விதி வெல்லுமா? மதி வெல்லுமா?

OLYMPUS DIGITAL CAMERA

கேள்வி :

எனக்கு ஒரு விஷயம் நடக்குது…  கர்மத்தினாலா? அல்லது நான்தான் அதைச் செய்கின்றேனா?  இங்கு என்னுடைய வினை என்ன? 

சுவாமிஜி:   இது ஒரு அருமையான, முக்கியமான சத்தியம்,  விதி, மதி, சதி.

விதி வெல்லுமா? மதி வெல்லுமா? மதியையே மாற்றும் விதி சதியா? அல்லது விதியையே மாற்றும் மதி பதியா?  விதியையே மாற்றும் மதி பதியா?. மதியையே மாற்றும் விதி சதியா? 

அடிப்படையாகப் பார்த்தோமானால், இருப்பு அதாவது நம்முடைய உயிர், நம்முடைய உயிரின் நோக்கம், நமக்கு நாமே இருக்கின்ற சத்தியத்தன்மை, அதாவது என்னுடைய வாழ்க்கையின் நோக்கத்திற்கும், என்னுடைய செயல்களுக்கும் இடையில் இருக்கின்ற சத்தியத்தன்மை (Integrity) இருப்பென்று சொல்கிறேன். 

இந்த இருப்பும், இருப்பில் இருந்து இழுப்பும் எப்படியென்றால் வாழ்க்கையில் கற்பனைகூட இருப்பில் இருந்துதான் இழுப்பு நடக்க முடியும்.  கம்பர் அழகாக  ஒரு உவமை சொல்கிறார்.  “இருகை வேளத்து இராகவன் வந்தான்’.  இராமபெருமான் வருவதைக் கம்பநாட்டாள்வார் மிக அழகாகச் சொல்வார்.  இரண்டு கை இருக்கின்ற யானையைப் போல இருகை வேளத்து இராகவன் வந்தான்.  ஒரு தும்பிக்கை இருக்கின்ற யானையைப் பார்த்தால் அதைப்பற்றிய அறிவு, அதைப்பற்றிய தௌிவு இருந்தால் மட்டும்தான், அனுமானம் இருந்தால் மட்டும்தான் இருகை வேழன் செய்கின்ற இழுப்பை நாம் செய்ய முடியும்.  இருப்பு,  இருப்பு சார்ந்து மட்டும்தான் இழுப்பு நிகழும்.  ஒரு கை வேழம் என்கின்ற இருப்பு இருந்தால் மட்டும்தான் இருகை வேழம் என்கின்ற இழுப்பு நடக்க முடியும்.  இது கவிதை நிலை. 

இதுவே நம் நிஷவாழ்க்கை நிலையில், நம்முடைய இருப்பும், இருப்பு சார்ந்த நிலையில் இழுப்பும்தான் இந்த விதி, மதி.  பிரச்சினையே.  நம்முடைய இருப்பு. அதனுடைய ஆழம் சார்ந்து மட்டும்தான் நம்முடைய வாழ்க்கையின் இழுப்பு இருக்கும்.  இந்த இழுப்பில் இருக்கின்ற (Blind Spots)  தௌிவு இல்லாத நம்முடைய குறிக்கோளுக்கும், நம்முடைய செயல்பாட்டிற்கும் நேர்மைப்படாது இருக்கின்ற மன அமைப்புகள் செயல்பாடுகள்.  இது எதிர்வினையைக் கொண்டுவரும்பொழுது அதைத்தான் நாம் விதி என்று சொல்கின்றோம். 

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.  ஒரு காலை நம்மால் தூக்க முடியும்.  அது நம் சுதந்திரம்.  தூக்கியகாலை இறக்காமல், இன்னொருகாலைத் தூக்க முடியாது அது பந்தம்.  ஒரு சுதந்திரம் ஒரு பந்தத்தை அளிக்கின்றது.  எது சுதந்திரம், எது பந்தம்?்  எந்த சுதந்திரம்? நமக்கு வேண்டும், எந்தச் சுதந்திரம் பரவாயில்லை. இதைப்பார்த்துத் தான் வாழ்க்கை இயங்குகின்றது. 

சில இடங்களில் நாம் என்ன தேவையென்று முடிவு எடுப்பது நம் சுதந்திரம்.  ஆனால் அதன் எதிர்வினை, பக்க வினை எல்லாவற்றிற்கும் நாம்தான் பொறுப்பு.  அந்தப் பொறுப்பை நாம் மறந்துவிட முயற்சிக்கும்பொழுது, பொறுப்பு நம்மீது வலியத் திணிக்கப்படும்பொழுது, அதனுடைய எதிர்வினையும், பக்கவினையும் நம்மீது திணிக்கப்படும்பொழுது நாம் அதனை விதியென்று குற்றம் சாட்டுகின்றோம்.  உண்மையில் மதியைத் தாண்டிய விதி இல்லை.  மதியிலே நாம் மறந்துவிட்ட பாகங்கள் நாம் எதிர்பார்க்காத செயல்வினையையும், எதிர்வினையையும் கொடுக்கும்பொழுது நாம் அதனை விதியென்று நம்புகின்றோம்.  நம்புவது மட்டுமல்லாமல், அது விதி செய்த சதியென்று கோபமும் கொள்கின்றோம். 

உண்மையில் நம் விதிக்கும், விதி செய்த சதிக்கும்கூட நாமே பதியென்பதுதான் மதி. ஆழ்ந்து திரும்பிப் பாத்தோமானால், இந்த மொத்தக் கேள்விக்கும், நீங்கள் இப்போது கேட்ட இந்தச் சிந்தனையோட்டத்திற்கான தீர்வு என்னவென்றால், நம் குறிக்கு நாம் சத்தியத்தோடு இருந்தால் கோள் எல்லாம்கூட நம் குறிக்கு அருள் செய்யும். குறிக்கோளை நாம் அடைவோம். 

நம் குறிக்கு நாம் எவ்வளவு சத்தியமாய் இருக்கின்றோம்.  நம்முடைய நோக்கத்திற்கும், நம் தலைவனுக்கும், நம் குறிக்கோளுக்கும் நாம் எந்தளவு சத்தியத்தோடு இருக்கின்றோம் என்பதுதான்.  இந்த விதி, மதி, சதி, பதி மொத்த சுழலுக்குமான தௌிவு. 

எப்போதெல்லாம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறதென நினைக்கின்றோமோ…

அப்போதெல்லாம் நாம் செய்யவேண்டியது நமக்கும் நமது குறிக்கோளுக்கும் இடையில் இருக்கின்ற சத்தியத்தை ஆழமாக்குதல்.  அதை ஆழமாக்கிக்கொள்ளுதல்.  அந்தச் சத்தியத்தின் ஆழத்தை அதிகமாக்கிக் கொள்ளுதல். Blind Spots ஐக் குறைத்தல். இருளகற்றல்.  உண்மையில் பார்த்தால். இருப்பில் இருக்கின்ற ஓட்டைகள்தான் இழுப்பிற்குக் காரணம். 

இருப்பு தன்னுடைய சத்தியநிலை.  இழுப்பு கர்மம். 

இருப்பிலே இருள் இல்லாமல் இழுப்பு நடந்தால் அது இனிமையான தெய்வவாழ்க்கை. 

இருப்பிலே இருள் இருந்து இழுப்பு நடந்தால், வரப்போகின்ற செயல்வினையும், எதிர்வினையும் நாம் எதிர்பார்க்காததாக இருக்கும் என்பதால், அதை நாம் விதியென்று சொல்வோம்.  விதி செய்த சதியென்று பழிப்போம்.  நம் மதியெங்கே போனது என்று நம்மை நாமே பழித்துக்கொள்வோம்.

இந்த மொத்த…
விதி வலியதா?
மதி வலியதா? 
மதியையே மாற்றுகின்ற சக்தி விதியின் சதியா? 

அல்லது விதியையே மாற்றுகின்ற மதியே பதியா? என்கின்ற இந்த மொத்த சுழலுக்கும் கேள்விகளுக்கும் உண்மையான தீர்வு என்னவென்றால், நம் வாழ்க்கையில் நாம் எதைக் குறிக்கோளாகக் கொண்டோமோ அதற்கு நம்முடைய நேர்மையையும், சத்தியத்தையும் ஆழமாக்கிக் கொள்வது. 

அப்பொழுது இருப்பின் ஆழம் அதிகமாவதனால், இழுப்பின் அகலம் குறையும். 

இழுப்பின் அகலம் குறைவதனால், இருள் இல்லாத சிந்தை யோட்டம் இருக்கும். 

இருள் இல்லாத சிந்தனை  ஓட்டத்தினால், நாம் எதிர்பாராத, எதிர்நோக்காத வினைப்பயனும், செயல்பயனம், கருமப்பயனும் வராது. 

அதனால் வாழ்க்கையை விதியென்று பழிக்கவும் மாட்டோம்.  விதியின் சதியென்று இழிக்கவும் மாட்டோம்.  விதியென்றும், விதியின் சதியென்றும் பழிப்பதானாலும், இழிப்பதானாலும் நம்மை நாமே அழிக்கவும் மாட்டோம். 

Full Video Link:

https://www.youtube.com/watch?v=C7WnjnrOQkg&fbclid=IwAR1OLzxvx__G9UHdCuwo7IQSqJi6NEFuVF_q4xQZoMu65Z1fT04o_47lzaE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்