நீங்கள் சொல்வதையும் உலகம் கேட்டே தீரும்
விவேகானந்தர் மிக ஆழமான ஒரு சத்தியத்தைச் சொல்கின்றார். விவேகானந்தருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி…
மேலைநாட்டுக்கு சென்று…அமெரிக்காவில் சிகாகோவில் சர்வமத சபையில் பேசறார். முதல் முறையாக மேடையில் ஏறியவுடன் முதல் வார்த்தையாக அவர் சொன்ன வார்த்தை…‘அமெரிக்க நாட்டு சகோதர சகோதரிகளே’… என்று சொல்றார். உடனே அடுத்த ஒரு 10 நிமிடத்திற்கு கர ஒலி, கரகோஷம் மக்களுடைய வரவேற்புத் தாங்க முடியாத அளிவற்கு இருந்தது!
நன்றாகத் தெரிந்துக்கொள்ளுங்கள்…அவர் சொன்ன ‘வார்த்தை’ ஒன்றும் பெரிதான ஒன்று அல்ல…‘சகோதர சகோதரிகளே’…என்று சொல்றார். அது ஒன்றும் பெரிதான ‘வார்த்தை’ இல்லை. நாம் மேடை மேடையாக கேட்கிறோம். சாதாரணமாக எல்லாருமே இந்த வார்த்தையைதான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சாதாரண மனிதர்கள் அதே வார்த்தையை உபயோகம் பண்ணும்பொழுது அந்தத் தாக்கம் ஏற்படாமல், விவேகானந்தர் உபயோகித்தபொழுது ஏன் அந்தத் தாக்கம் ஏற்பட்டது?
விவேகானந்தர் உணர்ந்து உபயோகித்தார். அதுவெறும் வார்த்தை அல்ல.அவருடைய வாழ்க்கை!
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்… சமஸ்க்ருதத்தில் ‘ஒஜஸ்’ என்று சொல்லுவோம். அதன் பொருள்…உணர்ந்து அனுபவித்து ஒரு வார்த்தை சொல்லப்படும்பொழுது கேட்பவர்கள் முழுமையாக அதை உள்வாங்கியேத் தீரவேண்டும்.
மூளையிலந்து மட்டும் அந்த வார்த்தை வருமானால், அது கேட்பவர்களுடைய மூளையை மட்டும்தான் தொடும்.சொல்பவர்களுடைய இதயத்திலிருந்து அந்த வார்த்தை வந்தால், அது கேட்பவர்களுடைய இதயத்தை மட்டும்தான் அது தொடும்.
சொல்பவருடைய அனுபூதியிருந்து அந்த வாரத்தை வருமானால் – கேட்பவருடைய அனுபூதியாக அது மாறியேத் தீர வேண்டும். இதைத்தான் ‘ஓஜஸ்’ என்று சொல்கிறோம்.
சொல்பவரும் தன்னுள் அனுபூதியாக அடையாமல் சொன்னால்,
கேட்பவர்களுக்கும் அந்த வார்த்தை அனுபூதியாக மாறாது. அந்த வார்த்தை தாக்கத்தை ஏற்படுத்தாது.
சொல்பவருக்கு அது அனுபூதியாக மாறியிருக்குமேயானால் கேட்பவர் அதை அனுபூதியாக கேட்டேத் தீரவேண்டும்! உணர்ந்தே தீர வேண்டும்! இது அடிப்படையான ஒரு சத்தியம்! இதை ‘ஓஜஸ்’ என்று சொல்றார் விவேகானந்தர்.
சொல்பவர் உணர்விலிருந்து அந்த வார்த்தை வந்தால் – கேட்பவர் உணர்வை அது தொட்டேத் தீரவேண்டும்.
பேசும்பொழுதே எண்ணம் ஓட்டம் பாதி – பேச்சு பாதி என்று இருந்தால்…பாதியாக நீங்கள் இருந்தீர்கள் என்றால் கேட்பவர்களும் பாதியாக கேட்பார்கள். ஆனால் சொல்லும்பொழுது நீங்கள் முழுமையான அனுபூதியோடு சொன்னால் கேட்கும்பொழுது அவர்களும் முழுமையான அனுபூதியோடு கேட்டேத் தீர வேண்டும்!
நவீன பெரியமேடைப் பிரச்சாரகர் மேடையில் ஏறி, ‘நீங்கள் எல்லோரும் என்னுடைய சகோதர சகோதரிகள்’ என்றாராம். இவர் அரைகுறையாக பேசுவதால்… கேட்கிறவரும் அரைகுறைாயகத்தானே கேட்பார்கள்.
அங்கே உட்கார்ந்திருந்த ஒரு நபர் சொன்னாராம்… ‘அப்ப உங்க சொத்துல பாதி குடுங்க’ அப்படீன்னு சொன்னாராம்! உங்கள் சொத்தில் பங்கு குடுங்க அப்படீன்னாராம்!
இந்த மேடைப் பிரச்சாரகர் கொஞ்சம் புத்திசாலி. உடனே,‘ இந்தா 10 பைசா’ என்று 10 பைசா காயின் எடுத்துக் குடுத்தாராம். ‘இந்தாப்பா உன் பங்கு’ என்று சொன்னாராம்.
சொத்து கேட்டவர் கேட்டாராம், ‘என்னப்பா வெறும் 10 பைசா குடுத்துட்டு, சொத்துல பங்கு குடுத்துட்டேன்னு சொல்றியே?’ என்று கேட்டாராம்.
இவர் சொன்னாராம், ‘எனக்கு இவ்வளவு சகோதர சகோதரிகள் இருக்காங்களே… எல்லாருக்கும் குடுக்க வேண்டாமா?’ அப்படீன்னாராம்.
சகோதர சகோதரிகள் –
வெறும் ஒரு சமூக வழக்காக இந்த வார்த்தைகள் மாறிவிட்டன. ஆனால் விவேகானந்தர் சொல்லும்பொழுது அதை உண்மையிலேயே உணர்ந்து சொன்னதனால் அனுபூதியிலிருந்து அந்த வார்த்தை வந்ததனால் அமெரிக்காவே குலுங்கியது!
வெறும் இரண்டு வார்த்தைகளால் ஒரு நாட்டையே வென்றுவிட்டு வந்தார். ஒரு நாட்டையே ஆன்மிக அனுபவத்திற்குள் போட்டு வந்திருக்கார் விவேகானந்தர்.
– #பகவான் நித்யானந்த பரமசிவம்