என் இனமே… உன் முக்கண் இனமாய் மாற வாராயோ!!!
கேள்வி :
சுவாமிஜி! மாணிக்கவாசகப் பெருமான் பெருமானைப் பார்த்து எழுதிய திருவாசகம் போல நீங்கள் பெருமானைப் பார்த்து திருவாசகம் எழுதினால் ஒரு நாலு வரிகள்.
சுவாமிஜி:: வாசகம்கூட ஆசகமும் யாசகமும் நிகழ்த்தும் சூசகம்தான்.
சோகஹமும், சிவோகஹமும் தாசோகஹமும், சாதாசோகஹமும்
மாறி மாறி
மனதிற்குள் கூறி விளைந்திட
யாசகமும் இல்லை…
ஆசகமும் இல்லை…
அம்பலவாணா வாசகம் ஏது செய்வேன்நான்.
என் சுவாசகத்து நீயுற்றதால்
சுவாசமே திருவாசகமாய் போனதால்
வாசத்திற்கு
சுவாசத்திற்கு,
விசுவாசத்திற்கு
வாசகம் ஏது.
என் வாசமும்
சுவாசமும்
விசுவாசமும்
உன் நேசமாய்ப் போனதால்
வாசகம் இந்த நேசகத்தை வாசிக்கவொண்ணாது
வாசிக்க முயற்சிக்கும்
ஆசிக்கவும் ஒண்ணாது…
ஆசிக்கச் செய்திடும்
யாசிக்கவும் ஆகாது…
வாசமே உன் வாசம்.
மரபுக்கவிதை வெண்பாவோ
புதுக்கவிதைப் பண்பாவோ
நான் மரபின் புதுமை.
சூரியனின் புதுமையும்
ரவியின் பழமையும் சுரியனின் புதுமையும் சேர்ந்ததென்பதனால், மரபுக்கவிதையின் வெண்பாவும்,
புதுக்கவிதையின் பண்பாவும் சேர்த்து இந்த வாசம் மலர்ந்தது.
கசடு தவத்தால் அறும். ஙனணம் நமனம் என அறும். யரலம் வழலம் என வளரும் என்பதனால் வல்லினமும், மெல்லினமும் இடையினமுமான என்னினமே உனை என்றென்றும் தன்னினமாய் நான் பார்க்க…
என் இனமே…
உன் முக்கண் இனமாய் மாற வாராயோ வந்தருள் தாராயோ.
Full Video Link
https://www.youtube.com/watch?v=C7WnjnrOQkg&fbclid=IwAR1OLzxvx__G9UHdCuwo7IQSqJi6NEFuVF_q4xQZoMu65Z1fT04o_47lzaE