மூல லிங்கம் – மூலவர் லிங்கம் சர்ச்சை
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிமர் தொலைக்காட்சி பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் தமிழ் தியான சத்சங்கத்தில், அவர் தன் பூர்வஜென்மத்தில் எழுப்பிய மேட்டூர் சிவாலயத்தின் மூல லிங்கம் – என்று அவர் சொன்னதை, அதன் ஆன்மீக மொழியின் உண்மையான அர்த்தம் புரியாமல் தவறாக வெளியிட்டிருக்கிறர்கள். அவர்களுக்கு அதன் உண்மையான அர்த்தத்தை இந்த வீடியோவில் பரமஹம்ஸர் அவர்கள் விளக்கியருளியிருக்கின்றார்கள்.
“பூசலார் நாயனார் தன்னுடைய மனத்திற்குள்ளே சிவாலயம் அமைப்பதற்கான மூல லிங்கத்தை அமைக்கிறார்.
நன்றாக புரிந்துகொள்ளுங்கள்…
மூல லிங்கம் என்றால்…
என்னவென்றால்…
சக்தி மண்டலத்தாலே பாலாலயமாக தங்கள் உயிருக்குள்ளே பிராணபிரதிஷ்டை செய்வதற்காக அமைப்பதுதான் மூலலிங்கம். மூலவர் லிங்கம் வேறு…மூல லிங்கம் வேறு…
மூலவர் லிங்கம் என்றால் ஸ்தூலமாக இருக்கும்.
கருங்கல்லாலோ…
அல்லது…
பல்வேறுவிதமான….
தங்கத்தாலோ…
வெள்ளி யாலோ…
மரத்தாலோ…
எந்த பொருளால் வேண்டுமானாலும் செய்யப்பட்டு…ஸ்தூலமாக செய்து வைக்கப்பட்டிருக்கின்ற லிங்கம் மூலவர் லிங்கம். மூல லிங்கம் என்றால்…
தன்னுடைய உயிராலே, தியானத்தாலே, சக்தி மண்டலத்தாலோ உருவாக்குவது மூல லிங்கம். நான் மேட்டூரில் போன ஜென்மத்தில் அமைத்த ஆலயத்தின் மூல லிங்கம் என்னிடம் உள்ளது என்று சொன்னது அந்த சக்தி மண்டலம் …
மூலவர் லிங்கமான ஸ்தூல லிங்கம் இன்னும் அந்த கோயிலுக்குள்தான் இருக்கிறது.
நான் சென்று அந்த கோயிலை பார்த்தபோது, அது ஏற்கனவே மூழ்கிவிட்டிருந்தது. தண்ணீர் வடிந்திருந்தபோதுகூட சேறும், சகதியும் சேர்ந்து மூழ்கிவிட்டது. கருவறைக்குள் போக முடியாது யாரும் அப்போ… என்னாலேயே போக முடியவில்லை…
தூரத்திலிருந்து பார்த்து ப்போட்டோ வீடியோ எடுத்து வந்துவிட்டோமே தவிர…நான் மூல லிங்கம் என்று சொன்னது…சக்தி மண்டலத்தை… அந்த இடத்தில் பிராண பிரதிஷ்டை செய்வதற்கான சக்தி மண்டலத்தை போன பிறவியில் நான்தான் உருவாக்கினேன்…
இப்போது அந்த சக்தி மண்டலம் என்னிடம் இருக்கிறது என்று சொன்னேன்… ஸ்தூலமான மூலவர் லிங்கம் கிடையாது…
இந்த வார்த்தை இரண்டையும் புரிந்து கொள்ளுங்கள்…
மூல லிங்கம் வேறு…
மூலவர் லிங்கம் வேறு…
மூலவர் லிங்கம் என்பது பிசிக்கலாக (Physical) பிரதிஷ்டை பண்ணப்படுகிற லிங்கம்.
மூல லிங்கம் என்பது அங்கு பிராண பிரதிஷ்டை பண்ணப்படுகிற ஞான சக்தி மண்டலம்.”