு ஆதி இருக்கின்றது.
நோக்கும் போக்கும் இல்லாததினால் அவர்களுக்கு உயிர் கிடையாது. ஆடுமாடுகளைப் போல பட்டியைத் திறந்தால் தொட்டியில் விழுந்தோம்னு மொத்தமாக வாழுகின்ற, நீங்கள் சொல்கின்ற சராசரி மனிதர்களுக்கு ஆதியுண்டே தவிர, உயிர் இல்லை. அதனால் அவர்கள் ஆவி பிடிக்கின்ற இடத்திற்குப் போவர்கள். உயிர் நோக்கும், போக்கும் புரிந்தவனுக்குத்தான் உண்டு. நோக்கும், போக்கும் புரிந்தவனுக்குத்தான் அத்வைதத்தைச் சொல்ல முடியும். அத்வைதத்தைத் தனி மனிதனுக்குத்தான் சொல்லலாமேயொழியச் சராசரி மனிதனுக்குச் சொல்ல முடியாது. யாருக்குத் தன் வாழ்க்கையின் நோக்குப் புரிந்திருக்கிறதோ, போக்குப் புரிந்திருக்கி்றதோ அவன் இருக்கின்ற எல்லாவற்றுடனும் ஒற்றுமையைக் கொண்டுவருவானேயானால் ஒருமையைப் பார்ப்பான். அவன். ஓற்றுமை ஒருமையாகி ஓர்மையாகும். ஒரேயொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் தேடுதல் உடைய தனிமனிதர்களுக்குத்தான் அத்வைதம் புரியும். சராசரி மனிதனுக்குப் புரிவதில்லை. பொழுது போகிறதற்கு மஞ்சள் பத்திரிகை. பொழுது போகவில்லையென்றாலும் மஞ்சள் பத்திரிகை. அவ்வளவுதான் அவன் வாழ்க்கை. அடுத்தவன் வாழ்க்கையில் இருக்கின்ற துக்கத்தையெல்லாம் பார்த்து ரசிக்கிறது மஞ்சள் பத்திரிகை. தன் வாழ்க்கையில் வருகின்ற துக்கத்தையெல்லாம் பார்க்கிறதற்கு வருவதுதான் மஞ்சள் பத்திரிகை. கல்யாணப்பத்திரிகை. பத்தி வரும் வியாதியஞ்சேன். பரவிவரும் டெங்கும் அஞ்சேன்.
முத்தி வருமோ வராதோ யெனும் பயமும் அஞ்சேன். தன் வாழ்வுத் துக்கமும், பிறர்வாழ்வுத் துக்கமும் ஒன்றாய்க் கொண்டுவரும் மஞ்சள் பத்திரிகை அம்மனாம் அங்சுமாறே.
பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளும் தமிழ் சத்சங்கம் full video link
https://www.youtube.com/watch?v=C7WnjnrOQkg&fbclid=IwAR1OLzxvx__G9UHdCuwo7IQSqJi6NEFuVF_q4xQZoMu65Z1fT04o_47lzaE