குண்டலினி சக்தி – சக்தி வெளிப்பாடு
குண்டலினி எனும் பெயரைக் கேட்கும்பொழுதே ஒரு அதிர்வு.
குண்டலினி என்றால் என்ன? அதன் பயன் என்ன? பலன்கள் என்ன?
பயன் வேறு. பலன்கள் வேறு.
அது சார்ந்த பயன்கள் என்ன? அதன் உபயங்கள் என்ன?
இந்த எல்லாக் கேள்விகளுக்குமான பதில் தான் குண்டலினி என்ற தலைப்பில் இணைய இணைப்பு (வெப்பினார்க்கான தமிழ் வார்த்தை)
https://www.youtube.com/watch?v=R60ypt0WGZ0
நம்ம எல்லாருக்குள்ளும் இருக்கின்ற கடவுளின் விதை அதைத்தான் குண்டலினி சக்தின்னு சொல்றோம்.
நம்ம எல்லாருக்குள்ளேயும் கடவுள் சக்தியின் விதை இருக்கிறது. இந்த விதையை முறையாக உரம் இட்டு, நீரிட்டு காற்றளித்து வளரவிட்டோமானால் அது கடவுளாக மலரும். அதுதான் குண்டலினி சக்தி.
நம்ம எல்லோருக்குள்ளும் இருக்கும் இறைசக்தியை தினசரி வாழ்க்கையில் உபயோகப்படுத்துவதற்கு விழிக்கச் செய்கின்ற முறைகள் பல்வேறு முறைகள் இருக்கு.
ஓளவைபிராட்டி விநாயகர் அகவலில் குண்டலினி சக்தியை ஒரு பாம்பு மாதிரி உருவகப்படுத்தி காமிக்கிறாங்க. குண்டலினி சக்திக்கு நம்ம சித்தர்கள் போட்ட கார்ட்டூன் பாம்பு. ‘மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்து, இடை பிங்கலை எழுத்தறிவித்து கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி, மூன்று மண்டலத்த முட்டிய தூணின் நான்கெழு பாம்பின் நாவில் உணர்த்தி’ ஔவையார் ஒரு பொிய சித்தர்.
‘மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்து’ அப்படின்னா இந்தக் காலால் எட்டி உதைத்து எழுப்ப முடியாது. கால் அப்படின்னா காற்று, வாசியாலே, பிராணாயாமத்தாலே எழுப்புகின்ற கருத்தை அறிவித்து, நமக்குள் இருக்கிற கடவுளின் விதையை குண்டலினி சக்தியை பிராணாயாமத்தால எழுப்பலாம். சரியான ஞானக்கருத்துக்களை கேட்டு அதை சரியாக வாழ்வை நடத்துவதன் மூலம் எழுப்பலாம். முறையான மந்திரங்களால் அதை விழிப்பிக்க வைக்கலாம். க்ரியைகளால் விழிப்பிக்க வைக்கலாம். நம்முடைய சக்தி, மனோ சக்தியால கூட விழிப்பிக்க வைக்கலாம். இந்தத் துறையில கைதோ்ந்த சரியான சித்தர்களாயிருந்தால் சாதாரண ஒரு மூலிகையைக் சாப்பிடுவதன் மூலமாக மட்டுமே உங்கள் குண்டலினியை விழிப்பிக்க வைத்துவிட முடியும்.
உங்களுடைய பயம் ஆசைகள் கூட குண்டலினி சக்தியை எழுப்பும். அதனால்தான் பார்த்தீற்கள் என்றால் ஒரு பொிய பயம் வரும்பொழுதோ உங்களால் சாத்தியமற்ற செயல்களை எல்லாம் செய்வீர்கள். காரணம் அந்த குண்டலினி சக்தி விழிப்படைகிறது, எழுகிறது.
ஆனால் ஆசையாலோ, அச்சத்தாலோ குண்டலினியை திரும்பத் திரும்ப எழுப்பினீாகளானால அது ஒரு பாறையை எடுத்துப்போட்டு பாம்பை எழுப்புவது மாதிரி. இரண்டு தரம் எழுந்திருக்கும். ஆனால் பத்தாவது தரம் இறந்துவிடும். பாறையைத் தூக்கிப்போட்டு எழுப்புவதுபோல். பிறகு பலவீனப்பட்டுவிடும்.
குண்டலினி சக்தி நம் எல்லோருக்குள்ளும் இருக்கக்கூடிய மிக அற்புதமான சக்தி. நாம் வாழ்க்கையில் காணும் அனைத்து வேற்றுமைகளுக்கும் இந்த சக்திதான் காரணம்.
பலபோ் என்னிடம் கேட்பதுண்டு ஏன் சாமி நல்லவர்கள் எல்லாம் கஷ்டப்படறா மாதிரி இருக்கு, கெட்டவங்கல்லாம் நல்லா நிறைய பணத்தோட இருக்கா மாதிரி இருக்கு. நல்லவங்களுக்கெல்லாம் நோய் வந்து கஷ்டப்படறாங்க. கெட்டவங்கல்லாம் வயதானாலும் வீல் சேர்ல உட்காந்துகிட்டு நல்லாவேதான போகமல் இருக்காங்களே.
நன்றாகத் தொிந்து கொள்ளுங்கள், மனிதர்களுக்கு இடையிலே இருக்கின்ற எல்லா வேற்றுமைகளுக்கும் உடல் நல ரீதியான வேற்றுமை, மனநல ரீதியான வேற்றுமை பொருளாதார ரீதியான வேற்றுமை எல்லா விதமான வேற்றுமைகளுக்கும் குண்டலினி சக்தி மட்டுமே காரணம்.
ஒருவருக்குள் குண்டலினி சக்தி விழிப்படைந்துவிட்டால், எழுந்துவிட்டால் அவர் எவ்வளவு கெட்டவர் என்று சொன்னாலும் பிரபஞ்ச சக்தி ஏற்காது. கேட்காது. நீங்க வேண்டுமானால் கெட்டவர் என்று நினைக்கலாம். ஆனால் அவருக்கு அனைத்து நல்லவைகளும் நடக்கும்.
குண்டலினி சக்தி விழிப்படையாவிட்டால் நீங்கள் அவரை எவ்வளவோ நல்லவர் என்று சொல்லலாம். ஆனால் அவரால் ஒரு உபயோகமும் இல்லை.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். குண்டலினி சக்தி விழிப்படைந்த மனிதன் கடவுளுக்குச் சமம். ஏனென்றால் குண்டலினி சக்தி கடவுள் தன்மைக்கான விதை. அது மரமாகி மலர்ந்தால் உங்களுக்குள் கடவுள் தன்மை மலர்கின்றது.
பலபோ் என்னிடம் கேட்பதுண்டு. அது ஏன் சாமி எப்பொழுதும் தூங்கிக்கொண்டேயிருக்கு? எழுப்பாதவரை தூங்கிகிட்டுதான் இருப்போம். அதைத்தட்டி யாரும் எழுப்பாத வரை அது தூங்கிக்கொண்டு இருக்கும் பாம்பு.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முயற்சி பண்ணி எழுப்பாதவரை அது எழுவதே இல்லை. நீங்கள் ஒரு லாயர் ஆகனும்னு நினைச்சீங்கன்னா, அரசியல்வாதி ஆக நினைச்சீங்கன்னா, ஒரு நீதிபதி ஆக நினைச்சீங்கன்னா, நீங்க என்ன ஆக வேண்டுமென்று நினைத்தாலும் அதற்காகப படித்து தயார் பண்ணி முயற்சித்த பிறகு தான் அடைய முடியும்.
அதே போல் தான் உங்கள் குண்டலினி சக்தியை எழுப்ப வேண்டுமென்றாலும், கடவுள் தன்மையை அடைய வேண்டுமென்றாலும், நீங்கள் முயற்சிக்க வேண்டும். உங்களுடைய முயற்சியினால் மட்டும்தான் அது அடையப்படுகின்றது.
யோகம், தியானம், க்ரியை, ப்ராணாயாமம் இப்படி நாம் செய்கின்ற அனைத்து ஆன்மீக சாதனைகளுமே இந்தக் குண்டலினி சக்தியை விழிப்பிக்க வைக்கத்தான்.