நினைத்தாலே நெஞ்சு நடுநடுங்குகின்றது

கோடிக்கணக்கான ராட்சதர்கள் ஒரே நேரத்தில் உருவாக்கப்படுகின்றார்கள். ஒரு ஜெனரேஷனுக்குள்ள எத்துனைக்கோடி ராட்சதர்களை, ரௌடிகளை இவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.. தயவுசெய்து விழித்துக்கொள்ளுங்கள்.. இவர்கள் உங்களுக்கு செய்கின்ற கொடுமையை நினைத்தாலே நெஞ்சு நடுநடுங்குகின்றது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்..

எது தவறு? எது சரி? என்று புரியாமல் இருப்பது ஒரு நிலை, எது கனவு? எது நிஜம்? என்றே புரியாது இருக்கின்ற இன்னொரு மயக்க நிலை!

அந்தப் போதை நிலையிலே உங்களுக்குள் சில கருத்துக்கள் விஷுவலாகத் திணிக்கப்பட்டால் என்ன ஆகும்?  மனநலமும், உயிர் நலமும் என்ன ஆகும்?

டெட்லி காம்பினேஷன் (Deadly Combination) – ஒரு லட்சம் பேரை வெட்டிக்கொன்றுவிடுவது எந்த அளவிற்குப் கொடுமையோ, அதைவிடக் கொடுமை ஒரு லட்சம் தீவிரவாதிகளை உருவாக்கிவிடுவது!

ஒருவனை சமூகத்தில் இறங்கி கூட்டுக் கற்பழிப்பு செய்யவும், ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவதற்கும் ஒரு ராட்சஸனாக ப்ரோக்கிராம் பண்ணி விட்றது மிகப்பெரிய சமூகத் தீவிரவாதம்!  இதையெல்லாம் உங்களுக்குச் சொல்லி, உண்மையை உங்களுக்குச் சொல்லிவிடுகின்றேன் என்பதனால்தான் எத்தனையோ விதத்தில் என்னைத் தாக்கினார்கள்.

ஆனால் உங்களுக்கு நேர்மையோடு இருந்தே தீருவேன்!

நிஜம் எது? நிழல் எது என்றே தெரியாத நிலையில் உங்களை ஆழ்த்தி இந்த ஆபாச விஷம் உங்கள் மீது திணிக்கப்படுகின்றது!

விழித்துக்கொள்ளுங்கள்.. விழித்துக்கொள்ளுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்