காமத்தை தூண்டும் வெறும் களியாட்டங்களும், மதுவும் திராவிஷத்தின் திராவகம்
திராவிஷ நாத்திகம் மனித இனத்திற்கு பல கொடுமைகளை செய்திருக்கிறது. அதில் மிகப்பெரிய கொடுமை ஆதிசைவத்தின் சாத்தியக்கூறுகளை எல்லாம், அழித்து, அதற்கு இருந்த சாத்தியக்கூறுகளை எல்லாம் சின்னாபின்னப்படுத்தி, நம் வரலாறு அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் அழித்து, வரலாற்றை இழந்த இனம் – வேர் அற்ற மரம்.
*திருவள்ளுவர் நெற்றியில் இருந்த திருநீறு அழிப்பட்டது ஏதோ ஒரு போட்டோவில் நிகழ்ந்தப்பட்ட மார்பிங் அல்ல..
எதிர்கால மொத்த தலைமுறை இளைஞர்களின் நெற்றியில் இருந்து அழிக்கப்பட்ட திருநீறு!
*திராவிஷம் செய்த கொடுமைகளில் ஒரு பெருங்கொடுமை, அதிசைவ ஞானவிஞ்ஞானங்களின் சாத்தியங்களை மறுத்து…
அந்த சத்தியம் சாத்தியம் அல்ல என்று உங்களை நம்ப வைத்தது!
*கடந்ததை சத்தியமாக மாற்ற முடியும்..
நான் ஏன் இவ்வளவு இணையதளத்தை செலவழித்து, நித்யானந்தா டிவி என்று ஒரு தொலைக்காட்சியை வைத்துக்கொண்டு, இப்படி நடு இரவில் சத்சங்கம் என்ற பெயரில் உங்களை எல்லாரையும் அழைத்து தேவையற்ற கதையையா நான் பேசிக்கொண்டிருக்கப்போகிறேன்.?
*உங்களுடைய சாத்தியம் அது சத்தியம், அதைச் சொல்வதற்காகத்தான் இத்துனை பேருழைப்பும் செய்துகொண்டிருக்கின்றேன் மக்களே! அதைப்புரிந்துகொள்ளுங்கள்..
*தமிழினமே விழித்துக்கொள்!
அளவுக்கு மீறிய சாராயம்….
சாராயத்தினால் வெறும் சில மணிநேரமும், சில ஆயிரம் ரூபாயை மட்டும் இழப்பதாக நினைக்காதீர்கள். உயர்ந்த அறிவியல் ஞான அறிவியல் சத்தியங்களை கிரகிக்கின்ற மூளையை முழுமையாக இழந்துவிடுகின்றீர்கள். தலைமுறைக்கும் இழந்துவிடுகிறீர்கள்..
மதுவிற்கு அடிமையான இரண்டாவது தலைமுறைக்கே.. மார்புக்கூட்டின் அளவேக் குறைந்துவிடும்..
மீனாட்சி அம்மன் ஆலயம்,
தஞ்சை பெரியகோவில்,
திருவண்ணாமலை…
இக்கோவிலில் பார்த்தீர்களென்றால் நம்மடைய சோழ மன்னர்கள் சிலை எல்லாம் கற்பனை அல்ல. உண்மையிலேயே நம்முடைய முன்னோர்கள் 7 அடி உயரம் ஆஜானுபாகுவாக இருந்திருக்கிறார்கள்.
எந்தவிதக் கணினியின் தானியங்கு கணக்கின் உதவியும் இல்லாமல்.. தஞ்சைப் பெரியக்கோவில் மாதிரி ஒரு ஆலயத்தை விஷுவலைஸ் செய்கின்ற திறன் சாதாரணமானது அல்ல..
நான் பெங்களுரில் ஒரு ஆலயம் அமைத்துக்கொண்டிருக்கிறேன்.. கடந்த 10 வருடங்களாக.. கணினியில் பல புதிய நவீன மென்பொருட்களின் உதவியோடு.. 25க்கும் மேற்பட்ட ஸ்தபதிகளோடு வேலைப்பார்த்து…
என் சன்யாசிகள் இந்துத் துறையில் படிக்க வைத்து, இன்னமும் நாங்கள் மொத்த ப்ராஜெக்டையும் உள்வாங்கித்தான் முடித்திருக்கின்றோம். அதற்கே 10 வருடம் ஆகிவிட்டது.
*முழு ஆலயத்தையும் 6 வருடத்தில் கட்டி முடித்துவிட்டான் இராஜராஜன்.
உண்மையில் பார்த்தால், அரசர் மட்டுமல்ல, அரசனைச் சுற்றியிருக்கின்ற முக்கியமான ஒரு 1000 பேராவது அந்த முக்கியத்துவத்தை உணர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் கட்டாயப்படுத்தி இதைச் செய்ய வைக்க முடியாது. இது காவியம்.
நானும் எப்படியாவது ஒரு கோவிலாவது.. அதுமாதிரி பரமசிவனுக்கு கட்டிவைத்துவிடலாம் என்று நினைத்தேன். உள்வாங்குவதற்கே 10 வருடம் ஆகிறது. 2007ல் துவங்கினோம்.. எப்படியாவது உலகத்திலேயே உயரமான கருங்கல் திருப்பணி, கருங்கல் ஆலயம் பரமசிவப்பரம்பொருளுக்கு செய்துவிட வேண்டும் என்று நினைத்தேன்.
புரிந்துகொள்ளுங்கள்.. எந்த ஆலயத்தையும் நான் குறைசொல்லவில்லை.. ஆனால் எந்த அளவிற்கு effort போயிருக்கிறது என்று பார்த்தோமானால், திருவண்ணாமலை, மதுரை, சிதம்பரம், திருவாரூர் இந்த 4 கோவிலையும் சேர்த்து, எந்த அளவிற்கு effort போடவேண்டுமோ.. அது மொத்தத்தையும் போட்டால்தான் தஞ்சைப் பெரியகோவிலை செய்து முடிக்க முடியும்.
தமிழ்நாட்டில் கரடி மலை என்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தில் ஒரு பெரிய சிவன் சிலை செய்திருக்கிறார்கள் அது துரதிஷ்டவசமாக கால் உடைந்துவிட்டது.
*அதேமாதிரி பரமசிவனுக்கு ஒரு 108 அடி உயரத்தில் ஒரு சிலை செய்து அமெரிக்காவின் east Coastல்… STATUE OF LIBERATION என்று வைக்கலாம் என்று திட்டமிட்டோம்.
*அமெரிக்காவிற்கு Concept of liberty -ஐ west coast கொடுத்தது .
Concept of Liberation -ஐ eastern civilization தான் கொடுத்தது. அதனால் STATUE OF LIBERATION க்கு சிலை வைக்க வேண்டும். பரமசிவன் தான் STATUE OF LIBERATION.. அதனால் அவருக்கு சிலை வைக்கலாம் என்று கடந்து 5 வருடமாக அதற்கான ஆராய்ச்சிகளைச் செய்து சாத்திக்கூறை ஆராய்ந்து அறிவுரீதியாக உள்வாங்கியிருக்கின்றோம்.
இதற்குள்ளேயே பல திட்டங்களை போட்டுப்பார்த்துவிட்டோம்.
* அப்பொழுதுதான் நினைத்துப்பார்த்தேன்…
இராஜராஜனுக்கு
என்னத் தௌிவு,
என்ன திறமை,
என்ன ஆழமான அறிவு,
எத்துணையாயிரம் பேரை இராஜராஜன் convince செய்திருக்க வேண்டும் இந்தத் திருப்பணியின் முக்கியத்துவத்தைப் பற்றி.
*இந்த ஆராய்ச்சி என்கிற பெயராலே…
இந்து மதத்தையும்,
ஆதிசைவத்தையும்
அவதூறு செய்வது இந்த திராவிஷத்திற்கு ஒரு வாழ்க்கை முறை.
*இந்த தஞ்சை பெரியகோவில் இராஜராஜன் தனக்கு கட்டிக்கொண்ட சமாதி என்று ஆராய்ச்சி என்கிற பெயராலே பரப்பி வருகிறார்கள்.
தஞ்சை ஆலயம் இராஜராஜன் பரமசிவனுக்கு செய்து வைத்த ஆலயம்தான்!
அப்படியே அது அவருக்காக எழுப்பியிருந்த சமாதியாக இருந்தாலும், தவறில்லை…
இவ்வளவு பெரிய அறிவு, ஆற்றல், தைரியம், பரம்பொருள் பரமசிவத்தின் அருள் ஆற்றல். சர்வவியாபம் பேரருள் குணத்தை உணர்வாலும் உள்ளத்தாலும் சிந்தித்தனால் விரிந்த மூளையினால் மாத்திரம்தான் இந்த மாதிரி ஒரு பெரிய visulaisation ஐ செய்ய இயலும்.
*பெருங்கைலாயத்தின் இயற்பியலை.. தட்சிண கைலாயமாக பிரகதீஸ்வரர் ஆலயமாக பூமியில் செய்து வைக்க இயலும்.
இது home grown knowledge. ஆதனால்தான் தஞ்சை முடிந்தவுடன் அப்படியே அடுத்த தலைமுறை ஸ்தபதிகளையும் விஞ்ஞானிகளையும் வைத்து அடுத்து உடனே கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டியிருக்கிறார்கள்.
*தமிழினமே எத்துனை பெரிய சமூகம் நீ
எத்துனை பேராற்றலோடு, பேரறிவோடு திகழ்ந்தாய் நீ
சைவம் உன் உயிரின் அறிவியல்,
சைவம் உன் உயிரின் சாத்தியம்.
*சைவம் பிரபஞ்சப் பெரும் சக்திகளை, பிரம்மாண்டத்தின் அறிவியலை, ஆற்றலை…
பிண்டாட்டத்தின் அறிவியலாய் ஆற்றலாய் மாற்றும் விஞ்ஞானம்.
*சைவம் துறந்த தமிழன் வேரற்ற மரம் ஆனான். தமிழ் வரலாறும், தமிழ் அறிவும், தமிழ் ஞானமும், தமிழனின் உயிர்ப்பும் சைவம் என்று தெரிந்ததனால்தான் திராவிஷம் சைவத்தின் வேறுக்கு திராவகத்தை ஊற்றியது.
தமிழா விழித்துக்கொள்…
தமிழினமே விழித்துக்கொள்!!
உன் சாத்தியக்கூறுகள்..
இறையனார் எம்பெருமான் சுந்தரேசப்பெருமான் சித்தராய் திருமேனித் தாங்கி வந்து, கல்யாணைக்கு கரும்பூட்டியதும், கிழவனை குமரனாக்கி, குமரனை கிழவனாக்கி லீலைகள் செய்தது எல்லாம் கதை அல்ல…
வரலாறு!
வரலாற்றகை் கதையாக்கி அதைப் புரளி என்று உன்னை நம்பவைத்து, காமத்தை தூண்டும் வெறும் களியாட்டங்களும், மதுவும் திராவிஷத்தின் திராவகம்
* ஒரு இனத்தையே அழிப்பதற்கான,
ஒரு இனத்தை அடிமைப்படுத்துவதற்கான technology, methodology இந்த இரண்டு தான்.
முதலில் மது.
நான் மது என்று சொல்வது வெறும் alcohol மட்டும் அல்ல.
உயிரின் உயிர்ப்பு தன்மையை அற்றதாகும் உணவுவகைகள் – இதையும் சேர்த்துதான் மது என்று சொல்கின்றேன்.
* DNA structure evolve ஆகி, most subtle ஆன Cosmic Knowledge Sciencesஐ, principlesஐ, grasp பண்ணிக்கொள்கின்ற brain grooves develop ஆகறதுக்கு vegetarian தான் best food.
* ஒரு காலத்தில் ஒரு வேலை வேதங்கள் உருவான காலத்தில் மனிதர்கள் சில சடங்குகள் காலத்தில், அபூர்வமாக அசைவ உணவு சாப்பிட்டு இருக்கலாம். அதற்கான reference குறிப்புக்கள் இருக்கலாம். ஆனால் அது ஒரு regular உணவு கிடையாது. அதுமட்டும் இல்லாமல் அதற்கு பிறகு வேதங்களில் பெருமான் அருளிய சத்தியங்களை சார்ந்து மனித இனமும், மனித மூளையும் மிகுந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது.
* இந்த வளர்ச்சிக்கு தேவையான உணவையும் வாழ்க்கை முறையையும் நாம் உருவாக்கி கொள்ளவேண்டியது நமது கடமை. பெருமான் அதற்கு மிக தெளிவாக வேதங்களிலும், ஆகமங்களிலும் விளக்கி இருக்கிறார்
* ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்…
மது…
உடலின் சாத்திய கூற்றையும். உங்கள் Physical system, Physiological system – இந்த இரண்டினுடைய சாத்திய கூற்றையும் gutsம் அழித்துவிடும்.
* இரண்டாவது
Extreme sex violence based entertainment உங்களுடைய psychological mental conscious possibilities ஐ அழித்துவிடும்.