ஸ்ரீகைலாஸா – இது பரமசிவனின் நோக்கம்
பிரபஞ்சப் பெருவெளியான பரமசிவப் பரம்பொருளின் இருப்புநிலையே (State of Existence) திருக்கைலாயம், #ஸ்ரீகைலாஸா. ஸ்ரீகைலாஸா மனித–தெய்வத்தை தெய்வ–மனித நிலைக்கு உயர்த்தும் உயர்ந்த ஞான மண்டலம், உயர்ந்த சக்தி மண்டலம்.
ஓவ்வொரு தனிமனிதனும்… வாழ்வின் உயர்வை நோக்கிச் செல்வதுதான் அந்த தனிமனித வாழ்க்கையை முழுமையாக்கும்.
ஓவ்வொரு தனிமனிதனுமே…மனித தெய்வம் தான்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்…
தனக்குள்ளே இருக்கும் தெய்வீகத்தை உணர்ந்த மனிதன் -தெய்வ மனிதன்.தனக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணராத தெய்வம் – மனித தெய்வம்.
நன்றாகப் புரிந்துக் கொள்ளுங்கள்…
தன்னை மனிதன் என்று நினைத்தாலும்கூட அவன் மனிதன் அல்ல. ஒரு காலத்தில் உலகம் தட்டையானது, பூமி தட்டையானது என்கின்ற கருத்து எல்லோருக்கும் இருந்தது. மக்கள் அவ்வாறு நினைத்தார்கள் என்பதற்காக பூமி தட்டையாக இருந்துவிடவில்லை. அதை கண்டுபிடிப்பதற்கு முன்பும், கண்டுபிடித்த பின்பும் பூமி உருண்டையாகத்தான் இருந்தது. அதேபோல் நமக்குள் இருக்கும் தெய்வ சக்தியை கண்டுபிடிப்பதற்கு முன்பும், கண்டுபிடித்த பின்பும், அந்த இறைசக்தி நம்முள் இருந்துக்கொண்டு நம்மை செயல்பட வைக்கின்றது.
ஆழ்ந்து கேளுங்கள்…இயற்கையாகவே நம்முள் இருக்கும் #இறைசக்தியை வெளிப்படுத்த வேண்டுமானால், அதற்கான சரியான சுற்று சூழலியல் வேண்டும். இறைசக்தியை ஊக்குவிக்கும் சமுதாயம் வேண்டும். இறைசக்தியோடு இணைத்து கொள்ளும் வழிமுறைகளும், வாழ்க்கை முறைகளும் கற்றுத் தரப்படவேண்டும். அந்த சமுதாயத்தில் மனித தெய்வங்கள் தெய்வ மனிதர்களாக வாழ்வது ஊக்குவிக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் அது சாத்தியம்.
இப்பொழுது இருக்கும் சூழலியலில்…
மனித இனம் தன்னைத்தானே அளவுக்திமாக மாயையில் ஆழ்த்தி தன்னைத்தானே அளவுக்கதிகமாக அவதூறு செய்துகொண்டே செல்கிறது!
இதைப்பற்றிய விழிப்புணர்வை தந்தால்…
‘அப்பா நீ காண்பது கனவு! மிகப்பெறும் மாயையில் விழுந்து கிடக்கிறாய், விழித்துக்கொள்’ என்றால்…‘ஏய் சாமி, சும்மா கத்திட்டு இருக்காதே! கனவாயிருந்தாலும் பரவாயில்லை நாங்கள் நிம்மதியாய் இருக்கிறோம் விடு!’ என்று சொல்கிறார்கள்.
மனிதனை அவன் மாயையில் இருக்கிறான் என்றால், கோபமும் எரிச்சலும்தான் அவனுடைய முதல் ரியாக்ஷனாக இருக்கிறதே தவிற, கேட்டவுடன் உள்திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இன்னும் பக்குவம் வரவில்லை. பக்குவமடைந்து மனித குலம் தயாராக வரும்போது…அவர்கள் இந்த சத்தியங்களை தெரிந்துகொள்வதற்கு தயாராக இருக்கும்பொழுது, சத்தியங்கள் அவர்களுக்கு சொல்லித்தரப்படவேண்டும்.
அதுவரை அவர்கள் கேட்கும்படியான நுட்பத்தை சொல்லித்தரும்வரை,இந்த சத்தியங்களனைத்தும் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கான முயற்சிதான் இந்த ஸ்ரீகைலாஸா.
தனிமனிதருக்குள் ஸ்ரீகைலாஸா நிகழ பூமியில் அவர்களுக்கான ஸ்ரீகைலாஸா அமைத்து தரப்படவேண்டும்.
ஸ்ரீகைலாஸா என்பது ஜீவன்முக்த சமுதாயம்.
சமூகமே வாழ்வின் உயர்வை நோக்கிச் செல்வதுதான் ஜீவன் முக்த சமுதாயம் என்று சொல்கிறேன்.
அதுமாதிரி ஒரு ஜீவன் முக்த சமுதாயத்தை அமைப்பதற்காகத்தான் பரமசிவன் பேரருளாலே ஸ்ரீகைலாஸத்தை செய்துகொண்டிருக்கின்றேன்.
இந்த வார்த்தை ‘ஜீவன் முக்தியை’ ஆழ்ந்து புரிந்துகொள்வோம். உண்மையில் ஜீவன் முக்தியென்றால் என்ன?
தனிமனிதன் தன்னுடைய சுகத்தின், வாழ்க்கையின் ஆதாரமான உடலையும், மனதையும் தாண்டிய ஆன்ம பலம் என்பதை உணர்ந்து, வெளிஉலகத்தாலும் உடலாலும், மனதாலும், எதனாலும் காயப்படுத்தப்பட்டாலும் அதற்கு கலங்காது அலங்காது நிலை நின்று, ஞானத்தின் ஸ்திர தன்மையை நிதர்சனமாக வாழ்க்கையில் வெளிப்படுத்துவது தான் ‘#ஜீவன் முக்தி’
ஆழ்ந்து பார்த்தோமானால், காலம்காலமாக யுகம் யுகமாக, இந்தப் பூமியில் பூத்த ஜீவன் முக்தர்கள், மீண்டும் மீண்டும் மீண்டும் வாழ்க்கையில் தங்களின் அளவிடமுடியாத, எதிரிகளும் கண்டு நடுநடுங்கும் ஸ்திரதன்மையை, உறுதியை, தெளிவை, வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
உலகத்தில் இரண்டே இரண்டு இனம்தான் இருக்கின்றன…ஒன்று, எத்துனைதான் துக்கம் கொடுக்கப்பட்டாலும், எத்துனைதான் தாக்கப்பட்டாலும், ஞானத்தின் ஸ்திர தன்மையால், ஆன்மபலத்தால், வாழ்க்கையை ஆனந்தமயமாக வாழ்ந்து அதை உலகிற்கு சொல்லுகின்ற ஜீவன் முக்தர்கள்.
இன்னொருபுறம்… எத்துனைதான் சுகம் இருந்தாலும், பண பலமிருந்தாலும், கூலிப்படை ரவடிப் பலம் இருந்தாலும், பதவி பலம் இருந்தாலும், அரசியல் பலம் இருந்தாலும், ஊடகத்துறை பலம் இருந்தாலும், வாழ்க்கையை துக்கமாக, வாழ்ந்து மடியும் சாதாரணமாக மனிதர்கள்.
உலகத்தில் இரண்டே இனம்தான் . ஒன்று, எத்துனை இருந்தாலும் நிம்மதியில்லாமல் வாழ்ந்து மடியும் சாதாரண மனிதர்கள். எத்துனை தாக்கப்பட்டாலும், எதனாலும் அசையாது, வாழ்க்கை ஆனந்தமானது என்று தான் வாழ்ந்து, ஆன்ம பலத்தின், உறுதியை மக்களுக்குக் காட்டிக்கொண்டேயிருக்கின்ற ‘ஞான தீபங்கள்’, ‘ஞான விளக்குகள், இந்த ஜீவன் முக்தர்கள்.
எந்த மனிதரும் சாதாரண மனிதராக பிறக்கவில்லை.ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தெய்வநிலை உள்ளது.
அவர்கள் சாதாரண மனிதராகவே மறைவதுதான் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை.
இது மாற வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீகைலாஸா. இவ்வுலகத்தில் எங்காவது ஒரு இடத்திலாவது இந்த உயர்ந்த சத்தியங்களை எல்லாம் திரிபடையாமல் காப்பாற்றி வைத்துவிட வேண்டும் என்றுதான் ஸ்ரீகைலாஸத்தை செய்துகொண்டிருக்கின்றேன்.
எதாவது ஒருமூளையில் நின்று இந்த சத்தியத்தை நான் சத்தமாக உலகிற்கு சொல்லவேண்டும், அதற்கு ஒரு சிறிய பாதுகாப்பான இடம் வேண்டும். இது பரமசிவனின் நோக்கம். பரமசிவனும் பரசாக்தியும் பேரருள் செய்து இதை அமைத்து தருகிறார்கள். பரமசிவன் அருளால் காலபைரவர் நமக்குப் பாதுகாப்பு அளித்தருள்கிறார்.
இந்துக்களே…
உங்களுடைய இதயம்தான் பரமசிவ பரம்பொருளின் இருப்பிடம்.
உங்களுடைய இதயம்தான் பரமசிவ பரம்பொருளின் ஸ்ரீகைலாஸம். உங்கள் இதயங்களில் எல்லாம் பரமசிவ பரம்பொருளின் திருக்கைலாயத்தை உள்வாங்குங்கள். உங்கள் இதயங்கள்தான் பரமசிவ பரம்பொருளின் இருப்பிடம் என்பதை உணருங்கள்.
ஒவ்வொரு தனிமனிதரும் தம்முள், பரமசிவ பரம்பொருளின் நிலையில் நிலைப்பெற்று,
பரமசிவ உணர்வையும்
பரமசிவ சக்திகளையும்
பரமசிவ இருப்பையும்
பரமசிவ உயர் விழிப்புணர்வையும் பெறுவதுதான் ஸ்ரீகைலாஸாவின் நோக்கம்.
தயவுசெய்து, வாழும்பொழுதே உங்கள் வாழ்வின் நோக்கமான பரமசிவப் பரம்பொருளின் இருப்புநிலையை உள்வாங்குகள். உங்களுடைய இருப்பு நிலை பரமசிவப் பரம்பொருளின் இருப்பு நிலையாகட்டும்.
இந்து மதத்தின் சாஸ்திரங்களை வாழ்வதும், சத்தியங்களை உயிரோடு வைப்பதும் இந்த ஸ்ரீகைலாஸாவின் நோக்கம்.
இந்து மதத்தை வாழ்வதும், வாழ வைப்பதும் மட்டுமே நம் நோக்கம்!
ஒரு காலத்தில் 56 தேசம், 200 மாகாணம், 17000 எஸ்டேட்டுகள்
இந்து மதத்தை அதிகாரபூர்மான மதமாக பெற்றிருந்தது.
இன்று இந்து மதத்தை முறையான சட்டரீதியாக அதிகாரபூர்வமான மதமாக உடைய ஒருநாடுகூட இல்லை!
நாம் இடங்களை இழக்க இழக்க, அங்கிருந்து சம்பிரதாயங்களும் பரம்பரியங்ளும் சேர்ந்து அழியத்துவங்கியது!
முதலில் இந்து மதத்தில் ஒரு லட்சம் சம்பிரதாயங்கள் இருந்தது, ஆனால் இப்பொழுது பத்தாயிரம் சம்பிரதாயங்கள்தான் இருக்கின்றது.
இந்த சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் புனரமைத்து, மறுமலர்ச்சி செய்து அதன் நூல்களை மட்டுமாவது பத்திரப்படுத்தி வைத்தால் எதிர்காலத்தில் மற்றவர்கள் படித்து பயன்பெறுவார்கள்.
நான் வாழ்ந்து கொண்டிருப்பதே மற்றவர்களுக்கு இதை சொல்வதற்காகதான்.
இந்த திருப்பணியை செய்யத்தான் உடலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்!
நற்செய்தி என்னவென்றால்…
அதற்கான மூலஸ்தானத்தை உருவாக்கிவிட்டேன்! மிச்சம் இருக்கின்ற இந்து மதத்தையும் அழியாமல் காப்பாற்றிவிடுவேன்! இது என் குருமார்கள் எனக்கு அளித்த ஞானப்பால்மீது சத்தியம்..
இந்து மதத்தை வாழ்வதும், உலகம் முழுவதும் மக்களை வாழ வைப்பதும் மட்டுமே நம் நோக்கம்!
ஸ்ரீகைலாஸா யாரால் உருவாக்கப்பட்டது?
ஸ்ரீகைலாஸா எங்குள்ளது?
உலகெங்கிலும் தங்கள் சொந்த நாடுகளில் இந்துமதத்தை அதன் உண்மைத்தன்மையுடன் வாழும் உரிமையை இழந்த, கைவிடப்பட்ட இந்துகளால் உருவாக்கப்பட்ட புவியியல் எல்லைகள் அற்ற தேசம் -ஸ்ரீகைலாஸா!
ஸ்ரீகைலாஸா இயக்கம் அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்டது இந்து ஆதிசைவ சிறுபான்மை சமூக உறுப்பினர்களால் பரப்பப்படுகிறது.
உலகம் முழுவதிலும் இந்து மதத்தை வாழும் ஆர்வமுள்ள, ஆனால் இந்துமதத்தை வாழ்வதனாலேயே தாக்கப்படுகின்ற இந்துக்கள்…தாங்கள் சந்திக்கும் கலாச்சாரரீதியாக இழிவுபடுத்தப்படுதல், மறுப்பு மற்றும் வன்முறையிலிருந்து விடுபட்டு,இனம், சாதி, பிரிவு, சமயம், பாலினம் இவற்றைக்கடந்து தங்கள் ஆன்மீகம், கலை, கலாச்சாரம் இவற்றை முழுமையாக வெளிப்படுத்தி அமைதியாக வாழ்வதற்கான பாதுகாப்பான தளத்தை ஸ்ரீகைலாஸா அளிக்கின்றது.

தேசங்களில் அதிகார மதமாக இந்து மதம் இருந்தது
ஸ்ரீகைலாஸா – உலக நாகரிகத்தின் அடித்தளம்
இந்துமதத்தின் வேத பாரம்பரியமே…இந்துமதத்தின் ஆன்மிகமே…இந்துமதத்தின் ஞான அறிவியலே…உலக நாகரிகத்தின் அடிப்படைகளுக்கு ஆதாரமாகும்.
இந்து வேதப்பாரம்பரியத்தின் ஆணிவேர் – ஜீவன்முக்த சமுதாயம்.
இந்து வேதபாரம்பரியம் 10,000 வருடங்களுக்கு மேல் ஜீவன்முக்த சமுதாயமாக நிலைத்து நின்று, காலத்திற்கு அப்பாற்பட்ட ஆன்மீக ஞானம், தொழில்நுட்பம், கலாச்சாரம் இவற்றின் உலகளாவிய கலங்கரை விளக்காக திகழ்கிறது.
நம் பாரதத்தின் தொண்மையான இந்து நாகரீகம்தான் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவிகிதம் உற்பத்தி செய்தளித்துள்ளது.
இந்து வேதபாரம்பரியம் ஆன்மிகத்தில் மட்டுமல்ல…அனைத்து அறிவியலிலும் தனித்துவமான பங்களிப்புகளை அளித்துள்ளது.
கணிதத்தில் அடுத்த நிலை வளர்ச்சி (உ.தா., இந்தியர்கள் சேர்த்த 0 என்ற எண் ஏற்கனவே அறிந்த பீத்தகோரியன் தோற்றம் போன்ற உயர்நிலை கருத்து மற்றும் கணிதத்தின் புரட்சி)வானியல் ( உ.தா., பூமி சூரியனைச் சுற்றியது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், மேலும் மேம்பட்ட பக்கவாட்டு விளக்கப்படங்களை உருவாக்கித் தந்தனர்), அறிவியல், கட்டிடக்கலை மற்றும் கட்டுமானம் (உ.தா., பறிப்பு கழிப்பறை மற்றும் சிக்கலான கழிவுநீர் அமைப்பு உருவாக்கப்பட்டது),
உடல், மனம் மற்றும் இயல்பு பற்றிய ஆழமான அறிவிலிருந்து எழுந்த யோகா, (மனிதர்களை அவர்களுக்குள் உள்ளார்ந்த தெய்வீக ஆற்றலுடன் ஒன்றிணைக்கும் விஞ்ஞானம்)
மருத்துவம் (விஞ்ஞானி சுஷ்ருதா செய்த கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை)ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் முன்னேற்றம்
என இவை எல்லாமே இந்த ஜீவன்முக்த சமுதாயத்தால் உலகிற்கு அருளப்பட்ட அறிவியல் மற்றும் பொருளாதார புரட்சியின் ஒரு சில உதாரணங்கள் மட்டும்தான்.
ஒருமைத்தன்மையால்,
அத்வைத ஆன்மிக அனுபவத்தால்…இந்து மதத்தின் அசாதாரண சக்திகளால்தான் இந்த சாதனைகள் நிகழ்ந்தது. இந்த பங்களிப்புகள் உலகிற்கு சாத்தியமானது.
இந்துமதத்தின் ஜீவன்முக்த சமுதாயமான ஸ்ரீகைலாஸாதான் இத்தனைய வளர்ச்சிக்கும் பங்களிப்புகளுக்கும் ஆதாரம், அடித்தளம்.
ஸ்ரீகைலாஸா தேசம் உருவானதன் நோக்கம்??
ஸ்ரீகைலாஸா என்பது அரசியலற்ற ஒரு தேசம்.ஸ்ரீகைலாஸாவின் நோக்கம் மனிதகுலத்திற்கு மட்டுமானது அல்ல…இது அனைத்து உயிர்களுக்குமானது.
ஜீவன் முக்த அறிவியலையும் அளித்து,
அதை எல்லா உயிர்களும் வாழ்வதற்கான சூழலையும் தருவதே ஸ்ரீகைலாஸாவின் நோக்கம்.
ஒருகாலத்தில் அனைத்து கண்டங்களிலும் இந்துமதம் அதன் உண்மைதன்மையுடன் வாழப்பட்டது.
ஜீவன்முக்த சமுதாயம் பெரும்பாலான தேசங்களில் இருந்தது.
ஆப்கானிஸ்தான், இந்தியா, நேபாளம், பர்மா, இலங்கை, அவ்வழியாக சிங்கப்பூர் மலேசியா, கம்போடியா மற்றும் இந்தோனேஷியா போன்ற 56க்கும் மேற்பட்ட நாடுகளில இந்துமதம் சுதந்திரமாகவும், உண்மைத்தன்மையுடனும் பயிற்சி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுது மில்லினியம் ஆண்டுகளாக இந்து விரோத சக்திகளின் தாக்குதல்களால் இந்து தேசமற்று போனது மட்டுமல்லாது, இந்துமதமே பேரழிவை சந்தித்துக் கொண்டிக்கிறது.
இத்தகைய இன்றைய நிலையில்…இந்துமதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு ஞான கலாச்சாரம், நாகரீகம் இவற்றை மீட்டெடுத்து, உயிர்பித்து, மறுச்சீரமைத்து இந்து மதத்தை பாதுகாப்பதற்காக, அதன் உண்மைதன்மையோடு வாழ்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டதே ஸ்ரீகைலாஸா.

ஸ்ரீகைலாஸா- எவ்வாறு தன்னை முன்னிறுத்துகிறது?
ஸ்ரீகைலாஸா மிக அமைதியானது, இறையாண்மையுடடையது.
ஒரு பிரதேசம் என்பதைவிட ஒரு கருத்தைப் பிரநிதிப்படுத்துவதாகவும், சேவைகளைச் சார்ந்ததாகவும் திகழ்கின்றது!
எல்லா மனிதர்களும் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ முடியும்.
அனைவரும் சமமானவர்கள் மற்றும் தெய்வீகமானவர்கள்.
நிறம், தேசியம், மதம், பாலினம் ஆகியவற்றைக் கடந்து ஒவ்வொருவரும் தன் உயர் சாத்தியக்கூற்றை அடைய முடியும் என்ற கருத்தில் வாழ்வார்கள்.
ஸ்ரீகைலாஸா அத்வைதம் அல்லது ஒருமைத்தன்மை எனும் அடிப்படை சத்தியத்தில் வேறூன்றியது.
போர், சுற்றுச்சூழல் அழிவு, வெறுப்பு மற்றும் பிளவு ஆகியவற்றால் பாழடைந்த இவ்வுலகில், ஸ்ரீகைலாஸா…மனித ஆற்றல், இணைந்து வாழ்ந்தல், சாத்வீக வாழ்க்கை மற்றும் இயற்கையோடு இணைந்திருப்பது போன்ற தைரியமான பார்வையுடன் நிற்கின்றது.
இந்துமதத்திற்கு அதிகாரப்பூர்வமான நிலை, சட்டப்பூர்வமான முறைமை பெறாமல் போனால்…
200 மாநிலங்கள், 1700 சமஸ்தானங்கள் (மாகாணங்கள்) மற்றும் 10,000 சம்பிரதாயங்கள் (மரபுகள்) என இந்நாள் வரை இருந்த ஜீவன்முக்த சமுதாயத்தை உருவாக்கும் அறிவியல், அதன் கொள்கைகள், வேதங்கள் இவற்றை மனிதகுலம் நிரந்தரமாக இழக்கும் அபாயம் உள்ளது.
நாடற்ற நாடான ஸ்ரீகைலாஸா…தம்மை ஒரு நாடாக முன்வைத்து மற்றொரு நாட்டை, புதிய பிரதேசத்தை நாடவில்லை.மாறாக ஜீவன்முக்த சமுதாயத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதித் தூதராக கருதி தம்மை முன்னிறுத்துகிறது.
கைலாசா ஆன்மீக, மத, சமூக, கலாச்சார, வரலாறு, பொருளாதார மற்றும் அரசியல் சட்டபூர்வமான அதிகார தன்மையை சனாதன இந்து தர்மத்திற்கு கொண்டு வருகின்றது. இது மனிதகுலம் அனைத்திற்கும் பயன் தரும்.
ஸ்ரீகைலாஸா ஆற்றும் பெரும் பணி:
இன்றைய உலகிற்கு ஜீவன்முக்த அறிவியிலின் நடைமுறை பயன்பாடுகளை பகிர்வதே ஸ்ரீகைலாஸா தேசத்தின் பெரும்பணி! இதன் மூலம் நாங்கள் எந்த ஒரு நாட்டிற்கும் நேரடியாக பயனளிக்கும் இந்துமதத்தின் வெற்றிகரமான வாழ்வு மற்றும் வாழ்கைமுறை சார்ந்த
(1) கல்வி
(2) உடல்நலம்
(3) மனித ஆற்றலின் வளர்ச்சி என்ற 3 பகுதிகளில் திருப்புமுனைகளை ஏற்படுத்தியுள்ளோம்.
இந்த அறிவியலைப் பின்பற்றுபவர்கள் உலகளவில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்கின்றனர்.மேலும் இந்த போதனைகளை அவர்கள் கடைப்பிடிப்பதால் உலகின் மிக வெற்றிகரமான சமூகங்களை உருவாக்குகின்றனர். அந்த வெற்றிகரமான வாழ்க்கைமுறையை உலகிற்கு சேவையாக வழங்கிட அவர்கள் மேலும் பல ஸ்ரீகைலாஸாக்களை உருவாக்குகிறார்கள்.
செயல்திறம் சார்ந்த மருத்துவ சேவைக்காக மால்டா (ஒரு நாடு) 110 நாடுகளுடன் அங்கீகாரத்தை பெற்றதை போன்று… செயல்திறம் சார்ந்த இந்துமதத்தின் வெற்றிகரமான வாழ்வு மற்றும் வாழ்க்கைமுறைகளை பயிற்றுவிக்கும் சேவைக்காக மற்ற நாடுகளுடைய அங்கீகாரத்தை ஸ்ரீகைலாஸா பெறும்.
ஸ்ரீகைலாஸாவின் தனித்துவம்!
அனைத்து நாடுகளையும் இணைத்து உலகம் சந்தித்துக்கொண்டிருக்கும் பல பிரச்சினைகளைத் தீர்க்கும் மூலத்திறவுகோலான ஜீவன்முக்த அறிவியலின் ஞானத்தால் உலகிற்கு சேவைபுரிவதே ஸ்ரீகைலாஸா – இந்து தேசத்தின் நோக்கம்.
இந்த அறிவியலை அடிப்படையாக கொண்டு பல காரணிகளை நாங்கள் நிருவி வருகின்றோம்.
உதாரணத்திற்கு….
1. பசியை தீர்த்தல்

2. இனச் சமஉரிமை
3. அழிந்துகொண்டிருக்கும் தேசங்களைப் பாதுகாத்தல்
அதிகாரம் மற்றும் இரட்டைத்தன்மை அல்லது பிரிவு சார்ந்த அணுகுமுறைகளில் இருந்து மாறுபட்டு,ஒருமைத்தன்மை (அத்வைதம்) என்ற ஞான அணுகுமுறை அடிப்படையில் பிரச்சினைகளை தீர்ப்பது அனைவருக்கும் பலனளிக்கும்.
எடுத்துக்காட்டாக, பெண்களுக்கான ஒதுக்கீட்டை கட்டாயப்படுத்துவதன் மூலம் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல், அரசியல் எல்லைகளை வரைவதன் மூலம் வன்முறை மற்றும் போரின் பிரச்சினையை தீர்ப்பது …. இவை ஒரு வகையான அணுகுமுறைகள். ஆனால் இவை நிரந்தர தீர்வளிக்காது.
ஸ்ரீகைலாஸா ஒருமைத்தன்மை அடிப்படையில் அணுகி பிரச்சினைகளை தீர்ப்பதில் தனித்துவம் வாய்ந்தது!
உலகின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒருமை இலக்கில் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைப்பதே ஸ்ரீகைலாஸாவின் நோக்கம்.
பரமசிவன் வாழும் ஸ்ரீகைலாஸ பரம்பரையில் வெளிப்படுத்தப்படும், வாழப்படும் ஒருமைத்தன்மை எனும் அத்வைத சத்தியத்தின் அடிப்படையில் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் பாரம்பரியத்தின் மறுமலர்ச்சிதான் ஸ்ரீகைலாஸா தேசம்.
பரமசிவனின் ஸ்ரீகைலாஸா புனரமக்கப்படும் புனிதம்
அகிலத்தை காக்கும் அன்னை பராசக்தி, பரம்பொருள் பரமசிவனின் அர்த்தாங்கினி பராசக்தி தாயாரால் ஸ்ரீகைலாஷா பரம்பரை பூமிக்கு கொண்டுவரப்பட்டது! பராசக்தி கைலாயத்திலிருந்து பூமியில் மண் ஸ்தலமான காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளி மண்ணால் சிவலிங்கம் செய்து பரமசிவனை வழிபட்டார். அதுவே இன்று காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயமாகத் திகழ்கின்றது. இவ்வாலயத்தைச் சுற்றி தொண்டை மண்டல ஆதீனம் எழுந்தருளியிருக்கின்றது!. அன்னை பராசக்தியே திருக்கயிலையிருந்து வந்து தோற்றுவித்ததால் இப்பரம்பரை கைலாயத்தின் சர்வக்ஞபீடமாகும். தொண்டைமண்டல அதீனம் கையிலாயப் பரம்பராகத காஞ்சி சர்வக்ஞபீடம் என்றழைக்கப்படுகின்றது!

அன்னை பராசக்தி காஞ்புரத்தில் ஏகாம்பரநாதரை லிங்கப்பரதிஷ்டை செய்தபிறகு பரமசிவப் பரம்பொருளுக்குள் இரண்டறக்கலந்து அவரின் பாகமாகிட விரும்பினாள். எம்பெருமான் அன்னையை திருவண்ணாமலை எழுந்தருள வழிகாட்டி அங்கிருந்து வன்னி மரத்தடியில் தியானிக்க சொல்லியருளினார். வன்னி என்பதற்கு அக்னி என்பது பொருள். வன்னி மரம் வறண்ட சூழலில் உயிர்வாழும் திறன்கொண்டது. மேலும் அதைச் சுற்றியுள்ள நிலத்தடி நீரை உறிஞ்சும் வெப்பமான மரங்களில் ஒன்றாகும். அருணாச்சலத்தில் ஜோதிஸ்தம்பமாக எழுந்தருளிய பரமசிவனின் வாழும் அடையளாமாகும்.
திருவண்ணாமலை எழுந்தருளிய அன்னை பராசக்தி வன்னி விருக்ஷத்தின் அடியில் தவமியற்றி பரமசிவனோடு இரண்டறக் கலந்தாள்!
இத்தெய்வீக திருத்தலத்திலே 1978 ஆம் ஆண்டு திருக்கயிலாயப்பரம்பரையை ஸ்ரீகைலாஸா இந்து தேசமாக உயிர்ப்பிக்கும் ஒரே நோக்குடன் அவதரித்தவரே பரமசிவனின் வாழும் அவதாரமாம் பகவான் நித்யானந்த பரமசிவம்.
ஸ்ரீகைலாஸத்தின் காரணிகள்
போர், சுற்றுச்சூழல் அழிவு, வெறுப்பு மற்றும் பிளவு ஆகியவற்றால் அழிந்துகொண்டிருக்கும் இவ்வுலகில், ஸ்ரீகைலாஸா மனித ஆற்றல், சகவாழ்வு, சாத்வீக வாழ்க்கை மற்றும் இயற்கையோடு இணைந்திருப்பது போன்ற கருத்துகளைத் தாங்கி நிற்கிறது.
ஒரு நாடற்ற தேசமாக, அது புதிய பிரதேசத்தை நாடுவதில்லை, மாறாக ஜீவன்முக்தி சமுதாயத்தின் சட்டரீதியான பிரதிநிதியாக செயலான்மையின் அங்கீகாரத்தை பெறுகிறது.
ஸ்ரீகைலாஸா தன் கொள்கைகளின் அடிப்படையில் பாலின சமத்துவம், பூமியின் வெப்பத்தை சமநிலையில் வைப்பதற்காக போராடுதல், முழுமையான கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான உலகளாவிய அணுகல், சைவ உணவு போன்ற காரணங்களை ஆதரிக்கிறது. ஸ்ரீகைலாஸா மனித குலம் அனைத்திற்கும் பலனளிக்கும் வகையில், சனாதன இந்து தர்மத்தின் ஆன்மீகம், மதம், சமூக, கலாச்சார, வரலாற்று, பொருளாதார மற்றும் அரசியல் போன்ற துறைகளில் சட்டபூர்வமான முறைமைதன்மையை கொண்டு வருகின்றது.