விஷம்போல் பரவும் எதிர்மறை சக்தி

கூட்டு எதிர்மறை சக்தி  – கலெக்டிவ் நெகட்டிவிட்டி என்று சொல்வோம்… அது ஒரு ஆலகால விஷம்.

அந்த ஆலகால விஷம் அளவுக்கு மீறி சமூகத்தின் மீது திணிக்கப்படும் ஆபாச ஆலகால விஷம்  அளவுக்கு மீறி சென்றுகொண்டிருக்கிறது!

எற்கனவே 47 சதவிகிதம் பேர் 24 மணி நேரமும் குடிக்கின்ற பழக்கத்திற்கு வந்துவிட்டார்கள்.

ஒருவன் குடித்துவிட்டு, வேறு என்ன செய்கிறார்கள்…உடனே தொலைக்காட்சியைத்தான் பார்க்கிறார்கள். 

தொலைக்காட்சியில் எதைத்தொடர்ந்து காண்பிக்கின்றார்கள்.., தொடர்ந்து வன்முறை மற்றும் கூட்டு கற்பழிப்பு நிகழ்ச்சிகளைத்தான் ஔிபரப்புகின்றார்கள். குடித்துவிட்டு போதையில் இருக்கின்ற மனம் சிதைந்துபோன மனமாக இருக்கும்.

சிதைந்துபோன, பதைபதைப்பிற்கு உள்ளான நேர்மையான தௌிவும், அறிவும் இல்லாத அந்த மனதிற்குள் இதுபோன்ற காட்சிகள் திணிக்கப்படும்பொழுது இயல்பாகவே அவன் ப்ரோக்கிராம் செய்யப்பட்ட ரோபாட் மாதிரி ஆகிவிடுவார்கள். 

மதுவும், அளவுக்கு மீறின ஆபாசம், வக்கிரம், வன்மம், ஆபாசம் சார்ந்த பொழுதுபோக்கு காட்சிகள் – இது இரண்டும் டெட்லி காம்பினேஷன். ஆலகால விஷம். 

இந்தக் கொள்ளையடிக்கிற, கொலை செய்கிற, கற்பழிப்புக் காட்சிகளைப் பார்த்தால் சாதாரண மனிதர்களுக்கே அது பெரிய பாதிப்பு!

நம் வாழ்க்கையில் எப்பொழுதாவது ஒரு ஆத்திரம், வேகம் வரும்பொழுது, செஞ்சிடுவோம்டா, வருவதை  பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிற ஒரு வேகத்தில் தவறிழைத்துவிடுவார்கள். 

அதில் மது போன்ற போதை வஸ்துக்களை அருந்திவிட்டு சிதைந்த மனதுடன்  எது சரி – தவறு என்கிற தௌிவு இல்லாமல், எது உண்மை? எது பொய்? எது நிஜம்?  எது நிழல்? என்கிற தௌிவில்லாத மயக்க நிலையில் இருக்கின்ற ஒரு மனிதனுக்குள் அளவுக்கு மீறிய தீவிரவாதம், வன்மம், ஆபாசம் போன்ற காட்சிகள் அவனை அறியாமல் சிதைந்துபோன அவன் மனதில் பதிந்து ப்ரோக்கிராம் ஆகிவிடும். அதன் பக்கவிளைவு, எதிர்விளைவு இதைப் பற்றிய நினைவுகள் அவன் மனதிற்குள் வரவே வராது.

பதைபதைப்பு ஏற்பட்ட உடனேயே,
உடலில் ஹார்மோன், கெமிக்கல் அதிகமான உடனேயே.. கொலை, கொள்ளை, கற்பழிப்பு இதுபோன்ற செயல்களை நோக்கி, இயற்கையாக உடலை உந்துகின்ற இந்த ரோபோட் மாதிரி உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

முன் இருப்பது தங்கையா? தாயா? என்று கூடத் தோணாது!

இப்படித்தான் அளவிற்கு மீறி மனிதர்கள் மீது ஆபாச விஷம் பொழியப்படுகின்றது.

இப்படி லட்சக்கணக்கானபேர் ப்ரோக்கிராம் செய்யப்பட்ட ரோபோட் மாதிரி  ரோட்டில் இறங்கி, நாட்டில் இறங்கி காட்டுத்தனமாக கொள்ளையும், கூட்டு கற்பழிப்பும் செய்யத் துவங்கினால் சமூகத்தைக் யாரால் காப்பாற்ற முடியும்?

அடுத்த தலைமுறைக்கு, ஏற்கனவே நம் பாட்டனும், பாட்டியும், தாய் தந்தையரும் நமக்குக் கொடுத்துவிட்டுபோன அமைதியான இனிமையான வாழ்க்கை முறையை நாம் காப்பாற்றி வாழவில்லை ! இதைவிட மோசமாக… சமூகத்தை உருவாக்கி நாம் அடுத்த தலைமுறைக்கு குடுத்துவிட்டு போகப் போகின்றோமா?

என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? எங்கு சென்று கொண்டிருக்கின்றோம்?

கெட்டவர்கள் வேகமாக வேலை செய்வவைிட, நல்லவர்கள் இயங்காமல் இருப்பதால்தான் நாடு நாசமாயப் போகின்றது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்