வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் சமூகத் தீவிரவாதம்!
உங்களை ஆபத் சன்யாசம் எடுத்து ஆதீனங்களுக்கு வரச் சொல்வது, எனக்கு எந்த விதத்திலும் சுயநலத்திற்காக அல்ல! ஒரே ஒரு நலம்.. சமூகத்தின் நலன்.
லட்சக்கணக்கான சமூகத்தீவிரவாதிகள், சமூக விரோதிகள், சமூகத்தீவிரவாதிகள், அதாவது.. கொலை செய்தால் சிறைக்குப்போவோம், கற்பழிப்பு செய்தால் சிறைக்குப்போவோம் என்று தெரிந்தாலும் அந்த அறிவு மேலோங்கி நிற்காத அளவிற்கு அழுத்தப்பட்டு கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற எல்லா செயல்களிலும் ஈடுபடுவதற்கான மென்டல் ப்ரோக்கிராமிங் கோடிக்கணக்கான பேர் மீது தொடர்ந்து செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
தொலைக்காட்சி தொடர்களாலும், வன்முறை மற்றும் தொடர் ஆபாச செய்திகளாலும் உங்கள் மீது நீங்களே ஆபாச விஷம், சாராயம், இது எல்லாவற்றையம் திணித்து, விழிப்புணர்வற்ற கூட்டு எதிர்மறை சக்தியால் உங்களை அறியாமலேயே ராட்சத ரோபோக்களாக நீங்கள் உங்களை ப்ரோக்கிராம் செய்துகொண்டு இருக்கிறீர்கள்.
சாராயமும், அதாவது சாராயம் குடித்த நிலையும் இந்த ஆபாச பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், னநயனடல உழஅடியைெவழைெ. ஏனென்றால் சாராயம் குடித்த அந்த நிலையில், மது அருந்திய போதை வஸ்த்துக்களின் போதை இருக்கின்ற அந்த நிலையில் உங்களுக்கு சரி எது? தவறு எது? நிஜம் எது? நிழல் எது என்றே தெரியாது.
சரி தவறு ஒன்று, நிஜம் எது நிழல் எது என்று பகுத்து அறிய முடியாத அளவிற்கு அந்த போதையில் நீங்கள் இருக்கும்பொழுது இந்த ஆபாச காட்சிகள் உங்கள் மீது திணிக்கப்படும்பொழுது உங்களுடைய உள்ளுணர்வு, இன்னர் ஸ்பேஸ், பயோமெமரி இதனால் ப்ரோக்கிராம் ஆகிவிடும்.
காமமும், தீவிரவாதமும், வக்கிரமும் அளவுக்கு மீறி உங்களுக்குள் செல்லும்பொழுது உள் செல்லும்பொழுது உங்களால் உண்மை எது? பொய் எது? என்று தெரிந்துகொள்ள முடியாத அளவிற்கு.. நீங்கள் நிலை தவறி இருக்கும் பொழுது உங்கள் உயிர், ரோபோப் ப்ரோக்கிராமிங் மாதிரி, சாப்ட்வேர் ப்ரோக்கிராமிங் மாதிரி உங்கள் உயிர் ராட்சஸதனத்திற்கு ப்ரோக்கிராம் செய்யப்படுகின்றது!