இந்தியாவில் பெண் சந்நியாசிகளுக்கு வழங்கப்பட்ட அங்கிகாரம் ஏன் தமிழ்நாட்டிலோ திராவிடத்திலோ இல்லை?


கேள்வி : இந்தியாவில் பெண் சந்நியாசிகளுக்கு வழங்கப்பட்ட அங்கிகாரம் ஏன் தமிழ்நாட்டிலோ திராவிடத்திலோ இல்லை? மற்றும் ஏன் பெண் சந்நியாசிகளை மடாதிபதிகாளாக நியமிப்பதில்லை. ?

சுவாமிஜி: முதல் விஷயம் நீ சொன்ன புராண விஷயங்கல்ல சொல்லப்பட்டிருக்கிற, புராணங்கல்ல இல்ல, வேதத்திலே அவர்கள் சொல்லப்பட்டிருக்கிறார்கள். உபநிடதங்களில் அவர்கள் சொல்லப்பட்டிருக்கிறார்கள், மைத்ரேயியும் கார்கியும் புராண காலத்து மாதர்கள் அல்ல, வேத காலத்து உபநிடத காலத்து மாதர்கள். அதற்கும் மூத்தது. சன்யாச மந்திரமே மிகத் தெளிவாக பெண்களுக்கு சன்யாச உரிமை உண்டு என்றுதான் மந்திரமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் ஒருபுரம். நீ கேட்கின்ற இந்தக் கேள்விம்மா ஏன் தமிழ் நாட்டிலும், திராவிடத்திலும் பெண் சந்நியாசிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது? நீ சொல்கின்ற இந்தப் பிரச்சினை நிட்சயமாக நாத்திக நாராசம் பரவிய பின்பு வந்த பிரச்சினைதானே தவிர அதற்கு முன்பாக இருந்ததாக இல்லை. மங்கையற்கரசியாரைப் பார், உண்மையிலேயே பெரிய ஞானியாக வாழ்ந்திருக்கின்றார். திலகவதியார். நால்வரின் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தோமானால் பெண்களுக்கு எந்தளவில் உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கின்றது.

ஞானசம்பந்தப் பெருமான் மங்கையற்கரசியாரையும், மீனாட்சியையும் ஒன்றாகப் பாடுகின்றார். திருநாவுக்கரசர் தன்னுடைய தமக்கை அக்கா திலகவதியம்மையாரால்தான் சைவத்திற்கு மீண்டும் இழுத்து வரப்பட்டிருக்கின்றார். திருநீறு கொடுத்து, சுலையைக் குணமாக்குகின்ற சக்தி திலகவதியாருக்கு இருந்திருக்கின்றது. சுந்தர மூர்த்தி நாயனாரது வாழ்க்கையில் சங்கிலி நாச்சியாரும், பரவை நாச்சியாரும். எந்த உயர்ந்த ஸ்தானத்தை வகித்திருக்கின்றார்கள். ருத்திர கன்னிகைகளாக இருந்து சிவனும் சிவத்தொண்டும் செய்திருக்கின்றார்கள். சுந்தரமூர்த்தி நாயனாரது வாழ்க்கையைப் பார்த்தோமானால், தன்னுடைய பரம்பொருளுக்கு நெருங்கிய நண்பன் சுந்தரமூர்த்தி நாயனார். அவர்கிட் போய் சொல்றாரு, கவலப்படாத நீ சொல்கின்ற மாதிரித் திருவொற்றியுரில் நீ சத்தியம் பண்ணுகின்ற நேரத்தில் நான் கோவிலில் இருந்து வௌியே வந்து வன்னி மரத்திற்குக்கீழ் இருந்திருக்கின்றேன் அப்படீன்னு சொல்லிட்றாரு. சொல்லிவிட்டு, அந்தம்மாவின் கனவில் சென்று, நீ அவனை கோவிலில் சத்தியம் கேட்காமல், வன்னி மரத்திற்குக்கீழ் சத்தியம் பண்ணச் சொல்லுவென்று.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சதாசிவப் பரம்பொருளுக்கும் இருந்த அந்த நெருக்கம், அவர்களுக்கும் பெருமானுக்கும் இருந்திருக்கின்றது. சைவத்தைத் திரும்பிப் பார்த்தோமானால், தமிழ்நாட்டிலே வேரூன்றியிருந்த ஆன்மீக இயக்கங்களைத் திரும்பிப் பார்த்தோமானல், நிட்சயமாகப் பெண்களுக்கு இடமில்லையென்று என்னால் சொல்ல முடியவில்லை. சந்நியாசம் இல்லையென்றும் என்னால் சொல்ல முடியவில்லை. சந்நியாசிகள் இருந்திருக்கின்றார்கள்.

ஔவைப் பிராட்டி வாழ்க்கை முழுவதும் சந்நியாசியாக வாழ்ந்திருக்கிறார். சித்தர்க்ள், பல பெண் சித்தர்கள் இருந்திருக்கின்றார்கள். மடாதிபதிகளாகப் பெண்கள் இல்லை என்பதை என்னால் ஒரு முழுமையான கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சைவம் எனும் மிகப் பெரிய சம்பிரதாயம் மனித இனத்தின் சரிபாதியான பெண்மைக்கு மறுக்கப்பட்டிருக்கச் சாத்தியமேயில்லை.

இடைச்செருகல்களும், இஸ்லாமியப் பயங்கரவாதப் படையெடுப்புகள் போன்ற காலங்களிலும், பாதுகாப்புக்கருதி மடாதிபதிகள் போன்ற பொறுப்புக்களில் நியமிக்கப்படாமல், அல்லது கலந்து கொள்ளாமல் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கின்றதே தவிர கல்வெட்டுக்களைப் புரட்டிப் பார்த்தோமானால், பல இடங்களில், சிவாச்சாரியார்களைப்போல, பீடாதிபதிகளைப்போல ருத்திர கன்னிகைகள் பல்லக்கிலே வந்து பெருமானுக்குப் பூஜை செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். மடாதிபதிகள் அறக்கட்டளைகளை நிறுவியதுபோல ருத்திரகன்னிகைகள் நித்திய பூஜைகளுக்கு அறக்கட்டளைகளை நிறுவி வைத்திருக்கிறார்கள். பெண்களுக்கான சந்தியாச மடங்கள், சந்நியாச பீடங்கள் நிச்சயமாக இருந்திருக்கின்றது.

பெண்களே குருவாக இருந்திருக்கின்ற பீடங்களும் மடங்களும் இருந்திருக்கின்றது. இஸ்லாமியப் பயங்கரவாத போர்களின்போதும், படையெடுப்புகளின்போதும், அந்தக் காலகட்டத்தில் உருவான சைவ சம்பிரதாயங்கள் பெண்களைப் பீடங்களில் அமர்த்துவதில்லை என்கிற முடிவை பாதுகாப்புக் கருதி எடுத்திருக்கலாமென நினைக்கின்றேன். தவிர, வடநாட்டு வேதாந்த சம்பிரதாயங்களில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட இடம் தென்னாட்டு சம்பிரதாயங்களில் அளிக்கப்படவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை இந்த நாத்திக நாராசக் கூத்தடிப்பினால் அது குறைந்திருக்கின்றதென நினைக்கின்றேன். அதைச் சரி செய்வதற்காகத்தான் உங்களையெல்லாம் உருவாக்கியிருக்கின்றேன். அனுப்புகின்றேன். ஏன் இப்படி என்பவர்கள் சாதாரண மனிதர்கள்? எப்படி மாற்றுவது என்பவர்கள் நித்யானந்தரின் சீடர்கள். நிச்சயமாகப் பெரும் சித்தர்களும், ஞானிகளும் மடாதிபதிகளும், துறவிகளும், சந்நியாசிகளுமாக எல்லாவிதமான நிலைகளிலும் பெண்களும் இருந்திருக்கின்றார்கள். நடுவில் சற்றுத் தொய்வு ஏற்பட்டிருக்கின்றது.

மீண்டும் அந்தத் தொய்விலிருந்து நாம் எழுந்து வௌியில் வந்து சைவத்தில் பெண்மைக்குச் சமபங்களித்து, அவர்களுக்கும் சம உரிமை தந்து, அவர்களும் சைவம் தழைக்க பங்களிப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய பொறுப்பு நம்முடையது.
– பகவான் நித்யானந்த பரமசிவம்

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளும் தமிழ் சத்சங்கம்
Full video Link

https://www.youtube.com/watch?v=C7WnjnrOQkg&fbclid=IwAR1OLzxvx__G9UHdCuwo7IQSqJi6NEFuVF_q4xQZoMu65Z1fT04o_47lzaE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்