வாழ்க்கையில் விதி விளையாடுகிறதா??
OLYMPUS DIGITAL CAMERA
எப்போதெல்லாம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறதென நினைக்கின்றோமோ… அப்போதெல்லாம் நாம் செய்யவேண்டியது நமக்கும் நமது குறிக்கோளுக்கும் இடையில் இருக்கின்ற சத்தியத்தை ஆழமாக்குதல். அதை ஆழமாக்கிக்கொள்ளுதல். அந்தச் சத்தியத்தின் ஆழத்தை அதிகமாக்கிக் கொள்ளுதல். டீடனைெ ளிழவ ஐக் குறைத்தல். இருளகற்றல். உண்மையில் பார்த்தால். இருப்பில் இருக்கின்ற ஓட்டைகள்தான் இழுப்பிற்குக் காரணம். இருப்பு தன்னுடைய சத்தியநிலை. இழுப்பு கர்மம்.
இருப்பிலே இருள் இல்லாமல் இழுப்பு நடந்தால் அது இனிமையான தெய்வவாழ்க்கை. இருப்பிலே இருள் இருந்து இழுப்பு நடந்தால், வரப்போகின்ற செயல்வினையும், எதிர்வினையும் நாம் எதிர்பார்க்காததாக இருக்கும் என்பதால், அதை நாம் விதியென்று சொல்வோம். விதி செய்த சதியென்று பழிப்போம். நம் மதியெங்கே போனது என்று நம்மை நாமே பழித்துக்கொள்வோம். இந்த மொத்த… விதி வலியதா? மதி வலியதா? மதியையே மாற்றுகின்ற சக்தி விதியின் சதியா? அல்லது விதியையே மாற்றுகின்ற மதியே பதியா? என்கின்ற இந்த மொத்த சுழலுக்கும் கேள்விகளுக்கும் உண்மையான தீர்வு என்னவென்றால், நம் வாழ்க்கையில் நாம் எதைக் குறிக்கோளாகக் கொண்டோமோ அதற்கு நம்முடைய நேர்மையையும், சத்தியத்தையும் ஆழமாக்கிக் கொள்வது.
அப்பொழுது இருப்பின் ஆழம் அதிகமாவதனால், இழுப்பின் அகலம் குறையும். இழுப்பின் அகலம் குறைவதனால், இருள் இல்லாத சிந்தை யோட்டம் இருக்கும். இருள் இல்லாத சிந்தனை ஓட்டத்தினால், நாம் எதிர்பாராத, எதிர்நோக்காத வினைப்பயனும், செயல்பயனம், கருமப்பயனும் வராது. அதனால் வாழ்க்கையை விதியென்று பழிக்கவும் மாட்டோம். விதியின் சதியென்று இழிக்கவும் மாட்டோம். விதியென்றும், விதியின் சதியென்றும் பழிப்பதானாலும், இழிப்பதானாலும் நம்மை நாமே அழிக்கவும் மாட்டோம்.
Full Video Link
https://www.youtube.com/watch?v=C7WnjnrOQkg&fbclid=IwAR1OLzxvx__G9UHdCuwo7IQSqJi6NEFuVF_q4xQZoMu65Z1fT04o_47lzaE