பந்தத்திலிருந்து, மாயையிலிருந்து விடுபட்டு வாழும் வழி
*புரிதல் – புரியாமை,
நன்மை – தீமை,
அறிவு – அறிவின்மை,
இயலுதல் – இயலாமை
இவை எல்லாவற்றையுமே சேர்த்து,
*நீங்கள் உங்களை ‘நீங்கள்’ என்று நினைக்கின்றீர்கள், அதுதான் பசு.
இந்தப் பசுத்தன்மையில் உங்களுடைய இயலாமை, குறைத்தன்மை என்று நீங்கள் நினைப்பது, சாத்தியமற்றதன்மை, கட்டுறு மனப்பாங்கு என்று நீங்கள் நினைப்பது…
இவைகள் எல்லாம்தான் பாசம், மாயை.
அதாவது பசுவின் மீது பிரபஞ்சத்தின் பாதிப்பு – பாசம்.
*எப்பொழுது உங்களுடைய குறைத்தன்மைகள், கட்டுறு மனப்பாங்கு வாசனைப்பதிவுகள், எண்ணப்பதிவுகள் கரைகின்றதோ…
அசாத்தியம் என்று நீங்கள் உங்களை குறைப்படுத்தி கொள்கிற தன்மை மறைகின்றதோ,
அப்பொழுது உயிர்ப்பின் நிறைப்பான பதியை, பரம்பொருளை, ஈஸ்வரனை, பதியை, சுத்தாத்வைத சுகபோக அனுபூதியாக அடைய துவங்குவீர்கள்.
வார்த்தைகளின் அமைப்பு, உங்களுக்கு அறுதி சத்தியத்தை விளக்கவும், அதை நோக்கி நீங்கள் பயணிப்பதற்கு விளக்காகவும் இருக்க வேண்டும் என்கிற ஞானக்கற்போடு இந்த வார்த்தைகளை சொல்கிறேன், ஆழ்ந்து கேளுங்கள்…
இந்த பைனரி லாஜிக் (Binary Logic) என்று சொல்வோம்…
நல்லது-கெட்டது,
சரி-தப்பு,
இருக்கு-இல்லை
இதுதான் பைனரி லாஜிக்.
நாம் மொத்த வாழ்க்கையையும் இந்த பைனரி லாஜிக்கில் விளையாட முயற்சிக்கின்றோம்.
அதான் தவறு.
நல்லது அல்லாதது எல்லாமே தீயது கிடையாது.
தீயது அல்லாதது எல்லாமே நல்லது கிடையாது.
*இந்த பைனரி லாஜிக்கில் வாழ்வதுதான் மாமியாருக்கும் மருமகளுக்கு இடையில் மாட்டிக்கொண்ட கணவன் மாதிரி. இக்காலத்தில் அதற்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது.
ஏனென்றால் இந்த டிவி சீரியல்களால் கூட்டு குடும்பமே கலைந்துவிட்டது.
*கூட்டுக் குடும்பம் உறவுகளில் ஏற்படுத்துகின்ற பலம் மனித வாழ்க்கைக்கே ஆதாரம். அதை அழித்ததன் மூலமாக எங்கு பார்த்தாலும் மனிதர்கள் நாட்டிற்குள் வாழ்ந்தாலும் அனாதைகளாகத் திரிகின்றார்கள்.
*இந்துமதத்திலே நியாயம்- வைசேஷிகம் என்று சொல்வோம் எல்லா நிலையிலும், எண்ணுவதாகட்டும், உட் சிந்திப்பதாகட்டும், அறிவது ஆராய்வதாகட்டும், இந்து மத்திலே சொல்லப்படுகின்ற தர்க்கம். இந்த இரண்டு Logical process.
*எங்கு பொதுவாக்கவேண்டும் – எங்கு சிறப்பாக்க வேண்டும்
ஜென்ரலைஷேஸன் – ஸ்பெஷலைசேஷன்
இவை இரண்டையும் ஒருசேர புரிந்துகொள்ள வேண்டிய தர்க்கம்தான் நியாயம் வைசேஷிக தத்துவங்கள்.
நியாயம் வைசேஷிகம் சார்ந்து சிந்திக்கின்ற மனிதம் மட்டும்தான் இந்து மதத்தின் ஞானத்தை உள்வாங்க முடியும். மிக்பெரிய கொடுமை நவீன காலத்தின் மொத்த கல்வியும், மெக்காலேவின் கல்வியும் பைனரி லாஜிக் சார்ந்தது, நியாயம் வைசேஷிகம் சார்ந்தது அல்ல.
*இது சரியில்லை என்றால்…
உடனே தவறு என்று நினைத்து ரியாக்ஷன் (Reaction)
அந்த ரியாக்டிவ் மனம் (Reactive Mind)
எரிச்சலான, எப்பொழுதும் கோபத்தில், வன்முறையில் இருக்கின்ற மனம்…
தான் ஏமாற்றப்படுவதாகவும் வஞ்சிக்கப்படுவதாகவும் உணர்கின்ற இந்த மனம் பைனரி லாஜிக்கை அடிப்படையாகக் கொண்டது.
*பைனரி லாஜிக்தான் மனித இனத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய கொடுமை!
சரியல்லாதது எல்லாம் தவறல்ல.
தவறல்லாதது எல்லாம் சரியல்ல.
*வாழ்க்கை பைனரி லாஜிக் சார்ந்தது கிடையாது, பைனரி லாஜிக்தான் பாசம்..
*உள்ளுக்குள் இருக்கின்ற – கொந்தளிக்கின்ற சாக்கடை பைனரி லாஜிக்.
*மொத்த மனித சமூகமுமே இப்பொழுது பைனரி லாஜிக்கில் இயங்கி தன்னையும் உலகத்தையும் அழித்துக்கொண்டிருக்கின்றது.
*பைனரி லாஜிக் வாழக்கைக்கு நேர்மையானது கிடையாது.
ஏனெனில் பிரபஞ்சம் பல பரிமாணங்களைக் கொண்டது. அது எப்படி பைனரி லாஜிக்கை வைத்து அறிந்து ஆராய்ந்து வாழ்ந்துவிட முடியும்?
பலபரிமாண லாஜிக் – நியாயம் வைசேஷிகம் சார்ந்துதான் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்..
நித்யானந்தாவோட ப்ராண்டு என்னன்னா…
செய்து முடித்துவிடுவேன்…அவ்வளவுதான்..
* எது சாதிக்கிறதோ அது சத்தியம்.
எது சத்தியமோ அது சாதிக்கும்.
*உங்களுக்கு சத்தியத்தை சொல்வதுதான் என் பொறுப்பு. சாதிக்கின்ற சத்தியத்தைச் சொல்வதுதான் கடமை.
*சத்தியத்தை சாதிக்கும் விதத்திலே உங்களுக்கு சொல்வதுதான் என் நேர்மை.
*அறிவுக் கற்பும், ஞானக்கற்பும் ஒன்றாக்கி வைத்து, சாதிக்கின்ற சத்தியத்தையும், சத்தியத்தை சாதிக்கின்ற முறையையும் சொல்கிறேன்.
*’பாச’த்திற்கு விளக்கம் சொல்கிறேன்…
இது உங்களை பந்தப்படுத்துகின்ற விளக்கமாக இருக்காது. உங்களை விடுதலைப்படுத்துகின்ற,முக்தியளிக்கின்ற விளக்கமாகத்தான் இருக்கும். விளக்குகின்ற விதத்திலேயே அந்த பிரச்சினையின் ஆழத்தையும் அதிலிருந்து நீங்கள் தீர்வையும் தேடி அடைவதற்கான வழியையும் சொல்லிவிடுவதுதான் எனக்கு இருக்கின்ற அறிவு நேர்மை, ஞானக்கற்பு.
*ஆழ்ந்து கேளுங்கள்..
பைனரி லாஜிக் –
சரியில்லையென்றாலே தவறு.
தவறு இல்லையென்றாலே சரி.
இந்த பைனரி லாஜிக்கை சார்ந்து சிந்திப்பதும், செயல்படுவதும், அது சார்ந்து நீங்கள் ஏற்படுத்திக்கொள்கின்ற கட்டுறு மனப்பாங்கு, மன அமைப்பு சம்ஸ்காரங்கள் இதுதான் பாசம்.
*சத்தியம் சாத்தியம்.
சாத்தியமாவதுதான் சத்தியம்.
சத்தியத்தை சாத்தியமாக்குவதுதான் வாழ்க்கை.
*பைனரி லாஜிக்கை சார்ந்து நீங்கள் உங்களை கட்டமைத்தால் அதுதான் ‘பாசம்’.
*அதை உடைத்துவிட்டால் நீங்கள் அடைகின்ற நிலைதான் ‘பதி’.
‘பசு’ என்பது நீங்கள் இப்பொழுது எப்படி இருக்கிறீர்களோ அது.
*உயிர்ப்பின் இருப்பு ‘பசு’.
உயிர்ப்பின் மறைப்பு ‘பாசம்’.
உயிர்ப்பின் நிறைப்பு ‘பதி’.
*பைனரி லாஜிக் சார்ந்தே யோசிப்பதை நிறுத்தி,
அன்கிளட்ச் செய்து,
நிர்விகல்ப சமாதியில் இருந்தீர்களென்றாலே,
பைனரி லாஜிக்கில் இருந்து Unclutch செய்யக் கற்றுக்கொண்டீர்கள் என்றாலே,
உங்களுக்குள் ஒரு பரமசாந்தநிலை வர ஆரம்பித்துவிடும்.
அது பசுவிற்கு பதியை காட்டும்.
2 ஜனவரி, 2020 – பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய அதி சைவம் சத்சங்கத்திலிருந்து தொகுக்க பட்டது