பாக சாஸ்திரம் – சமையல் அறிவியல்
இறையனார் பரமசிவனிடமிருந்து அன்னை பராசக்திக்கும், பராசக்தியின் அருளால் விதர்ப அரசன் நளனிற்கும் அருளப்பட்டு உலகிற்கு கிடைத்த எம்பெருமானின் நேரடிப் பிரசாதம் பாக சாஸ்திர அறிவியல். நளன் ஒரு திறமை வாய்ந்த தேராட்டி மற்றும் சமையல்கலை நிபுணர்.
பாக சாஸ்திரம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருக்கலாம், ஆனால் அதன் ஞானமும் சமையல் ரகசியங்களும் கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளுக்கு முந்தையவை!
இந்த புத்தகத்தின் ஒரே நகல் 1851 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் மெட்ராஸில் (தற்போதைய சென்னை) அச்சிடப்பட்டது. இந்த புத்தகம், தமிழ் மொழியில், இப்போது நித்யானந்த ஞானாலயம் (நூலகம்), பெங்களுரு அதீனத்தில் உள்ளது.
இந்து மதத்தில் சூப சாஸ்திரம் அதாவது சமையல் சார்ந்து சொல்லப்படுகின்ற எல்லா ஆதாரத்தையும் ஒன்று திரட்டி யாரோ ஒரு அந்தகாலத்து நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டியார் அவர்கள் பதிவு செய்திருக்கின்றார். அதன் முதல் பக்கம் எல்லாம் காணாமல் போய்விட்டது பின்புறமாக அந்த புத்தகத்தில் இருந்து இந்த குறிப்பை வைத்துதான் நாட்டுக்கோட்டைச் செட்டியார் வௌியிட்ட புத்தகம் என்று கண்டுபிடித்தோம்.
இந்த சூப சாஸ்திரத்தை சேகரித்து மொழிப்பெயர்த்து தமிழ் இந்து பாக சாஸ்திரம் என்று வௌியிட்டிருக்கிறார். அதாவது எப்படி உணவையே மருந்தாக்கி வாழ்க்கையை நடத்துவது என்று வௌியிட்டிருக்கிறார்.
அந்த புத்தகத்திலிருந்து குறிப்பை வைத்து தான் என்னுடைய உடலில் இருக்கின்ற நஞ்சை வௌியேற்றி, என்னை நானே சுத்தப்படுத்திக் கொள்வதற்கு அந்த உணவுமுறை மிகவும் உதவி செய்தது. அதாவது அந்த நூலில் 120 சூத்திர குறிப்புகள் உள்ளது..
புளி உடலுக்கு என்ன செய்யும்?
உப்பு உடலுக்குள் என்ன செய்யும்?
வெல்லம் உடலுக்கு என்ன செய்யும்?
இனிப்பு சுவையை தருகின்ற எல்லா பொருட்களும் உடலுக்கு என்ன செய்யும்? என்பதை பரமசிவ பரம்பொருள் ஆகமத்தில் அருளியபடி அதை தமிழில் மொழிபெயர்த்து அளித்திருக்கிறார்கள்.
இதுப்போன்று பரமசிவன் அருளியிருக்கும் பாகசாஸ்திர உணவில் 400 அறிவிப்புகள் உள்ளது..
பாக சாஸ்திரத்தின் அறிமுகத்தில், அவர் சுவை மற்றும் சுவைகளை அளிக்கும் பொருட்களைப் பற்றியும், ஒன்றோடு ஒன்று சேரும்பொழுது என்ன நிகழ்கின்றது, அச்சுவை உங்களின் உடலில் நிகழ்த்துவது என்ன என்பதையும் விளக்குகின்றார்.
நீங்கள் சாப்பிடும் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அவர் விளக்கவில்லை. பரமசிவனின் உணவைப் பற்றிய அறிமுகம் அசாதாரணமானது. அவர் உங்கள் ஆரோக்கியத்தை சுவை மற்றும் சுவைகள் ஒன்றோடு ஒன்று இணைவதன் அடிப்படையில் நிர்வகிக்கிறார், இது மிகவும் ஆச்சரியமளிக்கிறது.
நவீன கால பொருட்களை ஒன்றிணைத்து அதே சுவையை மீண்டும் உருவாக்கவும், அது நம் ஆரோக்கியத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் காண முயற்சித்தேன், ஆனால் பரமசிவன் அதில் குறிப்பிட்டிருக்கும் பொருட்கள் இல்லையெனில் அதே சுவை வருவதில்லை.
பரமசிவன் பாக சாஸ்திரத்தில் அளிக்கும் விளக்கங்களின் மீது ஆராய்ச்சி செய்தால் உலகம் இன்னும் உணவைப் பற்றிய அதிகமான தௌிவைப் பெறும். பாக சாஸ்திர உணவுகள் மீது ஆய்வு செய்தால், முழு உலகமும் “ஆகம உணவு” என்ற உண்மைக்கு விழித்துவிடும். மேலும் நீங்கள் உணவின் மூலம் ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்…
இப்பொழுது உணவு மிக மலிவாகக் கிடைக்கிறது. காரணம் என்னவெனில் உணவுத் தொழில் மற்றும் ஃபார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரி எனப்படும் மருந்தியல் துறை, இரண்டும் ஒன்று சேர்ந்து நடத்தும் திட்டம்தான் இது. இராசாயன உணவை உண்டு நீங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு நீங்கள் மருந்துவமனைக்குச் சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்வீர்கள். இப்படித்தான் உங்களை வைத்து அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்!
உணவு தொழில் உங்களுக்கு உணவை விற்பனை செய்வதன் மூலம் நேரடியாக பணம் சம்பாதிக்காது, மருத்துவ கவனிப்புக்கு உங்களை விற்பதன் மூலம் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்!
வேத-ஆகமத்தல் பரமசிவன் அருளியிருக்கும் உணவுகளை உண்ணும்பொழுது நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். உங்களுக்கு சுவை மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவு முறையை வழங்குவதே வேதாகமப் பாரம்பரியம் தான் .
True
Nithyanandam this book PDF want swamiji
Please check your email. The book pdf is shared with you>
Swamiji book PDF we want
Please check your email. The book pdf is shared with you>