பகவான் நித்யானந்த பரமசிவம்
இந்துமதத்தில் அவதரித்த அவதார புருஷர்கள், ஞானகுருமார்கள், சித்தர்கள், யோகிகள் மற்றும் இன்றைய இந்துமத தலைவர்கள், உலகளாவிய சமூகத்தினரால் ‘இறைசக்தியின் அவதாரமாக’ கணிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வழிபடப்படும் வாழும் அவதார புருஷர்.
இந்துமதத்தின் மூலதெய்வம் இறைவன் பரசிவனின் நேரடி அவதாரம்.
பரமசிவன் வாழும் திருக்கைலாயம் எனும் ஞானசக்தி மண்டலத்தை – பூமியில் ஸ்ரீகைலாஸா எனும் ஒரே இந்து தேசமாக புனரமைத்தலும், மனித உயிர் மற்றும் வாழும் அனைத்து ஜீவன்களையும் விழிப்புணர்வின் அடுத்த உயர் விழிப்புணர்வு நிலைக்கு எடுத்துச் செல்வதுமே பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அவதரித்ததன் நோக்கமாகும்.
காசி, காஞ்சிபுரம் மற்றும் மதுரை போன்ற 14 பண்டைய சர்வக்ஞபீடங்களுக்கு புத்துயிர் அளிக்கும் இந்து மதத்தின் தலைவராக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய இந்து பல்கலைக்கழகமான நித்யானந்த இந்து பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களின் நிறுவனர்.
ஒருமைத்தன்மை, அஹிம்சை, இயற்கை சமநிலைக்கு மதிப்பளித்தல் மற்றும் ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்திருக்கும் தெய்வீகத்தின் உள்ளார்ந்த ஆன்மீக சக்திகளின் வெளிப்பாடு போன்ற கைலாயத்தின் கோட்பாடுகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்பவர்.
ஸ்ரீகைலாஸத்தின் சட்டப்பூர்வமான மற்றும் முறையான கலாச்சாரம், ஆன்மீகம், மதம், சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றின் மீது நடத்தபட்ட பல திட்டமிட்ட படையெடுப்புகள், தாக்குதல்களால் உலகம் முழுவதிலும் வியாபித்திருந்த இந்த ஜீவன் முக்த சமுதாயம் இன்று குறுகிய நிலைக்கு வந்துவிட்டது. பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள், நாம் இழந்த அனைத்து ஸ்ரீகைலாஸத்தின் மரபுகளையும் மீட்டெடுத்து பூமியில் ஜீவன் முக்த சமுதாயத்தை புனரமைக்கின்றார்.
பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் பல்வேறு பரிமாணங்கள்.
1. இந்து மத அவதார அறிவியலை உணர்ந்த பல ஞானகுருமார்களால் பரமஹம்ஸர் அவர்தம் பால்யப் பருவத்திலேயே ‘பரமசிவனின் அவதாரமாக’ உணர்ந்து அங்கீகரிக்கப்பட்டவர்.
2. அருணாச்சலத்தின் ஞானப்பரம்பரை வழிவந்த ஞானகுருமார்கள், பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை அவர்தம் பால்யப் பருவத்திலேய ‘பரமசிவனின் அவதாரம்’ என்று கணித்தார்கள்.
3. ஆதிசைவம் மற்றும் சைவ சித்தாந்தம் – இரண்டையும் அவரது தாத்தா பி.ராஜு முதலியார் மற்றும் ஆச்சாரியார் திரு. பாண்டுரங்கனார் அவர்களிடமிருந்து அனுபூதியாகப் பெற்றார்.
4. இசக்கி சுவாமிகளின் நேரடி போதனையில் வேதாகமங்களை பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அனுபூதியாகப் பெற்றார்.
5. வேதாந்தம் மற்றும் தந்திர ஞானத்தை மாதா விபுதானந்தபுரி மற்றும் தம் பாட்டி அனுசுயா அம்மாள் அவர்களிடமிருந்து கற்று தேர்ந்தார்.
6. யோகம் மற்றும் யோக சக்திகளின் ஞான விஞ்ஞானத்தை, பதஞ்சலியின் அவதாரமான யோகி யோகாந்தபுரி எனப்படும் ரகுபதி யோகியிடமிருந்து அனுபூதியாக அடைந்தார்.
7. மௌன சுவாமி நாராயண சாமியின் கீழ் நிராஹார சம்யமம் மற்றும் காயகல்ப யோகத்தின் ஞான, விஞ்ஞானத்தில் அனுபூதியடைந்தார்.
8. மந்திர சாஸ்திரம், சித்த வைத்தியம், ஔடதங்கள், யந்திரங்கள் மற்றும் ரசவாத அறிவியல் இவற்றின் ஞான விஞ்ஞானங்களை திரு. நாராயணசாமி பிள்ளை தாத்தாவிடமிருந்து அனுபூதியாக பெற்றார்.
9. பரமஹம்ஸ யோகானந்தரின் சித்த வைத்திய ஞானத்தை தம் தந்தை வழி மாமா திரு.குமாரசுவாமி ஐயா அவர்களிடமிருந்தும், தஞ்சாவூர் சாது சுவாமிகளிடமிருந்தும், பரமஹம்ஸ சிவானந்தரிடமிருந்தும் அனுபூதியாகப் பெற்றார்.
10. ‘பரமஹம்ஸர் எதிர்காலத்தில் மிகப்பெரிய ராஜ சன்யாசியாகவும், அவதார புருஷராகவும் திகழ்வார்’ என்று அன்றே ஜாதகத்தைப் பார்த்து கணித்த குடும்ப ஜோதிடர் திரு. வெங்கடசாமி செட்டியார் மற்றும் தஞ்சாவூர் சுவாமிகள்.
11. அண்ணாமலை சுவாமிகளின் வழிகாட்டுதலில் ஞானத்தின் அறிவியலை அனுபூதியாக அடைந்தார்.
12. அத்வைதம் மற்றும் பக்தியோகத்தின் ஞான விஞ்ஞானத்தை விசிறி சுவாமிகள் எனப்படும் யோகிராம் சுரத்குமார் அவர்களிடமிருந்து அனுபூதியாகப் பெற்றார்.
13. பரமசிவன் மற்றும் பராசக்தி அருணகிரியோகீஸ்வரராக அவதரித்து பரமஹம்ஸருக்கு பரமசிவ ஞானம் மற்றும் பரமசிவ விஞ்ஞானத்தை அனுபூதியாக அருளினார்.
14. பரமசிவனின் அவதாரமான அருணகிரியோகீஸ்வரரிடமிருந்தே நேரடியாக சன்யாசம் பெற்றார்!
15. ஜீவன்முக்த சமுதாயம் தழைத்தோங்கும் ஒரே இந்து தேசமான திருக்கைலாய தேசத்தை புனரமைத்தவர்.
16. அருணாச்சல பரம்பரை வழிவந்த ஞானகுருமார்களால், திருவண்ணாமலை அருணாச்சல சர்வக்ஞபீடத்தின் ஆன்மீக வாரிசாக பிரகடனப்படுத்தப்பட்டார்!
17. மிகத்தொன்மை வாய்ந்த சைவ ஆதீனமான தொண்டை மண்டல ஆதீனம் – காஞ்சி சர்வக்ஞபீடத்தின் குருமஹாசன்னிதானமாக 1988ஆம் ஆண்டு அவர்தம் 10ம் வயதில் முடிசூட்டப்பட்டார்.
18. ஜீவன்முக்த சமுதாயத்தை உயிர்ப்பிக்கும் உயர்ந்த நோக்கில் டிசம்பர் 31, 1999ஆம் ஆண்டு தன் 21ம் வயதில் நித்யானந்த சங்கத்தை நிறுவினார்.
19. ஏப்ரல் 14, 2001ஆம் ஆண்டு தம் 23ம் வயதில் தமிழ்நாடு, திருச்செங்கோட்டில் ஸ்ரீ இராமகிருஷ்ண தியானபீடம், திருச்செங்கோடு ஆதீனத்தை நிறுவினார்.
20. நவம்பர் 2002ஆம் ஆண்டு பரமஹம்ஸர் தம் 24ம் வயதில், கர்நாடக மாநிலம் பெங்களுருவில் ஆதிகைலாய சர்வக்ஞபீடத்தை நிறுவினார்.
21. 2004ஆம் ஆண்டு பாக்ய நகரம் ஸ்ரீபுரம் சர்வக்ஞபீடத்தின் ஆன்மீக வாரிசாக முடிசுட்டப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டார். அன்னை பராசக்தியால் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் உருவாக்கப்பட்ட ஞான சமுதாயம் தழைத்தோங்கிய அதே இடத்தில்தான் இன்று பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்கள் ஸ்ரீபுரம் சர்வக்ஞபீடத்தை உருவாக்கியிருக்கின்றார். அவர் ஸ்ரீபுரம் சர்வக்ஞபீடத்தின் அதே ஆன்மார்த்த மூர்த்தியை தன் தெய்வீக சக்தியால் உருவாக்கியிருக்கின்றார் (மெடீரியலைஸ்) மற்றும் தேவி ஆலயத்தை எழுப்பியிருக்கின்றார். மற்றும் பரமஹம்ஸரை பரமசிவனின் அவதாரமென்றுணர்ந்து அவரை ஸ்ரீபுரம் சர்வக்ஞபீடத்தின் ஆன்மீக வாரிசாக முடிசுட்டி பட்டாபிஷேகம் செய்வித்து, ஆலயத்தையும் அவரிடம் வழங்கியிருக்கின்றார்.
22. 2004ஆம் ஆண்டு தம் 26ம் வயதில் சூர்யவம்சத்தின் ஆன்மீக வாரிசாக, சூர்யவம்ச சுராங்கி சாம்ராஜ்யத்தின் அரசராக முடிசூட்டப்பட்டார்.
23. 2007ஆம் ஆண்டு, புதுவையில் உள்ள ஆதி பல்லவ சர்வக்ஞபீடம் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களால் புனரமைக்கப்பட்டது.
24. 2007 ஆம் ஆண்டு இந்துமதத்தின் முதுகெலும்பாக திகழும் மஹாநிர்வாணி பீடத்தின் மஹாமண்டலேஸ்வரராக (ஆன்மீகத் தலைவர்) பிரகடனப்படுத்தப்பட்டார்.
25. 2008ஆம் ஆண்டு தம் 30வது வயதில் வாரணாசியில் அமைந்துள்ள காசி சர்வக்ஞபீடத்தின் ஆன்மீக வாரிசாக முடிசூட்டப்பட்டார்.
26. 2012ஆம் ஆண்டு தம் 34ஆம் வயதில் உலகின் மிகத்தொண்மை வாய்ந்த ஆன்மீகத் தலைநகரம் மற்றும் சன்யாச சாம்ராஜ்யமான மதுரை ஆதீனத்தின் 293வது குருமஹாசன்னிதானமாக முடிசூட்டப்பட்டார்.
27. இந்து மதத்தின் முதுகெலும்பாக திகழும் மஹாநிர்வாணி பீடத்தின் மஹாமண்டலேஸ்வரராக (ஆன்மீகத் தலைவர்) 2013ஆண்டு தம் 35ஆம் வயதில் அதிகாரப்பூர்வமாக முடிசூட்டப்பட்டார்.
28. 2013ஆம் ஆண்டு தம் 35வது வயதில் இந்து மதத்தின் மிகத் தொண்மை வாய்ந்த அடல் அக்காடாவின் ஆச்சார்ய மஹாமண்டலேஸ்வரராக, அடல் அக்காடாவின் தற்போதுள்ள ஆன்மீகத் தலைவர் ஆச்சாரிய ஸ்ரீ சுக்தேவானந்தஜி அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டார்.
29. 2014ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் உள்ள தஞ்சாவூர் ஆதீனத்தின் குருமஹாசன்னிதானமாக முடிசூட்டப்பட்டார்.
30. 2014ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் உள்ள வேதாரண்யம் ஆதீனத்தின் குருமஹாசன்னிதானமாக முடிசூட்டப்பட்டார்.
31. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த குருபரம்பரை வழிவந்த சோழ சாம்ராஜ்யத்தின் சொர்க்கபுர ஆதீனத்தின் குருமஹாசன்னிதானமாக 2015ஆம் ஆண்டு தம் 37ஆம் வயதில் முடிசூட்டப்பட்டார்.
32. 2015ஆம் ஆண்டு, தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆதிபீட குளதை மடத்தின் குருமஹாசன்னிதானமாக முடிசூட்டப்பட்டார்.
33. 2016ஆம் ஆண்டு தம் 38ம் வயதில், ஆயிரம் இந்துமத தலைவர்களின் சபையில் இந்துமதத்தின் போப்பாக, பரமகுருவாகத் தேர்ந்தெடுக்கபட்டார்.
34. உலகின் அதிக மக்களால் பார்த்து, கேட்டு, படித்து, பின்பற்றப்படும் ஆன்மீக சத்தியங்களை அருளிய இந்துமத ஆச்சாரியராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
35. தென்னிந்திய தொலைக்காட்சிகளில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் ‘நித்ய தர்மம்’- பிரபஞ்ச விதிகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்வியல் தீர்வுகளை வழங்கும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.
36. 26 சர்வதேச மொழிகளில் 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கும் எழுத்தாளர். இதுவரை 200 மில்லியன் புத்தகங்கள் மற்றும் ஆன்மிக கட்டுரைகள் இலவசமாக படித்து, பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.
37. பரமஹம்ஸர் அருளிய ஆன்மீக சொற்பொழிவுகளில் 10,000 மணிநேரத்திற்கும் அதிகமாக சத்சங்கங்கள் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை சமூக வலைத்தளங்களில் அதிக அளவு மக்களால் பின்பற்றப்படும் முதல் ஆன்மீக குருவாக திகழ்கின்றார்.
38. இந்து மதத்தின் மூல சத்தியங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, சிவசுத்திரம், யோகசுத்திரம், அஷ்டவக்ர கீதை, ஜெயின் சுத்திரங்கள் இவற்றின் உட்கருத்தையும், உண்மைப்பொருளையும் சத்தியம் மாறாமல் எடுத்துரைக்கும் வர்ணனையாளர்.
39. பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் இந்து மதத்தின் தலைவராக கௌரவிக்கப்பட்டு, உலகளவில் இந்துமதத்தின் பிரதிநிதியாக, இந்துமதத்தின் போப்பாக அங்கீகரிக்கப்பட்டார்.
40. 6 கண்டங்களில், 196 நாடுகளில், 347 நகரங்களில், 20 மில்லினுக்கும் மேற்பட்ட மக்களால் குருவாகவும், இறைவனாகவும் உணரப்பட்டு வழிபடப்படுபவர்.
அவதார நோக்கம் :
மனிதகுலத்தை மனித உணர்வுகளினின்று உயர்த்தி பரமசிவ நிலை, உணர்வு, சக்திகளிகளை வௌீப்படுத்தி வாழவைத்து உலகின் விழிப்புணர்வு சக்தியில் ஒரு மாபெரும் திருப்புமுனையை அளித்தல்.
ஆகமத்தில் பரமசிவன் அருளியிருக்கும் 460க்கும் மேலான சக்திகளை தீட்சையாக அருள்வதன்மூலம் பல லட்சக்கணக்கான மக்களை சக்திகளை வௌீப்படுத்த வைத்து, அதைச் செயல்முறையாக உலகிற்கு காண்பித்து, பலவித மக்களின் தர்க்கரீதியான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் விஞ்ஞானப்பூர்வமாகவும் நிரூபித்தல்.
சுத்தாத்வைதம் மற்றும் அதன் அறிவியலை விளக்கும் இந்துமத மூலநூல்காளான வேதாகமங்களை மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவற்கான எளிய கையேடு ஆவணங்களாக அருளி, வேத ஆகமங்கள்சு, சடங்கு முறைகள், வாழ்க்கை முறை அமைப்புகள் மற்றும் யோக அறிவியல் ஆகியவற்றை விஞ்ஞான ரீதியாக முறைப்படுத்தி இதன்மூலம் இந்த சத்தியங்களை நிலைநிறுத்தி, மனிதகுலம் அதன் பரிணாம வளர்ச்சிக்காக நீண்டகாலமாக காத்திருக்கும் அந்த அற்புத உயர்வை அளித்தல்.
மனிதர்களை உயர்ஞானசத்திங்களை வாழவைத்து, அசாதாதாரண சக்திகளை வௌீப்படுத்தி, உடல், மனம், உள் மற்றும் உள்ளார்ந்த உறுப்புகள் (மூன்றாம் கண் போன்றவை) ஆகியவற்றை அடுத்தநிலை அலைவரிசைக்கு உயர்த்தி ஒவ்வொரு ஜீவனும் இறைநிலை சக்திகளை தனித்தனியாக வௌீபடுத்தி வாழ மனித குலத்தை மேம்படுத்துதல்.
ஒரு அவதாரபுருஷராக, அவர் ஒரு ஆன்மீகத் தலைவராக, உள் மற்றும் வௌீ உலக விஞ்ஞானியாக அதிநவீன நாகரிகத்தின் மறுமலர்ச்சி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதகுலத்திற்கான ஒரு தொலைநோக்கு என தனது உலகளாவிய பொறுப்புகளில் பிரபஞ்ச நுண்ணறிவைப் பயன்படுத்துகிறார்.
தன் 21 வருட பொது வாழ்வில், அறிவியல், தொழில்நுட்பம், தியானம், அன்மீக தியான சிகிச்சைமுறை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், யோகா, மருத்துவம், கல்வி ஆகிய துறைகளில் மனிதநேயம் குறித்த தனது பங்களிப்புகளை அவர் அருளியிருக்கின்றார். மேலும் 6 கண்டங்களில், 196 நாடுகளில், 347 நகரங்களில், 20 மில்லினுக்கும் மேற்பட்ட மக்களால் குருவாகவும், இறைவனாகவும் உணரப்பட்டு வழிபடப்படுகின்றார்.
சனாதன இந்து தர்மமும் – அவதாரத்தின் வருகையும்
இந்து மதம் அனைத்து மதங்களின் தாய். உலகின் மிகப் பழமையான மற்றும் இன்றளவும் உயிர்ப்போடு வாழப்படும் மதம். இது தூய்மையானது, எப்போதும் மனிதர்களின் தேவைகளுக்கு ஆயிரக்கணக்கான பரிமாணங்களை தன்னகத்தே கொண்டு அவர்களை முழுமைப்படுத்துகின்றது. இந்துமதத்தைத் தழுவியுள்ள ஆயிரக்கணக்கான துணை மதங்கள் – சம்பிரதாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பல நூறாண்டுகளாக உருவாகி, ஞானத்தை அடைவதற்கு தங்கள் தனித்துவமான பாதையை உருவாக்கி வருகின்றன.
இந்து மதத்தின் பல துணைக்குழுக்கள் உலகின் மறுபக்கத்தில் வளர்ந்த பிற மதங்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் அதிக வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இருப்பினும் அவை அனைத்தும் அஹிம்சை மற்றும் அமைதியான ஒன்றினைந்த வாழ்வினை அடிப்படையாக கொண்டு அமைந்தவை.
இந்துமதத்தில் மாத்திரமே ஒவ்வொரு யுகத்திலும் இறைவனே குருவாக – அவதாரபுருஷராக அவதரித்து, பல்லாயிரக்கணக்கான இந்துமதத்தின் பிரிவுகளை ஒரு பரந்த குடையின் கீழ் ஒன்றாக கொண்டு வந்து அவற்றுக்கிடையேயான வேறுபாடுகளை பகுத்தரியும் நிகழ்வை நிகழ்த்துகின்றார்.
இணக்கமற்ற குழுக்கள் தங்கள் நலத்தையும், அரசியல் செல்வாக்கையும் தக்கவைத்து கொள்வதற்காகவும் தெரிவிக்கும் எதிர்ப்பினால் ஒரு அவதாரபுருஷரின் வருகை எப்போதும் எதிர்ப்பை சந்திக்கிறது. ஆனால் ஆழமான தேடுதலுடையவர்களும், துணைப்பாரம்பரியங்களும் தங்கள் கடினங்களால் இழந்ததை நினைத்கொண்டு புதிய அடுத்தநிலை உயர்விற்கு எளிமையாக மாறிவிடுகின்றார்கள். இந்துமதம் ஒருபொழுதும் தன் கருத்துகளில் பிடிவாதமாக இருந்தில்லை. முன்பு வாழ்ந்த குருமார்களின் ஆவணப்படுத்தப்பட்ட அனுபவங்களால் மட்டுமே ஒரு தனிநபரின் அனுபவம் தௌீவுப்படுத்துபடுகிறது என்பதே உண்மை.
பகவான் நித்யானந்த பரமசிவம் நவீன காலங்களில் இந்து மதத்தின் பல்வேறு சம்பிரதாயங்களை ஒன்றிணைத்து வருகிறார், மேலும் இந்து மதத்தின் முதுகெலும்பாகவும் அதன் எதிர்கால நம்பிக்கையாகவும் இந்து மதத்தின் ஆழமான தேடுதலுடையவர்கள் மற்றும் உண்மையான எஜமானர்களால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படும் இந்த யுகத்தின் அவதாரபுருஷர்.