சமூக சீரழிவிற்கு ஒரே தீர்வு – ஆன்மீகம்!
லட்சக்கணக்கானவர்கள், பரமசிவப் பரம்பொருள் அளிக்கும் மெய்ஞான சத்தியங்களை உள்வாங்கி, பராசக்தியை வாழ்ந்து வௌிப்படுத்தி இந்த ஞான வாழ்க்கைமுறை சத்தியம் மற்றும் சாத்தியம் என்று உலகிற்கு சொல்லி அதன் மூலமாக உலகை உயிர்ப்பித்து, சமூகத்தின் மீது மக்களின் மீது அள்ளிப் பொழியப்படும் ஆபாச ஆலகால விஷத்திலிருந்து, மக்களைக் காத்து சமூகத்தின் சீர் அமைப்பிற்கு பலமாகப் பாலமாக இருந்துவிடுங்கள்!
ஆன்மீகத்தின் மூலமாக சமூகத்தில் பல்லாயிரம் பேருக்கு, பல லட்சம்பேருக்கு பரமசிவஞான சத்தியங்களை சொல்லி சமூத்தை மேம்படுத்துவோம். அதற்காகத்தான் இதெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்.
உங்கள் ஒவ்வொருவரின் மூலமாகவும், நீங்களும் இந்த பரமசிவஞானத்தை வாழ்ந்து உங்கள் வாழ்க்கையும் மேம்பட்டு, உங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பரமசிவக்ஞானத்தை வாழ்ந்து அவர்கள் வாழ்க்கையும் மேம்படுத்துவதற்காகத்தான் என் வாழ்க்கையைத் தியாகம் செய்திருக்கின்றேன்.
வீட்டிற்கு ஒருவராவது கிளம்புங்கள்!
இந்தப் பரமசிவக்ஞான சத்தியத்தை உள்வாங்கி அதை கையில் எந்தி தானும் மலர்ந்து, உலகிற்கு தருவதற்கு வீட்டிற்கு ஒருவராவது கிளம்புங்கள்!
தமிழ்நாடு எதிர்காலத்தில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு தீவிரவாதத்தில் சிக்கி அழியாமல் இருக்க வேண்டுமானால், உங்கள் வீடு மட்டும் அல்ல…
உங்கள் ரோடும் அமைதியோடும் இனிமையோடும் இருக்க வேண்டும் என்று நினைத்தீர்களானால்….
வீட்டுக்கு ஒருவராவது கிளம்புங்கள் பரமசிவ சேனையோடு சேர. இந்த உயர்ந்த ஆன்மீக சத்தியங்களை உ ள்வாங்குங்கள்.
அதிர்ஷ்டம் ரயிலில் வருவதற்குள் தரித்திரம் தந்தியில் வருகிறது என்று தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
ராட்சத ர்கள் ஆலகால விஷத்தை சுனாமியைவிட வேகமாக சமூகத்தில் பரப்புகின்றார்கள்.
ஆனால் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்.. “ஓ.. இப்பொழுதுதான் நான் யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என்ன செய்யலாம் என்று..”
நீங்கள் நினைப்பதற்கு முன் அவர்கள் உங்களை அழித்துவிடுவதற்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
விழித்துக்கொள்ளுங்கள்!