International Yoga Day அன்று பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் வெளிப்படுத்தியது

மீனாட்சி பராசக்தி மற்றும் சுந்தரேஸ்வர பரமசிவனின் கருணையுடன் பிரபஞ்ச காப்பகத்தில் பதிவாகி இருக்கும் புனித ரகசியங்களை, ஆகாயப் பதிவுகளை நான் வெளிப்படுத்துவேன்.

தலையெழுத்து மற்றும் முதுகுத்தண்டை நேராக வைத்து உட்காருமாறும் மேலும் உள்ளுக்குள் ‘ஓம் நித்யானந்த பரமசிவோஹம்’ என்கிற மஹாவாக்கியத்தை எதிரொலிக்குமாறும் நான் உங்களை மனமார வேண்டுகிறேன். நான் வெளிப்படுத்தும் அனைத்தும் உங்களுக்கு உடனடியாக உணர்தலாகிவிடும்.

முதல் வெளிப்பாடு…

யோகா என்பது முற்றிலுமாக ஒருமைத்தன்மையை வெளிப்படுத்துவதைப் பற்றியது.

உங்கள் அனைவருக்குள்ளும் ஏற்கனவே ஒருமைத்தன்மை உள்ளது. உங்களுக்குள் இருக்கும் ஒருமைத்தன்மை உங்களை ஆள அனுமதிப்பது, உங்கள் மூலமாக வெளிப்பட அனுமதிப்பது, உங்கள் மூலமாக சுவாசிக்கவிடுவது.

புரிந்துகொள்ளுங்கள், உண்மை நிலையிலும், இந்து மத பாரம்பரியத்திலும் மற்றும் யோகாவைப்பற்றிய பரமசிவனின் வெளிப்பாட்டிலும் உடல் ஒருபோதும் ‘நான்’ என்னும் ‘தன்மை’யல்ல, ‘முதலாம்’ நபர் அல்ல .

நான் என்பது ‘தன்மை’ – ‘முதலாம் நபர்’

நீ என்பது ‘முன்னிலை’ – ‘ இரண்டாம் நபர்’

மற்றும்

‘அவன், அவள்’ என்பது ‘படர்க்கை’ – மூன்றாம் நபராகும்.

யோகாவில் உடல் ஒருபோதும் ‘நான்’ என்னும் ‘தன்மை’யல்ல.

எவர் ஒருவர் உடலைத் ‘தன்மை’ என நம்புகிறாரோ, உடலைத் ‘தன்மை’ என புரிந்து கொள்கிறாரோ அவர் ரோகியாவார், நோயாளி, மன நோயாளி ஆவார். உடல் ஒருபோதும் ‘நான்’ என்னும் ‘தன்மை’யல்ல, முதலாம் நபர் அல்ல என்பதுதான் உங்களுக்கு இருக்க வேண்டிய முதல் புரிதல்.

இந்துமதத்தை பயிலும் அனைத்து இந்துக்களுக்கும், பயிற்சி செய்யும் அனைத்து யோகிகளுக்கும் உடல் என்பது முன்னிலை ஆகும், இரண்டாம் நபராகும். புரிந்துகொள்ளுங்கள், யார் ஒருவர் உடலை முன்னிலையாகக் காண்கிறாரோ அவர் அனைத்து உடல் நோயிலிருந்தும் விடுபடுவார்.  ஏதாவது ஒரு நோயை நீங்கள் வெல்ல வேண்டும் என்றால் உடலை முன்னிலையில், இரண்டாம் நபராக பார்ப்பதே அதற்குரிய ஒரு நுட்பமாகும். இதுவே அதற்கான செயல்முறை, வரமும் ஆகும்.

அடிப்படை நோயே பசியும் தூக்கமும்தான். அங்கிருந்துதான் அனைத்து நோய்களும் ஆரம்பமாகின்றன. 60,000 நோய்கள் அங்கிருந்து ஆரம்பிக்கின்றன.

உண்மையான இந்திய ஆயுர்வேதம் 60,000 நோய்கள் மற்றும் குறைபாடுகளைக் கண்டறிகிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 60,000 நோய்கள் மற்றும் குறைபாடுகளுக்கும் ஆயுர்வேதத்தில் மருந்துகள் இருக்கின்றன. நோய்க்கான தீர்வு இருக்கின்றன. வெறுமனே நோய் பராமரிப்பு அல்ல.

கேளுங்கள், ஆயுர்வேதத்தின் தொலைநோக்கு அறிக்கை, ‘என்றென்றும் இளமையாக வாழ்’  என்பதாகும். பெரும்பாலான மருந்து நிறுவனங்களைப்போன்று யாரோ ஒருவர் உடல் / மனதை அவர்களுடைய வருமானத்திற்கான நிலையான மூலதனமாக உபயோகம் செய்வதற்காக ஆயுர்வேதம் உருவாக்கப்படவில்லை.  அனைத்து சாத்தியக்கூறுகளுடன் எப்போதும் வாழ் என்பதே ஆயுர்வேதத்தின் அடிப்படை தொலை நோக்குப் பார்வை ஆகும். ஆயுர்வேதத்தின் நேர்மை என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. மேலும் அது முற்றிலும் மாறுபட்ட நிலையில் இருக்கிறது.

ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை நீங்கள் உடலை முன்னிலையாக புரிந்துகொண்டால் அடிப்படை நோய்களான பசி தூக்கம்கூட மறைந்துவிடும். உடல் உண்மையில் ‘தன்மை’ அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

உடலே ‘நீங்கள்’, உடலைத் ‘தன்மை’ என்று உங்களுக்கு கற்று கொடுக்கப்பட்டதுதான் அடிப்படை மாயை. மேலும் அதிலிருந்துதான் அனைத்து அடிமைத்தனமும் சுரண்டலும் ஆரம்பிக்கின்றன. உடலே ‘தன்மை’ என்கிற இந்த அடிப்படை மாயையோடு நீங்கள் கட்டப்பட்டவுடன் அனைவரும் உங்களை சுரண்ட ஆரம்பிக்கின்றனர்.

இரண்டாவது வெளிப்பாடு…

நான் உங்களுக்கு கூறுகிறேன், நான் இந்த கூற்றை அறிவிக்கிறேன். வெறுமனே இந்த ஒருபுரிதல் போதும். உங்கள் உடல் தன்மையல்ல. அது உங்களுக்கு முன்னிலையாகும். நீங்கள் அனைத்து நோய்களையும் குறைபாடுகளையும் வெற்றி கொள்வீர்கள். நீங்கள் எப்போதும் ரோகியாக இருக்கமாட்டீர்கள். நீங்கள் போகியாக இருப்பீர்கள்.

ரோகி என்பது எப்போதும் நோயுடன் இருப்பது. போகி என்பது எப்போதும் இனிமையாக இருப்பது. இந்த ஒரு சக்தி வாய்ந்த புரிதல், நீங்கள் இந்த ஒரு அறிவார்ந்த புரிதலை உங்களுக்குள் வெளிப்படுத்திவிட்டால், உங்கள் ரத்தம் முழுவதும் தேன்போன்று இனிமையை உணர்வீர்கள். உங்களுக்குள் இந்த சக்தி வாய்ந்த புரிதல் நிகழ்ந்தால், உங்கள் உடல் மிகுந்த போகத்தைக் கொண்டிருக்கும், இனிமையைக் கொண்டிருக்கும், மிகுந்த தெய்வீக ஈர்ப்பை கொண்டிருக்கும். இந்த ஒரே ஒரு அறிவார்ந்த புரிதல் இதைச் செய்யும்.

உங்கள் உடலை ‘நீ’ என்கிற முன்னிலையாகப் பாருங்கள். முன்னிலை என்கிற நிலையில், இரண்டாம் நபர் எனும் நிலையில் உடலில் என்ன நடக்கிறது என்று சாட்சியாகப் பாருங்கள். உடலை முன்னிலையாக நடத்துங்கள். நீங்கள் சாப்பிடும்போது, உடல் சாப்பிடுவதைப் பாருங்கள், நீங்கள் தும்மும் போது உடல் தும்முகிறது. நீங்கள் உங்கள் உடலைப் முன்னிலையாக உணரும்போது, நீங்கள் எதைச் செய்தாலும் அது மங்களமானது.

‘த்விஜா’ என்னும் மறுபிறவி என்பது உடலை முன்னிலையாகப் பார்ப்பதாகும். கவனமாகக் கேளுங்கள், உங்களில் யார் ஒருவர் உடலை முன்னிலையாகப் பார்க்கிறீர்களோ, நீங்கள் குறைவாக சாப்பிடுவீர்கள். நீங்கள் எது தேவையோ அதை மட்டும் சாப்பிடுவீர்கள். உணவோடு தொடர்புடைய தரம்/அளவின் ஒருமைப்பாடு தானாகவே நிகழ்ந்துவிடும். தூக்கம் குறையும், தூக்கத்தின் தரம் அதிகரிக்கும். தூக்கத்தின் ஆழம் துரியமாகும். உங்கள் தோல் பளபளக்கும்/பிரகாசிக்கும். நீங்கள் உங்கள் உடலை முன்னிலையாகப் பார்க்கும்போது, நீங்கள் மிகவும் வசீகரமான, அழகான நபராக மாறுவீர்கள். நீங்கள் அற்புதமான போகியாவீர்கள். உண்மையான போகி அனைவருக்கும் போகத்தைக் கொடுப்பார். அவர் மிக அதிகமாக பிறரைக் கவர்ந்திழுப்பார். அனைவருக்கும் போகத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்பார். நீங்கள் உங்கள் உடலைப் முன்னிலையாக பார்க்கும்போது உங்கள் ரத்தம் முழுவதும் தேன் போன்று உணரும்.

புரிந்து கொள்ளுங்கள், எந்த ஒரு இந்து மதத்தில் நீங்கள் தீக்ஷை பெற்றிந்தால் நீங்கள் ஒரு போகி ஆவீர்கள். இந்து மதத்தின் எந்த ஒரு தீக்ஷையும் உங்களை ‘த்விஜா, மறு பிறவி’ எடுத்தவர் என்று அறிவிக்கிறது. அப்படியென்றால் இப்பொழுதிலிருந்து உங்கள் உடல் முன்னிலையாகும், இனி ‘தன்மை’ அல்ல. நீங்கள் இந்து பெற்றோர்களுக்கு பிறந்திருந்தால், நீங்கள் ஏதாவது ஒரு தீக்ஷை முறையில் தீக்ஷை பெறப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவீர்கள். காயத்ரி தீக்ஷையோ அல்லது சிவ தீக்ஷையோ அல்லது வைஷ்ணவ பஞ்ச ஸம்ஸ்கார சம்பிரதாயம் எடுப்பீர்கள்.

இந்து மதத்தின் எந்த ஒரு தீக்ஷையாலும் நீங்கள் த்விஜா, மறுபிறவி எடுத்தவர் ஆவீர்கள். இப்பொழுதிலிருந்து, நீங்கள் இந்து மதத்தில் தீக்ஷை அளிக்கப்பட்ட க்ஷணத்தில் இருந்து, அடிப்படை சத்தியம் உடல் உங்களுக்கு முன்னிலையாகும்.

நீங்கள் உங்கள் உடலை தன்மையாகப் பார்க்கும் வரை நீங்கள் ஒரு ரோகி.

உங்கள் உடலை முன்னிலையாகப் புரிந்து கொள்ள ஆரம்பித்த க்ஷணத்தில் இருந்து நீங்கள் ஒரு போகி.

நீங்கள் செய்யும் அத்தனையும் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இனிமையாகும். காலையில் இருந்து இரவு வரை உங்கள் உடலை முன்னிலையாகப் பாருங்கள். உடல் சாப்பிடுகிறது, உடல் சோர்வாக உணர்கிறது, சரி, உடல் தூங்குகிறது. நாள் முழுவதும் இந்த புரிதலைக் கொண்டிருங்கள். நீங்கள் திடீரென இந்த வசீகரமான தெய்வீகமான ஜீவனை கொண்டிருப்பீர்கள். உங்கள் முக பாவனைகள் எதிர்வினைகள் போன்ற அனைத்தும் படம் பிடிக்கப்பட்டு திரையில் காண்பிக்கப்படலாம்.

‘பிரபஞ்ச பிக்பாஸ்’ என்கிற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். யாரெல்லாம் தங்கள் உடலை தன்மையாக உணர்கிறீர்களோ அப்போது எப்படி நடந்து கொள்கிறீர்கள், எப்படி எதிர்வினை செய்கிறீர்கள் மற்றும் எப்படி நோய்வாய்ப்படுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

எப்போதெல்லாம் உங்கள் உடலை தன்மையாக உணர்கிறீர்களோ அப்போது எப்படி நடந்து கொள்கிறீர்கள், எப்படி எதிர்வினை செய்கிறீர்கள் மற்றும் எப்படி தெய்வீகமாக இருக்கிறீர்கள் என்பதை புரிய வைப்பதற்காக உண்மையில் இந்த பிரபஞ்ச பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த விரும்புகிறேன். கைலாச விஷன் டீம் பிரபஞ்ச சவால் என்கிற இந்த நிகழ்ச்சியைக் கையாளலாம்.

மூன்றாவது வெளிப்பாடு…

உங்கள் உடல் உங்களுக்கு படர்க்கையாக இருந்தால் நீங்கள் யோகியாவீர்கள்.

நீங்கள் எப்படி மூன்றாவது நபரை நடத்துவீர்கள்? ‘அவன், அவள்’ என்கிற அளவிற்கு நீங்கள் உங்கள் உடலில் இருந்து தள்ளி இருப்பதை உணர ஆரம்பித்தால் நீங்கள் வெறும் உடல் மன நோய்கள், பலவீனங்களில் இருந்து மட்டும் விடுதலை அடையாமல் நீங்கள் உயிரோட்டம் பெற்று அனைத்து அசாதாரண சாத்தியங்களையும் வெளிப்படுத்த ஆரம்பிப்பீர்கள்.

உங்கள் உள்ளுறுப்புகளை புத்துணர்வாக்கி உங்களை இளமையாக்கும் ஒரே முறை யோகா மட்டுமே என்று புரிந்து கொள்ளுங்கள். உடற் பயிற்சிக்கூடம் உங்கள் தசைகளை உருவாக்கலாம். பிலாடீஸ் (உடற் பயிற்சி முறை) மற்றும் ஓட்ட பயிற்சி போன்ற பிற உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் உங்கள் தசைகளை உருவாக்கலாம். யோகா மட்டுமே உங்கள் உடல் வடிவமைப்பை பிரபஞ்ச வடிவமைப்போடு இணைத்து உங்கள் உள்ளுறுப்புகளை புத்துணர்வாக்குகிறது, சுத்தம் செய்கிறது, தூய்மையாக்குகிறது மற்றும் உங்கள் உள்ளுறுப்புகளை இளமையாக்குகிறது என்று தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

குண்டலினி சக்தி என்னும் உயிர்சக்தி யோகாவின் மூலம் மட்டுமே உங்கள் உள்ளுறுப்புகளுக்குள் பாய்ச்சப்படுகிறது.

உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி செய்யும் மக்களுக்கு தசைகள் உருவாகலாம். ஆனால் நீங்கள் அவர்கள் முதுகில் ஒரு படத்தை ஒட்டினால் கைகளை வளைத்து அவர்களால் அதை எடுக்கமுடியாது. யோகா செய்யும் ஒருவரால் அதை மிகவும் எளிதாக எடுத்துவிடமுடியும். உடற்பயிற்சிகூடத்தில் பயிற்சி பெற்றவர்களால் பத்மாசனத்தில் எளிதாக உட்கார்ந்து நீண்ட நேரம் பெரிய சாத்தியங்களை வெளிப்படுத்தமுடியாது.

பரமசிவனைப் பொறுத்தவரை யோகா என்பது உங்கள் உடலை முன்னிலை படர்க்கை மற்றும் நான்காவது நபராக உருவாக்கும் ஒரு விஷயம்.

நீங்கள் உங்கள் உடலை படர்க்கையாகப் பார்க்கும்போது ‘அவன், அவள்’ என்கிற படர்க்கையில் இருக்கும் அனைத்து சாத்தியங்களும் வெளிப்பட ஆரம்பிக்கும். நீங்கள் யோகி ஆகிறீர்கள். நீங்கள் உங்கள் உடலை தன்மையாகப் புரிந்துகொள்ளும்போது நீங்கள் ரோகி, வியாதியுள்ளவர் ஆகிறீர்கள்.

நீங்கள் உங்கள் உடலை முன்னிலையாகப் பார்க்கும்போது நீங்கள் போகி. இனிமையானவராக மகிழ்ச்சியானவராக மாறுகிறீர்கள்.

போகம் என்பது யோகாவைவிட தாழ்ந்ததுதான். ஆனால் ரோகத்தைவிட உயர்ந்தது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் உங்கள் உடலை முன்னிலையாகப் பார்த்தால் அதிகமான நிறையுணர்வு, அதிகமான உடல்நலம் ஏற்படும். குறையணர்வுதானாகவே மறைந்துவிடும்.

யார் ஒருவர் இந்து மதத்திலிருந்து தீக்ஷை எடுத்திருந்தாலும், நீங்கள் உங்கள் உடலை முன்னிலையாகப் பார்க்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறீர்கள்.

பயிற்சி செய்யும் யோகி தன் உடலை படர்க்கையாகப் புரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் உங்கள் உடலை படர்க்கையாக புரிந்துகொள்ள ஆரம்பித்தால் நீங்கள் எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் வெளிப்படுத்தத் துவங்குவீர்கள். அசாதாரணமான யோக சாகசங்கள் புரிவீர்கள். உங்கள் தசையில் பயம் இருக்காது. தசையில் இருக்கும் பயம்தான் வலி என்று நவீன சொற்களில் அழைக்கப்படுகிறது. தசை நினைவுகளில் இருக்கும் பயம்தான் வலியாகும். நவீனமருத்துவமுறையில் உங்கள் தசைநினைவுகளில் பயம் இல்லை என்றால் உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் அது செய்யும்.

நீங்கள் சக்திவாய்ந்த புரிதல்களை நோக்கி மேலே செல்ல செல்ல உங்கள் உடலில் அதிகமான உயிர் சக்தி வெள்ளமாக பாய்ச்சப்படும். நீங்கள் உங்கள் உடலை படர்க்கையாக நடத்த ஆரம்பித்தால் அனைத்து உச்சபட்ச யோக சாகசங்கள், யோக சாத்தியங்கள் உங்களுக்குள் வெளிப்படத் துவங்கும். அர்ஜுனனைப் போல வில் வித்தையில் தேர்ச்சி பெறுவதற்கு எளிய நுணுக்கம் உங்கள் உடலை படர்க்கையாகப் பார்ப்பதுதான். நீங்கள் உங்கள் உடலை படர்க்கையாகப் பார்க்க ஆரம்பித்தால், இலக்கு, எய்பவர், அம்பு ஆகிய மூன்றும் ஒன்றே என்பது உங்களுக்கு தெரியும்.

பொறாமை உங்களை புழுங்கச்செய்கிறது. ஒப்பிட்டு பார்த்தல் உங்களை புழுங்கச்செய்கிறது. நீங்கள் சக்திவாய்ந்த புரிதலைகளைக் கற்று கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் உடலை படர்கையாகப் பார்த்தால் உங்கள் உயரம் அளவிற்கு உங்களால் எழும்ப முடியும். உங்களால் இறகைப் போல உயர முடியும். உங்களுக்கு எந்த வலியும் பயமும் இருக்காது. நீங்கள் ஓர் அழகிய இறகைப் போல இருப்பீர்கள். நீங்கள் உங்கள் உடலை படர்க்கையாகப் பார்த்தால் நடராஜனைப் போல நடனமாடுவீர்கள். நீங்கள் உங்கள் உயரத்தில் 50% எழும்பி குதித்தால் உங்கள் உடலை நீங்கள் முன்னிலையாகப் பார்க்கிறீர்கள். உங்கள் உடலை படர்க்கையாகப் பார்த்தால்தான் உங்களால் உங்கள் முழு உயரத்திற்கும் எழும்பி இறகைப்போல கீழே இறங்கி தொடர்ந்து நடனம் ஆட முடியும். உங்கள் தசையில் அல்லது உடலில் எந்த வலி உணர்வும் இருக்காது. கயிற்றில் செய்யும் யோகா அல்லது சிவஸ்தம்பத்தில் நீங்கள் தேர்ச்சி பெறுவதற்கும் இதுவே அடிப்படை தேவையாகும்.  யோகக் கிரியைகள், நச்சுத்தன்மைகளை நீக்கும் வழி முறைகள் ஆகிய அனைத்தும் உங்கள் உடல் உள்ளுறுப்புகளை புத்துணர்வாக்கும். உங்கள்  இனக்கீற்று அமிலத்தின் இழைகளில் (DNA Strand) மற்றும் மரபணு குறியீட்டில் (Genetic code) மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் விழிப்புணர்வில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்படும். குண்டலினி சக்தியை உடலில் விடுவிக்கும். மற்ற எந்த உடல் பயிற்சி முறையிலும் இந்த வாய்ப்புகள் இல்லை. ஆயர்வேதத்தில் பரமசிவன் இதை வெளிப்படுத்தியுள்ளார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலத்திலும் இதை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வெளிப்பாடுகள் இப்போது புதுப்பிக்கப்படுகின்றன.

நான்காம் வெளிப்பாடு …

உங்கள் உடலை நான்காவது நபராக பார்ப்பது என்றால் என்ன? எல்லா உடலையும் உங்கள் உடலாகப் பார்ப்பதுதான். உங்களால் ஒரே நேரத்தில் எல்லா உடல்களையும் உங்கள் உடலைப் போல இயக்க முடியும். இதைத்தான் நான் அவதாரம் என்று அழைக்கிறேன். மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரின் உடல்கள் அவதார உடல்களாகும். யாரெல்லாம் மற்ற உடல்களின் மூலம் சக்திகளை வெளிப்படுத்துகிறீர்களோ அந்த சில நொடிகளுக்கு உங்கள் உடலை நான்காவது நபராக புரிந்து கொள்ளுங்கள். என்னுடைய யுவராஜன் யுவராணி ஆக இருப்பதற்கு அடிப்படை தகுதி, உங்கள் உடலை நான்காவது நபராக புரிந்து கொள்வதுதான்.

உங்கள் உடலை நீங்கள் தன்மையாகப் பார்த்தால் உங்களுக்கு என்னிடத்தில் ஒரு வேலையும் இல்லை. எனக்கும் உங்களிடத்தில் ஒரு வேலையும் இல்லை. நீங்கள் தீக்ஷை பெற்றிருந்தால் உங்கள் உடலை முன்னிலையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் படர்க்கையில் வாழ்ந்தால் கைலாசவாசியாகலாம். நீங்கள் நான்காவது நபரையும் வெளிப்படுத்தினால்தான் என்னுடைய யுவராஜன் அல்லது யுவராணி ஆக முடியும்.

யோகா என்பது உங்களை தன்மையிலிருந்து முன்னிலைக்கும், முன்னிலையிலிருந்து படர்க்கைக்குக்கும், படர்க்கையிலிருந்து நான்காவது நபருக்கு உயர்த்திக் கொள்வதுதான். இந்த முன்னேற்றத்திற்காக நீங்கள் பல் வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நான் என்னுடைய உடலை நான்காவது நபராக பார்க்கும்போது என்னுடைய உடலின் வேதியியல் எனக்குத் தெரியும். என்னுடைய உடல் எப்படி இயங்குகிறது என்று தெரியும். அதே வேதியியலை அவுஷதங்கள், மண்டலங்கள் மூலம் உங்கள் உடலுக்குள் பிரதிபலிக்க முடியும். அதே வேதியியல் உங்கள் உடலுக்குள் நடக்கும்போது உங்களுக்கு என் உடலின் க்ஷண நேர அனுபவம் கிடைக்கிறது.

உண்மையில் விழிப்புணர்வின் உயர்ந்த நிலையின் க்ஷண நேர அனுபவத்தை நீங்கள் அடைந்த பின் நீங்கள் மிகவும் மயங்கி அந்த நிலையிலேயே வாழத் தொடங்குகிறீர்கள்.

ஏழ்மை என்பது தவறான நம்பிக்கைகளை தேர்வு செய்வதாகும். தவறான நம்பிக்கை என்பது ஆன்மீகத் தற்கொலையாகும். 

நம் உள்ளே இருக்கும் உறுதிப்படுத்தும் அமைப்பை (internal corroborative system) முறையாக செயல்படுத்த தவறான நம்பிக்கையை யார் பயன்படுத்திகிறார்களோ அவர்கள் சித்தம் மேலும் மேலும் உறுதியாகிறது. உள்ளே இருக்கும் உறுதிப்படுத்தும் அமைப்பின் இறுக்கத்தை தடுப்பதுதான் யோகா என்பது. 

தவறான நம்பிக்கையை விடுத்து பக்தியை பயன்படுத்தி யார் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் பரமசிவனொடு ஒருமைத்தன்மையை அடைவார்கள்.

உங்கள் வாழ்க்கையில் எது நிகழ்ந்தாலும், உங்களை உள்ளுக்குள் ஸ்திரப்படுத்த ‘பக்தி’யையே உயவுப்பொருளாக பயன்படுத்துங்கள்.

ஒருமுறை தாக்குதல்களும், பிரச்சனைகளும் எல்லைமீறி கழுத்துவரை வந்தது. அனைத்தும் முடிந்துவிட்டது எனும் நிலை வந்தது. அப்போது மூத்த சன்யாசிகள் சுற்றி அமர்ந்திருந்தார்கள். அவர்கள், ‘ஏன் இவ்வாறு நிகழ்கிறது?’ என்று கேட்டார்கள். அவர்களுக்கு பதிலாக சிரிப்பை உதிர்த்துவிட்டு, ‘என் குரு பரமசிவன் என்றும் எனக்கு நன்மையே செய்திருக்கிறார். நான் என்றென்றும் அவருடைய கற்புடைய சீடனாவேன். பரமசிவனை, என் குருவை ஒருபோதும் கேள்வி கேட்கமாட்டேன். அவர் எனக்கு நன்மையே செய்திருக்கிறார். என் வழியாக நன்மையே செய்வார். உலகிற்கு நன்மையே வழங்குவார்.

நான் வரும்போது எடுத்து வந்த மிகப்பெரிய சொத்து, பக்தி. பரமசிவனிடம் பெற்ற வரம், ‘பக்தி’. உங்களை உள்ளுக்குள் ஸ்திரப்படுத்தும் அமைப்பாக பக்தியை கொண்டிருங்கள். நீங்கள் வாழ்க்கையில் எதைப் பெற விரும்புகிறீர்களோ, அதை பெறுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்