உங்கள் பிரார்த்தனைக்கிறங்கியே நான் அவதரிக்கின்றேன்!.
எனது மகிமைகளைச் சொல்வது…
அது உங்களுக்கு சாத்தியம் என்பதை உணர்த்துவதற்கே!.
ஒவ்வொரு அவதாரத்திலும் பரிணாம வளர்ச்சியில் திருப்புமுனையை ஏற்படுத்தி உலகத்தை வழிநடத்தி செல்கின்றேன். ஒவ்வொருமுறை நான் எடுக்கின்ற வடிவமும், அடுத்த உயர் நிலையை உணர்த்தும்:
உடலில் இருந்து மனதிற்கான திருப்புமுனை அளித்தேன். மனதிலிருந்து உணர்விற்கான திருப்புமுனை அளித்தேன், இப்பொழுது உணர்விலிருந்து, இறை உணர்விற்கான திருப்புமுனையை அளிக்கவே அவதரித்துள்ளேன்!.
உலகத்தில், முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு மனிதன் துன்பத்தை தனது வாழ்க்கையின் பாகமாக அனுபவிக்கின்றார்கள். மனித சமுதாயத்தின் ஒன்று திரண்ட உணர்வு நிலையின் விளைவாகவே நான் மீண்டும் புமியில் அவதரித்திருக்கின்றேன். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கடவுள் தன்மையை விழிப்படையச் செய்யவே நான் இப்புவியில் அவதரித்துள்ளேன்.
இனிமேலும் நீங்கள் முழுமையிலிருந்து ஒரு பகுதியை இழந்ததைப்போல் உணரதேவையில்லை. என் வாழ்க்கையை பற்றி நீங்கள் ஆழமாக படிக்கும் பொழுது, உங்கள் வாழ்க்கையை பற்றிய அமரத்துவ உண்மைகளை பற்றி புரிந்துகொள்வீர்கள்.
உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்பது, பரமசிவ நிலையை அடைவதாகும். நான் இருக்கும் அந்த பரமசிவத்துவ நிலையை நீங்களும் அனுபவமாக உணருவதற்கான அழைப்புதான் சாத்தியக்கூறுதான் என் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள்.
எனது மகிமைகளைச் சொல்வது, அது உங்களின் சாத்தியக்கூறு என்பதை உணர்த்துவதற்கே!.