இளமையில் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

கிரேக்கர்கள் மாதிரியே நம் தமிழர்கள் கூட, பல்வேறு விதமான சமூக அமைப்பு கொண்டவர்கள்.  இதைப்பற்றி நிறைய ஆராய்ச்சி செய்துவிட்டோம்.  அதுதான் தமிழ்நாடு ஒரு Living State

 (வாழும் மாநிலம்).  நேற்று இருந்த மாதிரி இன்று இருக்காது.  சூழ்நிலை மாறிக்கொண்டே இருக்கும். காட்சி மாறிக்கொண்டே இருக்கும்.  காரணம் நம் மக்கள் மிகவும் புத்திசாலியானவர்கள்.  ஆழ்ந்து யோசிப்பவர்கள்.  அரசியலை அடிப்படையாக வைத்து வாழ்க்கை முறையை வாழ்ந்து பார்த்துவிட்டீர்கள்.  சினிமாவை அடிப்படையாக வைத்து வாழ்ந்து பார்த்துவிட்டீர்கள்.  வெறும் குடி, சாராயம், போதைப்பொருள் இவைகளை அடிப்படையாக வைத்த வாழ்க்கை முறையும் வாழ்ந்து பார்த்துவிட்டீர்கள்.  இல்லை வெறுமனே எதையுமே செய்யாமல் வராவதியில்(பாலத்தின் மீது) உட்கார்ந்து கொண்டு போற வர பிள்ளைகளை கிண்டல் அடித்துக்கொண்டு வாழ்கிறது அந்த வாழ்க்கை முறையையும் வாழ்ந்து பார்த்துவிட்டீர்கள்.  இளைஞர்களே இப்போது தொலைத்தொடர்புதுறையிலும், அதாவது ஐ.டி துறையிலும் என்றால் பணம், உயர்ந்த தரமானவேலை என்று  அந்த வாழ்க்கை முறையும் வாழ்ந்து பார்த்துவிட்டீர்கள்.  கலர்புல்லா பல்வேறு விதமான வாழ்க்கை முறைகளையும் வாழ்ந்து பார்த்து விட்டீர்கள்.  ஆனால், கடைசியில் என்ன மிஞ்சியது? ஆழந்து பாருங்கள்.  பல லட்சக்கணக்கான மக்களைப் பார்ப்பதனாலும், பேசுவதாலும், பழகுவதனாலும் என்னுடைய அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு அவனுடைய இளமை காலம்தான் வாழ்க்கையின் சாரம்.   அந்த காலத்ததை எதற்காக அர்பணிக்கின்றார்களோ அதை வைத்துதான் அவன் வாழ்க்கையை நிர்ணியிக்கப்படுகிறது.  பல ஆயிரம் பேரை பார்த்திருக்கிறேன் அவர்களுடைய இளமை காலத்தை அரசியலுக்காக அர்ப்பணித்தவர்கள் என்ன செய்திருப்பார்கள்?  ஏதாவது ஒரு கட்சி கொடியைக்கட்டி அந்த கட்சியின் தொண்டனாய் இருந்து போஸ்டர் ஒட்டி என்னென்னவோ செய்து, கடைசியில் ஒரு 45 வயது ஆனவுடன் என்ன செய்வார்கள். ஒன்று இவர்கள் மற்றவர்கள் கழுத்தை கடித்து இரத்தத்தை உறிஞ்சுகின்ற கத்தியாக மாறி இருந்தால் ஏதாவது ஒரு பதவிக்கு போவார்கள் இல்லை அந்த அளவிற்கு உயர்ந்த பதவி கிடைக்கவில்ல என்றால் யாராவது ஒருத்தர் இவர்கள் கழுத்தை கடித்து இரத்தத்தை குடித்து, இவரை வைத்து அவர்கள் பதவிக்கு போய் இருப்பார்கள்.  இந்த இரண்டு நிலையில் எந்த நிலையில் இருந்தாலும், பதவிக்குப் போயிருந்தாலும் அல்லது மற்றவர்கள் பதவிக்கு போவதற்கு ஏணியாக இருந்தாலும், இவர்கள் மனஅழுத்தத்தில் இருப்பதைத்தான் பார்க்கிறேன்.  இதுதான் உண்மை.

அதேமாதிரி சினிமாவை அடிப்படையாக வைத்து அதற்காக இளமையை தியாகம் செய்வது.  வாலிபத்தை தியாகம் செய்வது.  அதையும் பார்த்திருக்கின்றேன்.  கிராமம் கிராமமாக நிறைய பார்க்கலாம். யாராவது ஒரு நடிகர் ஒரு பொட்டு வைத்திருக்கின்ற மாதிரி, அவருடைய கட்டவுட் வைத்து அதற்கு கீழ் அவருடைய பேரைப்போட்டு நற்பணிமன்றம் என்று போட்டிருப்பார்கள்.  அமந்த 10 பசங்களைப் பார்த்தீங்கன்னா ஆழமா விசாரிச்சிங்கனா, அவர்களில் ஒருவர் கூட பத்தாவது தாண்டி இருக்கமாட்டார்கள்.  இவர்கள் அனைவரும் சேர்ந்து அமைப்பதற்கு பெயர்தான் ரசிகர்மன்றம்.  இந்த மாதிரி வாழ்க்கையைக் கழித்துவர்களையும் பார்த்து இருக்கின்றேன்.  இவர்கள் தங்களின் தலைவரோட கட்டவுட்டுக்கு பால்ஊற்றி மாலைபோட்டு…, கடைசியில் பார்த்தீங்கன்னா இவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு பால் இருக்காது.  இவர்கள் குடும்பத்தையும் நடத்த முடிஞ்சியிருக்காது, மிஞ்சுவது மன அழுத்தம்.  அவ்வளவுதான்.  பிறகு அந்த போதைக்கு அடிமை ஆகிவிடுவார்கள்.  அந்த போதைக்க அடிமையாகவே தன் இளைமை காலத்தைக் கழித்தவர்கள்.  அவர்களும் அதே மாதிரிதான்.

ஒரு 45 வயதுக்கு பிறகு, எதையும் சாதித்து இருக்கமாட்டார்கள்.  அப்பா சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த சொத்தை அழித்து ஒழித்து இருப்பார்கள்.  அவ்வளவுதான், வேறு ஒன்றும் நடந்து இருக்காது.  அப்பா சம்பாதித்து வைத்ததை அழிப்பதற்கென்றே சில பிள்ளைகள் பிறக்கும், என்ன செய்வது? அதுதான் சாதித்திருப்பார்கள்.  மனஅழுத்தம்தான், அதுவும் மன அழுத்தம் தான்.  அடுத்து இப்பொழுது புதிதாக Revolutionary IT field (புரட்சிகரமான தகவல் தொடர்பு துறை) தாங்கள் லட்சக்கணக்கில் சம்பாதித்து விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, Appartment (அடுக்கு மாடி) வாழ்க்கைமுறை வாழ்வது.  அதிலும் கடைசியில் மிஞ்சுவது என்ன? மனஅழுத்தம்தான்.

இளைஞர்களே விழித்துக் கொள்ளுங்கள்! எல்லா வாழ்க்கை முறையையும் நீங்கள் ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டீர்கள்.  திரும்புங்கள்! நம் ‘தெய்வீக திராவிட பாரம்பரியத்திற்கு’.

ஜீவன் முக்த தன்மையை அடிப்படையாக வைத்து, ஜீவன் முக்த தன்மையை வாழ்க்கையின் சாரமாக வைத்து, இளமை இருக்கும் பொழுதே வாழ்க்கையைப் பற்றிய ஆழமான சத்தியங்களை உள்வாங்குங்கள்.  அதை வைத்து உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.  அதை வைத்து உங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.  ஜீவன் முக்த சமுதாயம் செய்யுங்கள்.  ஜீவன் முக்த சமுதாயம் செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்