இந்துமதத்தை காத்திட வாருங்கள் என் சன்யாச வாரிசுகளே!
குறிக்கோள் புரியாத வரைதான் எந்த செயலும் தியாகம்போல் தோன்றும்.. குறிக்கோளும் நோக்கமும் புரிந்தால் அது தியாகமாக இல்லாமல் வாழ்வை வாழ்வதற்கான உத்சாகமாக மாறிவிடும். பரமசிவப் பரம்பொருள் பூமிக்கு வந்துவிட்டார், தான் எடுத்துவந்த பொக்கிஷங்கள் நிறைந்த பெட்டியைத் திறந்துவிட்டார்! யாரெல்லாம் தன் உயிரைத்திறந்து மடிப்பிச்சை வாங்கிக்கொள்கிறீர்களோ.. அவர்கள் வளமடைவார்கள்! வாங்கிக்கொள்ளுங்கள்..
வாங்கும் துணி காவியாக இருந்தால்தான் விழுவதில் 90 சதவிகிதம் நிற்கும், வண்ணநிறமாக இருந்தால் 10 சதவிகிதம்தான் நிற்கும். காவி உயிரை உயிர்ப்பிக்கும் அக்னிக்குள் நுழைவது! நம்மை நாமே இந்த மிகப்பெரிய அக்னிக்குள் ஆகுதியாய் அளித்துக்கொள்வதே காவி! யாரெல்லாம் இந்துமதும் தன் உயிர் என்று நினைகின்றீர்களோ.. அவர்கள் எல்லாம் ஆதிசங்கரரைப்போல சன்யாசம் எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்துமதம் காத்திட சன்யாசப் பாரம்பரியம் உயிர்த்தெழ வேண்டும்! நாகா சாது சம்பிரதாயம் மீண்டும் மலர வேண்டும்.
உங்கள் ஒவ்வொருவரின் மூலமாகவும், நீங்களும் இந்த பரமசிவஞானத்தை வாழ்ந்து உங்கள் வாழ்க்கையும் மேம்பட்டு, உங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பரமசிவக்ஞானத்தை வாழ்ந்து அவர்கள் வாழ்க்கையும் மேம்படுத்துவதற்காகத்தான் என் வாழ்க்கையைத் தியாகம் செய்திருக்கின்றேன்.
நான் வீர உரை ஆற்றவில்லை..
என் சேனைக்கு அழைப்பு விடுக்கின்றேன்..
காப்போம் பரமசிவஞானத்தை!
உலகிற்கெல்லாம் அளிப்போம்!