இது உங்கள் ஒவ்வொருவருக்காக…
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. நான் உலகத்திற்கு அளிக்கின்ற இந்த சத்தியங்கள் எல்லாம், உள்வாங்குகின்ற மக்களுக்காகத்தான். இந்த சத்தியங்கள் யாருக்காகவோ என்று நினைக்காதீர்கள்.
இது உங்கள் ஒவ்வொருவருக்காக
உங்கள் ஒவ்வொரின் மீது உள்ள ஆழ்ந்து அன்பினால். உங்கள் மீது நான் வைத்திருக்கும் நேர்மையான அன்பினால், உண்மையான காதலால்.. இந்த சத்தியங்களை அளிக்கின்றேன்.
நேர்மையான காதல், நேர்மையான அன்பு என்றால் என்ன வெனில் – தன்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும் என்று நினைப்பது! அதுதான் நேர்மையான காதல், நேர்மையான அன்பு!
உங்கள் உயிருக்கு நேர்மையாக இருப்பேன். ஒவ்வொரு தனி மனிதனக்கும் நேர்மையாக இருப்பேன்
நான் உங்கள் மீது, உங்கள் உயிர்மீது வைத்திருக்கும் அன்பு நேர்மை, யாராலும் அதை மாற்ற முடியாது, வளைக்க முடியாது! பெறுவதற்கு ஒன்றும் இல்லை அளிப்பதற்கே அனைத்தும்! நான் உங்கள் மீது, உங்கள் உயிர் மிது வைத்திருக்கும் அன்பு நேர்மை! யாராலும் அதை மாற்ற முடியாது! வளைக்க முடியாது! எந்த கும்பளாலும்.. என்னை மிரட்டியோ, அல்லது ஆசைகாட்டியோ அசைய வைக்க முடியாது!
உங்கள் மீது நான் வைத்திருக்கும் நேர்மையான அன்பு, பரமசிவப் பரம்பொருளோடு நான் வைத்திருக்கும் நேர்மையான அன்பு இரண்டும் ஒன்று! பரமசிவப் பரம்பொருளோடு நான் நேர்மையாக இருப்பேன்! அதே நேர்மையோடு உங்களுக்கும் இருப்பேன்! யாருடைய தாக்குதலுக்கோ, ஆசைகாட்டுதலுக்கோ.. ஆசைக்கும் அச்சத்திற்கும், அசைய மாட்டேன்!
இந்த நேர்மையான அன்பினால் சொல்லுகின்றேன்! ஆழ்ந்து கேளுங்கள்!