ஓரு நாடையாளும் தலைவர் எப்படி நடந்துகொள்ளவேண்டும்?

ஆத்மப்பிரியானந்த சுவாமி: 
சுவாமிஜி ஓரு நாடையாளும் தலைவர் எப்படி நடந்துகொள்ளவேண்டும்?.

சுவாமிஜி: 

ஆகா! ஆள்மைத் தன்மை.  இந்த ஆள்மைக்கு சதாசிவப்பெருமான் அளிக்கின்ற விளக்கம் என்ன? 

இருக்கின்றது எல்லாமே தன்னைப் பெருக்கிக்கொள்வது இயல்பு. ஒரு டாக்டர் நிறைய டாக்டர்களை உருவாக்குவார்.  ஒரு என்ஜினியர் நிறைய என்ஜினியர்களை உருவாக்குவர். ஒரு குரு நிறையக் குருமார்களை உருவாக்குவார்.  ஒரு  நடிகன் நிறைய நடிகர்களை உருவாக்குவார்கள்.  எதுவாக நாம் நமது இருப்பை உணர்கின்றோமோ அதை நாம் பெருக்குவோம்.  ஒரு மனிதன் தன்னை ஒரு மனிதனாக மட்டும் நினைத்தால், நிறைய மனிதர்களை உருவாக்குவார், ஒரு பன்றி நிறையப் பன்றிகளை உருவாக்கும்.  தன்னை எதுவாகத் தான் உணர்கின்றானோ, இருப்பைப் பெருக்குவது அந்த இயற்கைக்குப் பெயர்தான் ஆள்மை. 

நாடாள்மை தன்னுடைய இருப்பையே நாடாக, நாட்டு மக்களாக, இவர்களின் நலனாக உணர்கின்ற ஒருவன் அதைப் பெருக்குவதுதான் நாடாள்மை.  நம்மை நாம் எதுவாக உணர்கின்றோமோ அதைப் பெருக்குவது ஆண்மை.  தன்னைதான் எந்த இனமாய் எதுவாய் கருதுகிறானோ அதைப்பெருக்குவது ‘ஆண்மை’.  இனம் பெருக்குவது ‘ஆண்மை’. 

நாட்டையும், நாட்டின் நலனையும், குடிகளையும் குடிகளின் நன்மையையும் தானாய் உணர்ந்து அதைப் பெருக்குபவன் நாடாள்பவன்.  அதைப் பெருக்குவது நாடாள்மை. எவன் தன்னையும், தன் குடியையும், குடியின் கொற்றத்தையும், அவர்கள் சுற்றத்தையும், நன்மையையும் தானாய் உணர்ந்து பெருக்குகின்றானோ அவனே நாடாள்மை செய்பவன்.  இதுவே நல்ல நாடாள்மை. 

Full Video Link
https://www.youtube.com/watch?v=C7WnjnrOQkg&fbclid=IwAR1OLzxvx__G9UHdCuwo7IQSqJi6NEFuVF_q4xQZoMu65Z1fT04o_47lzaE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்