எது ஆன்மிகம்?

வாழ்க்கையின் குறிக்கோளான நிரந்தரமான நித்தியமான ஆனந்தத்தை உங்களுக்குள், உங்கள் உயிருக்குள் மலர வைக்கின்ற எல்லாமே ஆன்மிகம்.

மனித வாழ்வின் அறிவியல் :

வாழ்க்கையின் நோக்கமும், போக்கும் எதற்காக இந்த உடல் மனம் எனும் இயந்திரங்கள் நமக்கு வடிவமைக்கப்பட்டு அளிக்கப்பட்டிருக்கின்றதோ அதனுடைய ஏக்கமும் தேவையும், அதன் சாத்தியக்கூறுகளும் ஆழ்ந்து கேளுங்கள் இந்த உடலும் மனமும் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிற இயந்திரங்கள். அதனுடைய ஏக்கங்கள் என்னென்ன?
தேவைகள் என்னென்ன?
சாத்தியக்கூறுகள் என்னென்ன?

ஒரு ஐ-ஃபோன் 6 உங்களுக்கு யாராவது கிஃப்ட் ஆக கொடுத்தாங்கன்னா அதை வெறும் நம்பரை மட்டும் ப்ரஸ் பண்ணி உங்களுக்குத் தேவைப்படறவங்களோட பேசறதுக்கு மட்டும் யுஸ் பண்ணவும் செய்யலாம். இல்லை அதில ஃபேஸ்புக்லருந்து ட்விட்டாலருந்து யு-ட்யுப் லருந்து இன்டாநெட்லருந்து கூகுள்-லருந்து எல்லா மத்த மத்த அதோட ஆப்ஸ் எல்லாத்தையும் டவுன் லோடு பண்ணி உபயோகப்படுத்தவும் செய்யலாம்.

எப்படி ஒரு ஐ – ஃபோன் 6 அதனுடைய சாத்தியக்கூறுகளை தொிந்து கொண்டு உபயோகப்படுத்தும்பொழுது உங்கள் வாழ்க்கை பல விதத்திலும் அதனால் மேம்படுகிறதோ, அதே போல உங்கள் உடல் மனம் மிகுந்த சக்தி வாய்ந்த சாத்தியக்கூறுகள் வாய்ந்த சாத்தியக்கூறுகளும் சக்திகளும் வாய்ந்த ஒரு இயங்கு மென்பொருள்.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் இதுவரை புரிந்து கொண்டதைவிட, எதிர்பார்த்ததை விட, கற்பனை செய்ததைவிட, இயக்கிப் பார்த்ததைவிட அதிக அளவு சாத்தியக்கூறுகளும் சக்திகளும் உடையது உங்கள் உடலும் மனமும்.
அதை எப்படி வௌிப்படுத்தி நடைமுறையில் சாத்தியமாக்கி வாழ்வது என்பதுதான் ஆன்மீகம். மொத்த ஆன்மீகமும் இவ்வளவுதான்.
நீங்கள் கற்பனை செய்து பார்த்ததைவிட நினைத்துப் பார்த்ததைவிட, வாழ்ந்து பார்த்ததைவிட, சோதித்துப் பார்த்ததைவிட, விளையாடிப் பார்த்ததைவிட அதிக அளவு சாத்தியக்கூறுகளும் சக்திகளும் உடையது உங்களுடைய உடல், மனம் எனும் இயங்கு மென்பொருள்.
அந்த உடலையும் மனத்தையும் பல்வேறு சாத்தியக்கூறுகளையும் சக்திகளையும் உள்ளடக்கி வைத்துத்தான் இறைவன் நமக்கு நன்கொடையாய் அளித்திருக்கின்றான்.

அந்த சாத்தியக்கூறுகளையும் சக்திகளையும் வௌிப்படுத்தி அதை வாழ்க்கையின் சாத்தியமாக்கி அதை தினசரி வாழ்க்கையின் பாகமாக்கி வாழ்வது அதுதான் ஆன்மீகம்.




#நித்யானந்தர் #ஆன்மீகம்
#செல்வம் #இந்துமதம் #அவதாரம் #வாழ்க்கை #மரணம்
#ஆரோக்கியம் #தேடுதல் #ஞானம் #சன்யாசம் #காவி #தமிழ்
#திருவண்ணாமலை #அருணகிரியோகீஸ்வர் #ஆலமரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்