உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ளுங்கள் – இல்லையேல் உயிர்கூட இருக்காது

கேள்வி:

சுவாமிஜி! உன் குருவை ஒருவர் அவதூறு செய்தால் அவருடைய நாக்கை அறு என பகவான் இராமகிருஷ்ணர் சொல்லியிருக்கின்றார்.  சுவாமிஜி எங்கள் குருவான உங்கள் கருத்து என்ன?  எம் பக்தர்களுக்கு நீங்கள் என்ன ஆணை கொடுக்கிறீர்கள்?

சுவாமிஜி:: 

அம்மா! அலியென்றும் விளிக்கப்பட்டுவிட்டேன்.  ஆண்டவன் என்றும் விளிக்கப்பட்டுவி்ட்டேன். 

விளிக்கப்படுவதனால் களிப்பும், வலிப்பும் இல்லாத நிலையை என்றோ பார்த்துவிட்டேன். விளிக்கப்படுவதனால் கழிப்பும் இ்ல்லை.  வலிப்பும் இல்லை.  விளிக்கப்படுபவன் களிப்பும், வலிப்பும் இல்லாதவன் என்பதனால், விளிப்பவர்கள் செய்வது சரியென்று அர்த்தமில்லை.  விளிக்கப்படுபவன் வலிப்பும், களிப்பும் கடந்தவன் என்பதானல், விளிப்பவர்கள் சரியானவர்கள் என்பது பொருளல்ல. 

அதாவது. எதிர்வினையாக எதுவுமே செய்ய வேண்டியதில்லை.  ஆனால், இவர்களுக்கு பதில் சொல்லாமல் இருந்தால் என்னை மட்டுமல்ல, எந்தச் சத்தியத்திற்கு நான் பலமாக நிற்கின்றேனோ அந்தச் சத்தியத்தை அழிக்க முயற்சிக்கின்றார்கள்.  சம்பிரதாயத்தை அழிக்க முயற்சிக்கின்றார்கள்.  சட்டத்திற்கு உட்பட்டு இவர்களுக்கு எல்லாவிதமான பதிலும் சொல்லியே தீரப்பட்டாக வேண்டும். 

ஒருவேளை இராமகிருஷ்ணர் இருந்த காலத்தில் நாக்கை வெட்டுவது சட்டத்திற்கு உட்பட்டு இருந்ததோ இல்லையோ என எனக்குத் தெரியாது.  இப்போதைய சுழ்நிலையில் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு, உங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ளுங்கள்.  உங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள மறந்தால், உயிர்கூட இருக்காது.  எனெனில் முதலில் ஓட்டகம் கூடாரத்திற்குள் தலையை விடும்.  நீங்கள் அதைக் கவனிக்காது விட்டீர்களானால் ஒட்டகம் கூடாரத்திற்குள் இருக்கும்.  நீங்கள் வௌியில் கிடப்பீர்கள்.  முதலில் அவர்கள் உங்கள் உரிமைகளில்தான் தலையிடுவார்கள்.  பிறகு உங்கள் உடமைகளில் தலையிடுவார்கள்.  பிறகு உங்கள் உயிரையே எடுத்துவிடுவார்கள்.  விளிக்கப்படுவதனால் வலிப்போ, களிப்போ எனக்கு இல்லை என்பது வேறு.  அதற்காக விளிப்பவர்கள் செய்வது சரியாகிவிட முடியாது.  நீங்களும் உங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளாது, நிலைநாட்டிக்கொள்ளாது இருந்துவிட முடியாது.  சட்டத்திற்கு உட்பட்டு உங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ளுங்கள்.  இது உங்கள் கடமை.  இல்லையேல் உயிர்கூட இருக்காது. 

முழு விடியோவை காண…

‘அவதாரத்தோடு ஆன்மீகக் கேள்விகள்’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்