அவதூறான செய்திகளை எப்படி எதிர்கொள்கின்றீர்கள்?
நான் ஒழுக்கம் கெட்டவன் என்ற பொய் பிம்பத்தை உருவாக்கி… தொடர்ந்து மக்களுக்கு அதை பரப்பி… மக்களுக்கு என் மீது இருக்கும் நம்பிக்கையை அழிப்பது… இவற்றையெல்லாம் கண்டு மனம் தளர்ந்து என்னுடைய குறிக்கோளில் இருந்து என்னை தடம் மாறச் செய்வதுதான் அவர்களுடைய திட்டம்…
அவர்களால் மற்றவர்களை நம்ப வைக்க முடிந்தது. ஆனால் என்னை நம்ப வைக்க முடியவில்லை.
இதற்குக் காரணம் எனக்கு அமைந்த கருவழி பரம்பரை மற்றும் குருவழி பரம்பரை.
ஆதிசைவ வாழ்க்கைமுறையை பிசகாது கடைபிடித்து… அதன் மேன்மைகளை எனக்குக் கற்றுக்கொடுத்த தாய்வழி மற்றும் தந்தை வழி பாட்டன்மார்கள் என்ற கருவழி பரம்பரை ஒரு காரணம்.
எனக்கு அமைந்த குருபரம்பரையோ வார்த்தைகளில் விவரிக்கமுடியாத அற்புதமானது.
இசக்கி சுவாமிகள், ரகுபதி யோகி, மாதா விபுதானந்தபுரி, யோகிராம்சுரத்குமார், அண்ணாமலை சுவாமிகள்… இவர்கள் என் உடல், மன, ஆன்ம அமைப்புக்குள் சேர்த்த சத்தியங்கள் மற்றொரு காரணம்…
இப்படி குருவழி பரம்பரையும் கருவழி பரம்பரையும் தந்த இனிமையான மன அமைப்பின் காரணமாக என்னைப் பற்றிய கொடூரமான அவதூறான செய்திகள் வந்தபோதும் பதட்டப்படாமல்… இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற சிந்திக்க முடிந்தது.
என்னை நானே ஹிம்சித்துக் கொள்ளாமல்… அவர்களை பழிவாங்கி இம்சிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அதாவது பரமசாந்த நிலையில் நிர்விகல்ப சமாதியில் நிலைக்க முடிந்தது…
அந்த நிர்விகல்ப சமாதி நிலையிலிருந்து வெளிவரும்போது என்னுடைய Vision மற்றும் அதை செயற்படுத்துவதற்கான திட்ட முறையும் (Execution strategy) தெளிவாக தோன்றியது…
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு… என்று நம் முன்னோர்கள் சொன்னது வெறும் வார்த்தைகள் அல்ல… அது சத்திய வார்த்தைகள் !
அஹிம்சை வாழ்க்கை முறையால் தான் ஆன்மா பலம் பெறும்… அதில்தான் நிலைக்கும்…
நான் enjoy பண்ணற வாழ்க்கை முறை அதுவே. அதையே பலருக்கும் அளிக்கிறேன்…
#பகவான் நித்யானந்த பரமசிவம்