மிகப்பெரிய சேவை

நான் அவர்களை என்னைப்போல விளிக்கின்றேன். 
அவர்கள் என்னை அவர்களைப்போல விளிக்கின்றார்கள். 

விளிப்பினால் ஏற்படும் வலிப்பு எனக்கு இல்லாததினால்,
வலிக்க வைக்க வேண்டி விளித்தாலும்- வலியில்லை.

வலிப்பதற்காக அல்ல விழிப்பதற்காக அவர்களை நோக்கி விளித்தாலும், விழிக்க விரும்பாததனால்,  விளிப்பு அவர்களுக்கு வலிப்பாகத் தோன்றுகிறது. 

நீயே இறைவன் எனும் விளிப்பு…
வலிக்க வைப்பதற்காக அல்லாமல் விழிக்க வைக்க வேண்டிச் சொல்லப்பட்டாலும், 
விழிக்க விருப்பம் இல்லாத காரணத்தால்
வலிக்கச் சொல்லப்பட்டதாய் அவன் நினைப்பதனால்
மனிதனுக்கு இந்த உண்மையைச் சொல்லிப் புரியவைப்பதுதான் மிகப்பெரிய சேவை.

Full Video Link
https://www.youtube.com/watch?v=C7WnjnrOQkg&fbclid=IwAR1OLzxvx__G9UHdCuwo7IQSqJi6NEFuVF_q4xQZoMu65Z1fT04o_47lzaE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்