ஆபத்சன்யாசம் : காவி உயிருக்கு அழகு…
காவி ஆவிக்கு அழகு!
எந்த பவுடரும், எந்த மேக்கப்பும் உடம்புக்குதான் அழகு, காவி உயிருக்கு அழகு!
ஆபத் சன்யாசம் ஒரு விதத்தில் நான் கொடுக்கும் சன்யாசத்தை விட உயர்ந்தது! காரணம் என்ன வென்றால் நான் கொடுக்கின்ற சன்யாசத்தில், நான் இருக்கின்றேன் என்கிற தைரியத்தினால் எடுத்துவிடுகின்றீர்கள்!. ஆபத் சன்யாசத்தில் நீங்களே சுதந்திரமாக நான் குருவோடு நிற்கின்றேன் எடுக்கின்றீர்கள்.
சன்யாசம் வீரம் என்றால் ஆபத் சன்யாசம் தீரம்!
ஔவையும்.. ஆண்டாலும், ஞானசம்பந்தரும், சுந்தரரும், நாவக்கரசரும், மணிவாசகரும் வாழ்ந்த இந்த பூமியில், வாழையடி வாழையென ஞான கர்பம் தாங்கியத் தமிழ்தாய் ஞானமே வடிவான தெய்வீக பூமியான தமிழ் மண்ணை தமிழ் மக்களை அளவில்லாது அழித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
நாடு நரகம் ஆகாமல் இருக்க வேண்டும் என்றால், உயர் ஞான சத்தியங்களை வாழ்பவர்கள், பரமசிவம் பரம்பொருளை தன்னுள் வாங்கி உலகிற்கு அளிப்பவர்கள் குறைந்தபட்சம் சில லட்சம் பேராவது தமிழ் நாட்டிற்குள் இருந்தாக வேண்டும்
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்..
உங்களுடைய அடுத்த தலைமுறை, கற்பழிக்கப்படாமல், சொத்துக்களும், வீடும், சுரையாடப்படாமல், நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழவேண்டும் என்றால்கூட வீட்டிற்கு ஒருவராவது பரமசிவ சேனையின் பாகமாக மாறி இந்த ஞானத்தை உள்வாங்கி, உலகத்திற்குப் பரப்புகின்ற இந்த செயலில் ஈடுபடுங்கள். நாள் சொல்வது வெறும் சமூக சேவை அல்ல! இப்பொழுது இந்த சமூகத்தின் அடிப்படைத் தேவை!
கூட்டு எதிர்மறை சக்தி அதாவது கலெக்டிவ் நெகட்டிவிட்டடி என்று சொல்வோம்.. அளவுக்கு மீறிய சமூகத்தின் மீது திணிக்கப்படும் ஆபாச விஷம் – அதன் அளவு மிகவும் அதிகரித்துவிட்டது.
ஆலகால விஷத்தின் அளவு மிகவும் அதிகமாகிவிட்டது!
நீங்கள் எல்லோரும் இந்த ஞான சத்தியங்களை உள்வாங்கி அதை உலகத்தோடு பகிர்ந்துகொள்கின்ற இந்த செயலில் ஈடுபட்டால் மட்டும்தான் அடுத்த தலைமுறைக்கு ஆபத்து இல்லாத ஒரு அமைதியான சமூகத்தை நாம் விட்டுச் செல்வோம், அதன் அடிப்படைத் தேவைதான் இந்த ஆபத் சன்யாசம்.