கடவுளாய் இரு…

பரமசிவப் பரம்பொருளிடமிருந்து…
ஸ்ரீகைலாயத்திலிருந்து உங்களுக்கு நேரடியாக செய்தி… கடவுளாய் இரு.. 


* இந்த 3 சத்தியங்களை ஆழ்ந்து கேளுங்கள்.. 

முதல் சத்தியம் :

கடப்பது நிறுத்தி,
கடந்தது மாற்றி,
கடக்க வருவது ஆக்கி,
கடவுளாய் இரு.. 

*இரண்டாவது சத்தியம்…

புவியீர்ப்பு விசை,
மின்காந்த விசை,
அணு சக்தி
பிரபஞ்சப் பெருவெடிப்பு சக்தி
இந்த நான்கும் நிகழ்கால, தற்கால நவீன அறிவியல் இதுவரை புரிந்துகொண்ட சக்திகள் . இந்த நான்குதான். நவீன அறிவியல் புரிந்துகொண்ட சக்திகள்.

*சைவத்தில் பிரபஞ்ச இயக்கத்தின் சக்திகள் எட்டு (8) 

மிகத்தௌிவாக பரமசிவக்ஞானத்தில் விளக்கப்பட்டிருக்கும்…
பிரபஞ்சத்தை இயக்கும் பேரருள் சக்திகள்,
தாயார் பராசக்தியின் வௌிப்பாடுகள் 8.

ஆனால் நவீன கால அறிவியல் புரிந்துகொண்டது, இதுவரை வெறும் நான்கு மட்டும்தான் தான்.  ஆங்கிலத்தில் சொல்லவேண்டும் என்றால்.. 

Gravity,
Electromagnetic force,
Weak Nuclear force,
Strong Nuclear force-
புவியீர்ப்பு சக்தி, மின்காந்த சக்தி, அணு சக்தி பிரபஞ்சப் பெருவெடிப்பு சக்தி இந்த நான்கு சக்திகளும் நம் உயிர்ப்பின் இருப்பிற்கு குறைந்தவை!

*உங்கள் உயிர் சக்தி இந்த நான்கையும் தாண்டியது.
இந்த நான்கினோடும் நம் விருப்பப்படி விளையாட முடியும்.  

மூன்றாவது சத்தியம் .. 

எம்பெருமான் வேதங்களிலும், ஆகமங்களிலும், அருளியிருக்கும் ஞான விஞ்ஞானம்…
இந்த அறிவியலைத்தான்  ஆதிவைசம் என்று சொல்கிறேன். 

*ஆதிசைவம் சாதாரண வெறும் அறிவு மாத்திரம் அல்ல.. இது நிஜமாக தினசரி வாழ்க்கையில் வாழ்ந்து அனுபவித்து, ரசித்து ருசித்து. நாம் அனுவிக்ககூடிய அறிவியல். 

*ஆதிசைவம் வெறும் கருத்துக்களின் தொகுப்பான வெறும் தத்துவம் அல்ல, தத்ததுவங்கள் ஆதிசைவத்தின் ஒரு பாகம்.

ஆனால், ஆதிசைவம் அடிப்படையில் ஒரு மிகப்பெரிய பிரபஞ்ச ஞான அறிவியல்.  

*ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், ஞானம் அருளலும் – என எம்பெருமான் பிரபஞ்ச நிலையில் நிகழ்த்தும் ஐந்தொழிலையும் தினசரி வாழ்க்கையில் நாம் நிகழ்த்துவதற்கு நமக்கு சுதந்திரமும், அறிவும், சக்தியும் பெருமான் அளிக்கின்ற ஞான விஞ்ஞானம்தான் ஆதிசைவம். 

ஆதிசைவத்தை இந்த விளக்கத்திலிருந்து புரிந்துகொள்ளுங்கள்..  

*பிரபஞ்சப் பெருவௌியின் சூரியனையும், சந்திரனையும், கோள்களையும், நூற்றுக்கணக்கான கோடி பிரம்மாண்டங்களை பரமசிவப் பரம்பொருள்.. ஆக்கலும், காத்தலும், அழித்தலும், மாயையிலிருந்து விடுபடுதலும், ஞானம் அளித்தலும் ஆக..
தன் இருப்பின் மாத்திரத்திலேயே பஞ்சக்கிருத்தியங்களான ஐந்தொழிலையும் எம்பெருமான் செய்கின்ற ஐந்தொழிலை  நாம் நம் வாழ்க்கையில் நிகழ்த்துகின்ற அறிவும் சக்தியும், பெருமான் அளிக்கின்ற ஞானவிஞ்ஞானம்தான் ஆதிசைவம். 

*நம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை ஆக்கிக்கொள்ளவும், காத்துக்கொள்ளவும், தேவையற்றவற்றை அழித்துக்கொள்ளவும், மாயையில் இருந்து மீட்டுக்கொள்ளவும், ஞானத்தில் சுதந்திரந்திரர்களாக ஆக்கிக்கொள்வதற்கும் சுத்தாத்வைத சுகபோகத்தில் நிலைக்கவும் தேவையான அறிவும், சக்தியும், அளித்து அதை நாம் வாழ்வதற்கான ஞான விஞ்ஞானமே ஆதிசைவம். 

நான் சொன்ன இந்த மூன்று சத்தியங்கள்தான் இன்று இறையனார் நமக்கு அளிக்கின்ற செய்தி.. 

*மீண்டும் கேளுங்கள்.. 

முதல் சத்தியம் :
கடப்பது நிறுத்தி, கடந்தது மாற்றி, கடக்க வருவது ஆக்கி கடவுளாய் இரு.. 

இரண்டாவது : புவியீர்ப்பு சக்தி, மின்காந்த சக்தி, அணு சக்தி, பிரம்மாண்ட பிரபஞ்சவியல் சக்தி இந்த 4 உங்கள் உயிர்ப்பின் இருப்பான ஆன்ம சக்திக்கு குறைவு! ஆன்ம சக்தியினால் இந்த 4 ஆக்கவும், அழிக்கவும், காக்கவும், மாற்றவும், விடுக்கவும் ஆகும்.    

மூன்றாவது சத்தியம் : எம்பெருமான்.. தன் சாந்நித்ய மாத்திரத்திலாயே மேக்ரோகாஸ்மிக் நிலையில் ஆற்றும் ஐந்து தொழிலையும், நம் வாழ்வு நிலையில் மைக்ரோகாஸ்மிக் (Micro Cosmic)  நிலையில் நாம் செய்து கொள்வதற்கு அறிவும் ஆற்றலும் அளிக்கின்ற அறிவியலே ஆதிசைவம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்