உலகின் மிகப்பெரும் தங்க கோவில் எழுப்புதல்
இந்த ஆலயம், இந்த நவீன யுகத்தில் பரமசிவனுக்காக கட்டப்படும் முதல் தங்கக்கோவிலாகும். சதாசிவனால் நேரடியாக அருளப்பட்ட ஆகம சாஸ்திரத்தின்படி இந்தக் கோவில் கட்டப்படுகின்றது.
இந்த ஆலயம் கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்களையும், பிரார்த்தனைகளையும், தெய்வ நம்பிக்கைகளையும் நிறைவேற்றும் சக்திவாய்ந்த யாத்திரைத் ஸ்தலமாகும். இந்த பிரம்மாண்டமான ஆலயத்தின் தெய்வீக சக்தியால் பல கோடிக்கணக்கான பக்தர்கள் உயிர் மலர்ச்சியை பெறுகிறார்கள். எண்ணிலடங்கா வழிபாட்டு முறைகள், பக்தி, தியானம், பூஜை, ஹோமம் போன்ற பாரம்பரிய சடங்குகள் மற்றும் விழாக்கள், பண்டிகைகள் மூலமாக நேரடியாக இறைசக்தியோடு ஒன்றிணையவும், இறைவனை அனுபவமாக உணரவும் எண்ணற்ற பக்தர்கள் தேடுதலுடன் வருகிறார்கள், பயனடைகின்றார்கள்.
பரமசிவனுக்காக எழுப்பப்படும் முதல் தங்கக்கோவில் இது. இதற்கு முன்பும் பரமசிவனுக்காக தங்கக்கோவில் எழுப்பப்பட்டது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் தங்கக்கோவிலாக இருந்தது. ஆனால் அந்நியப் படையெடுப்பின்போது, தங்கம் முழுவதும் சுரண்டப்பட்டது. இந்த நவீன யுகத்தில் இதுதான் பரமசிவனுக்கு எழுப்பப்படும் முதல் தங்கக்கோவிலாக இருக்கும். கர்ப்பக்கிரகம், முகமண்டபம், அர்த்த மண்டபம், மஹாமண்டபம், மற்றும் வசந்த மண்டபம் போன்ற ஆலயத்தின் முக்கியப் பகுதிகள் தங்கத்தால் போர்த்தப்பட்டிருக்கும்.
-பரமஹம்ஸ நித்யானந்தர்.







