கோஆலயம் – வளமை நிறைந்திருக்கும் ஆலயம்
வேத பாரம்பரியத்தில்…
பசு அனைத்துயிர்களுக்கும் அன்னையாக பாவிக்கப்படுகிறது. பூதேவியான பூமித்தாயின் அவதாரமாகவும் வழிபடப்படுகிறது. இந்து சாஸ்திரங்கள் தெய்வீக காமதேனுவை வரங்களை அருளும் பசுக்களின் கடவுள் என்று போற்றுகிறது. பூமியில் இருக்கும் எல்லாப் பசுக்களும் காமதேனுவின் உருவகம் என போற்றுகிறது.
கோமாதா எல்லா மங்களத் தன்மைகள், பலம் மற்றும் வளங்கள் ஆகியவற்றின் அடைக்கலம். மேலும் கோமாதா வசிக்கும் இடத்தில் மகிழ்ச்சி, செழிப்பு, வளமை நிறைந்திருக்கும். ஓவ்வொரு இல்லத்திலும் கருணைமிக்க இந்த பசுக்களை பேணி வளர்த்தார்ஞி த்விஜர்களான பிராமணர்களுக்கு பசுக்களை தானமளிப்பது என்பது அவர்களுக்கு உயர்ந்த செல்வத்தை தானமளிப்பதைவிட சிறந்த புண்ணியத்தை தரும்.
கோமாதாக்கள், அனைத்து வேத பாரம்பரிய விழாக்களின் பலனாக இருக்கிறது. ஏனெனில் அனைத்து புனிதச் சடங்குகளும் இந்த மொத்த இருப்பை வளப்படுத்தும் கோமாதாவின் பரிசுகளான நெய் போன்ற பொருட்களைச் சார்ந்தே நடக்கின்றது.
கோமாதாவிலிருந்து சுரக்கும், பால் கோமியம், சாணம் உட்பட எல்லாப் பொருட்களும் புனிதமானது. இது பல வியாதிகளுக்கு மருந்தாகவும் திகழ்கிறது. சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்து தெய்வீக சக்திகளை வரவேற்பதற்கும் கோவின் சாணத்தால் வாசலை அலங்கரிப்பது இல்லங்களிலும் ஆலயங்களிலும் வழக்கமாக இருந்து வந்து விடுகிறது. இது தெய்வீக சக்தியை வரவேற்கும், ஈர்க்கும்.


