நித்யானந்தேஸ்வர பரமசிவ தேவாலய மகாகும்பாபிஷேகம்- ஆதிகைலாஸம் -பெங்களூரு – ஜனவரி 30 – 2020
உலகின் மாபெரும் #பொற்கோவிலாக திகழவிருக்கும் ஸ்ரீ நித்யானந்தேஸ்வரி பராசக்தி சமேத நித்யானந்தேஸ்வர பரமசிவ தேவாலயம் அமையப்பெற்று 12 வருடங்கள் ஆன நிலையில் வரும் ஜனவரி 30 – 2020 அன்று #ஆகம முறைப்படி, ஆலய ஸ்தாபகரும், பரமசிவனின் வாழும் அவதாரமான பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாணையின் வண்ணம், அவர் தம் நேரடி சாந்நித்யத்தில் ‘அந்தரித ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன #மஹாகும்பாபிஷேகம்‘ நடைபெறவிருக்கின்றது.
மஹாகும்பாபிஷேக திருநாளன்று பிடதி – #ஆதிகைலாஸம் வந்து குருவருளையும், திருவருளையும் பெற #நித்யானந்த பக்தர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.