வீடியோ

தமிழில் பகவான் நித்யானந்த பரமசிவம்அவர்கள் நம் உயிருக்கு அருளும் பரமசிவாத்வைத சைவம் கேளுங்கள்


”வேதங்களிலும், ஆகமங்களிலும் வேர்கொண்டு, பரமசிவப்பரம்பொருளே பராசக்திக்கு அருளி, நாராயணன் அதைப் பெற்று பிரபஞ்சத்தை இயக்குகின்ற மென்பொருளாக்கியிருக்கின்ற இந்த ஞான விஞ்ஞானம் பரமசிவப் பரம்பொருளே நீலகண்ட சிவாச்சாரியாக அவதாரம் செய்து, பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் செய்தருளிய அதில் அவர் ஆப்தப்பிரமணாங்களாக காட்டியருளிய சத்தியங்களை சூட்சுமங்கள் அவைகளை என் ஆத்மப்பிரமாணமாக ஞானகுருநாதன் அருணகிரியோகீஸ்வரரா வந்து எனக்கு அளித்தருளியதை உங்கள் சாட்சிப்பிரமாணமாக, வாழ்வின் அனுபவமாக மாற்றுவதைத்தான் நான் செய்து கொண்டிருக்கின்றேன். அதாவது நான் உங்களுக்கு எதைச் சொல்லுகின்றேனோ அதை பரமசிவாத்வைத சைவம் என்று சொல்லலாம்.”
– பகவான் நித்யானந்த பரமசிவம்

250 க்கும் மேற்பட்ட வீடியோக்களை நீங்கள் இலவசமாக கண்டு பயன் பெறலாம். தமிழ் வீடியோக்களை காண இந்த link ஐ சொடுக்குங்கள்…

https://www.youtube.com/playlist?list=PL9FF0E7A68E0BE270

ஏன் ஊர் ஊராகச் சென்று தியான சத்சங்கங்கள் நடத்துகிறீர்கள்? 

                                                                        – கருணா, மலேசியா

தியான சத்சங்கம் உங்களின் ஜீவன் விழிக்குமிடம். knowledge is free.

அதனால்தான் தியான சத்சங்கள் அனைத்தும் இலவசமாக நடத்தப்படுகின்றன.

விவேகானந்தர் ஒரு இடத்தில் மிக அழகாக விளக்குகிறார். மனிதனை நல்லவனாக இரு, ஆன்மீகவாதியாக மாறு. நல்ல விஷயங்களைக் கடைபிடி என்று சொல்வது மிகப் பெரிய தவறு,” என்று அவர் சொல்கிறார்.

அதெப்படி மிகப்பெரிய தவறாகலாம்?” என்று நீங்கள் நினைக்கலாம்.

விவேகானந்தர் விளக்குகிறார்.

மனிதனை நல்லவனாக மட்டும் இரு,

சத்தியத்தோடு இரு,

ஆன்மீகவாதியாக இரு,

என்று சொல்வது மிகவும் எளிது.

ஆனால், எப்படி நல்லவனாக இருப்பது என்று கற்றுக்கொடுப்பதுதான் கடினம்”

பொதுவாகவே, நாம் எல்லோரும் கோபத்தை அடக்குங்கள், அன்போடு இருங்கள்…, ஆன்மீகத்தோடு வாழுங்கள்..” என்கின்ற வார்த்தைகளை மீண்டும், மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமானதுபோல் தெரிவதே இல்லை.

மீண்டும், மீண்டும் இந்த வார்த்தைகளைக் கேட்டாலும், அந்த வார்த்தைகள் நடைமுறையில் ஏன் சாத்தியம் ஆகாமலே இருந்து கொண்டிருக்கின்றன?

காரணம், நாம் கேட்கின்ற வார்த்தைகள் வெறும் மூளை அளவில் மட்டுமே பாதிக்கின்றன. அவை வெறும் அறிவு அளவிற்கு மட்டுமே செல்கின்றன. அவை ஆழ்ந்து நமக்குள் செல்வது இல்லை. ஆழ்ந்து நமக்குள் படிவது இல்லை. வெறும் வார்த்தைகளை உள்வாங்கும் பொழுது, அவை நம் மூளையை மட்டும்தான் தொடுகின்றன. உணர்வைத் தொடுவது இல்லை.

அந்த வார்த்தைகள், உணர்வைத் தொட்டு, அனுபவமாக மாற்றுவதற்கான யுக்தி, அதற்கான முறையை அறிவிப்பதுதான் தியான சத்சங்கம்.

தியான சத்சங்கம், ஒரு சாதாரணமான சொற்பொழிவு அல்ல. பொதுவாக, நாம் ஒரு சொற்பொழிவிற்குச் சென்றுவிட்டு வெளியே வரும்போது, ஏற்கெனவே நம் தலையில் இருந்த செய்திகளையும், சுமைகளையும்விட, அதிகமான சுமைகளுடன் வெளியே வருவோம்.

பேச்சாளரின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டு வருவதால்… ஏற்கெனவே, தலையில் இருக்கும் சுமையோடு, இன்னும் சிறிது சுமையையும் சேர்த்துக் கொண்டு வெளியே வருவோம்.

சொற்பொழிவு என்பது, உங்கள் தலைச்சுமையை, ஒரு விதத்தில் தலைக்கனத்தை அதிகரிக்கும் ஒரு நிகழ்ச்சி. தியான சத்சங்கம் என்பது, உங்கள் தலையில் இருக்கும் சுமையை இறக்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சி. இது உங்கள் தலையில் இருக்கும் கனத்தை இறக்கிவைக்கும் நிகழ்ச்சி.

உங்கள் தலைக்குள், மேலும் மேலும் வார்த்தைகளைத் திணிப்பதற்காகச் சத்சங்கம் நடத்தப்படவில்லை. உங்களுக்குள் இருக்கும் வார்த்தைகளைக் குறைத்து, உங்களுக்குள் இருக்கும் வார்த்தைகளை அனுபவமாக, அனுபூதியாக மாற்றுவதற்குத்தான் இந்தச் சத்சங்கங்களை நடத்துகிறோம்.

பொதுவாகவே, நாம் எல்லோரும் அனுபவத்தை நோக்கிப் பயணிப்பதாகவும், ஆன்மீக அனுபவம் நமக்கு வேண்டும் என்றும், நமக்கு நாமே ஒரு தவறான கற்பனையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நிஜ வாழ்க்கையில் நாம் ஆன்மீகத்தையும், ஆன்மீக அனுபவத்தையும் ஏற்றுக் கொள்வதே இல்லை. மேலோட்டமாக, ஆன்மீகம் சம்பந்தம் இல்லாத எந்தச் செயலை வேண்டுமானாலும் நாம் ஆன்மீகத்தின் பெயரால் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.

உண்மையைச் சொல்லவேண்டுமானால், தமக்குள் ஒரு பெரிய மாற்றத்தை எடுத்துவரும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. தம்மை மாற்றிக்கொள்ள இயலாத தைரியமின்மையே, ஆன்மீகத்தைப் பார்த்ததும் பயமாக வெளிப்படுகிறது.

ஞானக் கருத்துகளும், தியான சக்தியும் சம விகிதத்தில் ஒன்று சேரும் போது மட்டுமே, அறிவு அனுபவமாகி, அனுபூதி நோக்கி அழைத்துச் செல்லப்படுவீர்கள். முக்தி சித்திக்கும்.

Number 1 ஆன்மீக குரு

எப்பொழுதெல்லாம் எதிர்மறை சக்திகளின் தாக்கத்தால் பூபாரம் அதிகமாகின்றதோ, அப்பொழுதெல்லாம் அத்தீய சக்திகளை அழிக்கும் பொருட்டு பிரபஞ்ச சக்தி மனித உருவம் தாங்கி பூமியில் அவதார சக்தியாக அவதரிக்கிறது.

எல்லா விதத்திலும், எல்லா வழிகளிலும் கூட்டு எதிர்மறை சக்தியின் பிடியிலிருந்து மனித குலத்தை காப்பாற்றுவதையே தங்களின் நோக்கமாகக் கொள்பவர்கள் இந்த அவதார சக்திகள். மேலும் தங்கள் காலத்தில் வாழும் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிதர்சனமாக நிறைவேற்றி அவர்களின் வாழ்க்கையில் உடனடி முன்னேற்றத்தையும் அளிப்பார்கள்.

அதனால்தான் அவர்கள் அவதரிக்கும் காலத்தில் வாழ்வதே பெரும் பாக்கியம் என்று சொல்வார்கள். மேலும் அவர்களை சென்று தரிசிப்பது பெரும் புண்ணியம்.

இப்பொழுது நாம் வாழும் காலத்தில் பூத்திருக்கும் அவதார சக்தி பரமஹம்ஸ நித்யானந்தர்.

மனிதர்களின் விழிப்புணர்வு நிலையை உயர்த்துவதே கூட்டு எதிர்மறை சக்தியை அழிக்கும் ஒரே வழி என்று சொல்லும் பரமஹம்ஸ நித்யானந்தர்…

மனிதர்களை உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தி ஜீவன்முக்தராக்குவதே தம் அவதார நோக்கமாகக் கொண்டுள்ளார்.

பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் அடிமுடி காணா ஜோதி பிழம்பாக ஈசன் காட்சி தந்தருளிய போது,  நினைக்க முக்தி தரும் அண்ணாமலையாகவும், திருக்கோயிலில் வழிபடப்படும் லிங்கமாகவும், மனித உருவங்கொண்டு ஞானப்பரம்பரையாகவும் இடைவிடாது இங்கு  நான் வெளிப்பட்டுக்கொண்டே இருப்பேன் என்று ஆசீர்வதித்தார்.

அண்ணாமலையாரின் அருளாசியுடன் திருவண்ணாமலையில் அவதரிக்கும் ஞானப்பரம்பரையின் வாழும் வாரிசாம் பரமஹம்ஸ நித்யானந்தர், கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களை தியான சிகிச்சை மூலமாகவும், பல தியான பயிற்சிகளின் மூலமாகவும் மன உளைச்சலிலிருந்தும் நோய்களிலிருந்தும் விடுவித்துள்ளார். மேலும் மேலும் நம்மை உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதற்கான பணிகளை நித்யானந்த பீடம்  எனும் ஆன்மீக இயக்கத்தை உலக முழுவதும் நிறுவி செய்துகொண்டிருக்கிறார்.

உயர்த்துவதற்காக தொடர்ந்து ஆன்மீக சத்சங்கங்களை வழங்கி வருகிறார். இதுவரை 10000 மணி நேரத்திற்கு மேல் சொற்பொழிவாற்றியுள்ளார்.

இவை அனைத்தும் http://www.youtube.com/user/LifeBlissFoundation

எனும் இனையதளத்தில் பரமஹம்ஸரின் ஆங்கில பொற்பொழிவுகளையும், http://www.youtube.com/playlist?list=PL950EEDCA67AA4891 எனும் இனையதளத்தில் பரமஹம்ஸர் தமிழில் ஆற்றிய பொற்பொழிவுகளையும் இலவசமாக காணலாம்.5000 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளன. இனையதளத்தில் மிகவும் அதிகமாக பார்க்கப்பட்ட ஆன்மீக குரு என்று கருத்து கணிப்புகள் புள்ளி விபரங்களுடன் தெரிவிக்கின்றன.

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்