நித்யானந்த நூலகம் உலகின் மிகப்பெரிய இந்து நூலகம்.

20 மில்லியன் இந்து நூல்களை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் சுதந்திரமாக பகிர்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்து மதம் குறித்த கையெழுத்துப் பிரதிகள் மற்றும் புத்தகங்களை சேகரித்துப் பாதுகாத்து உலகிற்கு அளிக்கும் உலகின் மிகப்பெரிய பாதுகாப்புக் களம்.

இங்கு வேதாகமங்கள் கிரந்த சமாதி வடிவத்தில் வாழும் தெய்வங்களாக வணங்கப்படுகின்றது. 

இது அரிய கையெழுத்துப் பிரதிகளின் 30,000 க்கும் மேற்பட்ட  ஓலைச்சுவடிகள் மற்றும் மிகவும் அரிதான கையெழுத்துப் பிரதிகளின் இரகசிய இந்து காப்பகங்களின் புனித புதையல் இடமாகும்.

நித்யானந்த நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியவர்கள்…

ஜீவா அச்சகத்தின் உரிமையாளரே உலகம் முழுவதும் நான் அமைத்துக் கொண்டிருக்கின்ற ஆயிரக்கணக்கான நித்யானந்தர் நூலகங்களுக்கு அடிக்கல் நாட்டியவர் அவருக்கு நன்றி!

நான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு எதிரே ஜீவா அச்சகம் என்று ஒரு அச்சகம் இருக்கின்றது.  இன்னமும் இருக்கும் என்று நினைக்கின்றேன் அந்த கால காலத்தில் இருந்தது, இப்பொழுது ஒருவேளை இருக்க வாய்ப்பு உள்ளது. ஜீவா அச்சகம் என்று அதற்கு பெயர்.

அதாவது பிரிண்ட் பண்ணி பைண்ட் பண்ற அந்தளவிற்கு ரொம்ப எளிமையான சொற்ப வருமானம் இருக்கின்ற தொழிலை செய்து வந்தவர். வீட்டின் எதிரிலேயே இருந்ததனால் நெடுநாட்களாக அவர் குடும்ப நண்பர் மட்டுமல்ல என்னை முதலில் சாமியார் பையா.. சாமியார் பையா என்றழைத்து எனக்கு இந்த சாமியார் என்ற பெயர் வைத்தவர் அவர்தான்.

இந்த பாண்டுரங்கனார் தினந்தோறும் மாலையில் வீட்டிற்கு வருவார். இந்த அச்சகத்தில் அமர்ந்துகொள்வோம். வீட்டுக்கு எதிர்வீடு இந்த அச்சகம் என்பதனால், அச்சகத்தில் அமர்ந்து அவர்களுடைய நூல் அனைத்தையும் எடுத்து வந்து 40 பக்க நோட்டு புத்தகத்தை வைத்து கோணி ஊசியில் வௌ்ளை நூல் வைத்து தைப்போம். அந்த அச்சகத்தின் உரிமையாளர்தான் எல்லா பொருளும் கொடுத்து உதவி செய்வார்.

என் சைவசித்தாந்த ஆச்சாரியார் பாண்டுரங்கனார் வயது முதிர்ந்தவர் என்பதால் அவருக்கு உதவுதற்காக உதவியாளனையும் அளிப்பார். அந்த புத்தகங்களை எல்லாம் பைண்ட் செய்து இந்த பின்குறிப்புகள் எடுத்துக் கொள்வதற்கு உதவுவார்.

அவர் ஒன்னும் மிகப்பெரிய பணக்காரர் கிடையாது மிக எளிமையான மனிதர் மிக சொற்ப வருமானத்தில் இந்த திருமண பத்திரிக்கை, காதுகுத்து விழாக்கள் பத்திரிக்கை, இறந்தவர்களுக்கான அஞ்சலி பத்திரிக்கை இதையெல்லாம் அச்சிடுகின்ற ஒரு மிகச்சிறிய பதிப்பகம்தான்.

மிகச் சிறிய இடம்தான் ஒரு இடத்திற்கு 20 இருக்கலாம் அவ்வளவுதான்!

ஆனால் அவர் அந்த காலத்தில் எனக்கு செய்த உதவி, என் குருவிற்கு செய்த உதவி. சலிப்பே இல்லாமல் தினந்தோறும் பாண்டுரங்கனார் வந்து அமர்ந்தவுடன் இந்த பழைய நோட்டு புத்தகங்களை பைண்ட் செய்வதற்கு தேவையான கோணி ஊசி, அதை அடிப்பதற்கு மரத்தாலான ஒரு சுத்தியல், தடிமனான வௌ்ளை நூல், அதற்கு மைதா மாவில் பசை செய்வார்கள். அந்த நோட்டில் புத்தகத்தின் முதுகெலும்பில் காலர் துணி என்று சொல்லுகின்ற ஒரு சிகப்பு துணியை ஓட்டுவார்கள் அந்த புத்தகத்தின் முதுகெலும்பு பலமாக இருப்பதற்காக அந்த துணி இந்த தேவையான உதிரி பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்துவிட்டு ஒரு உதவியாள் சிறுவனையும் கொடுத்து ’தம்பி தாத்தாவுடன் சாமியார் பையனுடன் உட்கார்ந்து என்ன வேலை செய்ய வேண்டுமோ அதை செய்!’ என்று சொல்லுவார்.

ஒருநாளும் சலித்துக் கொள்ளாமல் அவர் செய்த உதவி நூற்றுக்கணக்கான புத்தகங்களை பின்பு ஒரு நாற்பது பக்க நோட்டு புத்தகம் வைத்து பல நேரங்களில் நோட்டு புத்தகம் வாங்க முடியவில்லை என்றால் அவருடைய நூலகத்தில் காகிதத்தை எடுத்தபிறகு உதிரியாக விழுகின்ற காகிதங்களில் அழகாக இந்தநூல் உடைய வடிவத்திற்கு தகுந்தார் போல வெட்டி எடுத்து அந்த புத்தகங்களின் பின் வைத்து பைண்ட் செய்வதற்கு அளிப்பார்.

இவர்கள் எல்லோரும் செய்த தியாகங்கள்தான் இன்று கைலாயம் என்கின்ற மிகப்பெரிய இந்து தேசமாக வளர்ந்திருக்கின்றது.

சிறு உதவி கிடையாது பேருதவி உதவி..

அந்த காலகட்டத்திலே நான் இந்த ஞானத்தை அறிவியலை கற்கின்ற காலகட்டத்திலே எனக்கு இந்த உதவிகளை செய்தார்கள்.

பாண்டுரங்கனாருக்கு எப்படியும் சிலை வைக்கப் போகின்றேன் என்குரு என்பதற்காக.. ஆனால் சிறு உதவி என்று நாம் நினைக்கின்ற இந்த உதவிகள் தினந்தோறும் எனக்கு புத்தகத்தை பைண்ட் செய்து கொடுத்து சலிப்பில்லாமல் அவருடைய பல வேலைகட்கு இடையில்.

அதாவது பாண்டுரங்கனாருக்கு நன்றாக தெரியும் நான் எதிர்காலத்தில் அவருடைய புகழைப் பாடிக் கொண்டிருக்கபோகிறேன் என்று. ஆனால் அந்த ஜீவா அச்சகத்தின் உரிமையாளருக்கு அந்த எதிர்பார்ப்போ அந்த ஞானம் கூட அவருக்கு கிடையாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் இந்த சாமியார் பையன் ஏதோ நல்லது செய்கிறார் இந்த தாத்தா ஊரிலிருந்து தினமும் நடந்து வந்து இந்த பையனுக்கு கற்றுக் கொடுக்கிறார். சரி நம்மால் ஆன நல்லதை செய்யலாம் என்று அவர் தினந்தோறும் பசை காய்ச்சி கொடுப்பார் அவருடைய உழைப்பு எல்லாம் மறக்கப்பட்டு விடக்கூடாது.

உலகம் முழுவதும் இருக்கும் என்னுடைய பக்தர்கள், சீடர்கள் என்னால் ஞான, விஞ்ஞான பலன் அடைந்த எல்லோரும் அவருக்கு கடன் பட்டவர்கள்.

ஜீவா அச்சகத்தின் உரிமையாளரே உலகம் முழுவதும் நான் அமைத்துக் கொண்டிருக்கின்ற ஆயிரக்கணக்கான நித்யானந்தர் நூலகங்களுக்கு அடிக்கல் நாட்டியவர் அவருக்கு நன்றி!

உரிமையாளர் உடைய படத்தை நம்முடைய எல்லா நூலகங்களில் வைக்கப்பட வேண்டும் அவருடைய உழைப்பு தியாகம் நட்பு சேவை மதிக்கப்பட வேண்டும். அவருக்கு என் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்